search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan Parliament"

    இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. #SriLankanParliament #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி நியமித்தார். அப்போது முதல் இலங்கை அரசியலில் தினமும் அதிரடி திருப்பங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன.

    ராஜபக்சேவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சி தோல்வி அடைந்ததால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி தேர்தல் நடத்துவதாக சிறிசேனா அறிவித்தார்.

    ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் ரணில் விக்ரமசிங்கேவும், ராஜபக்சேவும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரி வருகின்றனர்.



    ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்த 122 உறுப்பினர்கள் மேல் முறையீட்டு கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு ராஜபக்சே பிரதமராக செயல்பட இடைக்கால தடை விதித்து கடந்த 3-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராஜபக்சே 4-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக இலங்கை பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

    இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற விவகாரங்கள் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இலங்கை பாராளுமன்றம் வருகிற 12-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை அலுவல்கள் முடிவு செய்யப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் தேதி முடிவு செய்யப்படவில்லை. ஒரு வேளை 12-ந்தேதியே கூட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #SriLankanParliament #RanilWickremesinghe
    இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார். #Rajapakse #srilankaparliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். இதனால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

    சிறிசேனாவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு பாராளுமன்றத்தில் போதிய மெஜாரிட்டி இல்லை. அதனால் அவர் மீது 2 தடவை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இருந்தும் ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.

    இந்த நிலையில் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ராஜபக்சே முதன் முறையாக டி.வி.யில் பேசினார். அப்போது அதிபர் சிறிசேனா நேர்மையான மற்றும் உண்மையான அரசை நடத்தி வருகிறார். ஆனால் இது இடைக்கால அரசுதான்.

    எனவே நிலையான அரசு அமைய வேண்டியது அவசியம். ஆகவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.

    இதற்கிடையே அதிபர் சிறிசேனா வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் பதவியில் ராஜபக்சேவை நியமித்தது ஏன் என விளக்கம் அளித்தார்.



    அவர் கூறும்போது, “ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகிய 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    ஆனால் பிரதமர் பதவி ஏற்க இருவரும் மறுத்து விட்டனர். எனவேதான் 3-வது நபரான மகிந்த ராஜபக்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது” என்றார். #Rajapakse #srilankaparliament
    இலங்கையில் பிரதமர் யார் என்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் மீண்டும் இன்று மாலை பாராளுமன்றம் கூடுகிறது. #Rajapaksa #SriLankanPolitics

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமரக இருந்த ரணில் விக்ரமசிங் கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந்தேதி நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது.

    ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்தார். அதற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. எனவே கடந்த வாரம் பாராளுமன்றம் கூடிய போது வரலாறு காணாத வகையில் மோதல் ஏற்பட்டது.

    இந்த களேபரங்களுக்கு மத்தியிலும் கடந்த 14 மற்றும் 16-ந்தேதிகளில் ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன. எனினும் அதை ஏற்க அதிபர் சிறிசேனா மறுத்து விட்டார். ரணில் விக்ரம் சிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க மறுத்து வருகிறார்.

    3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிபர் சிறிசேனா கூட்டினார். அதில் ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே மற்றும் அவர்களது கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா கலந்து கொள்ளவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டம் எவ்வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

     


    எனவே பிரதமர் யார் என்ற பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் இன்று மாலை மீண்டும் கூடுகிறது.

    அப்போது புதிய பிரதமர் யார்? என்ற பிரச்சினை மீண்டும் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சபையில் மீண்டும் மோதல், அடி-தடி ரகளை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதற்கிடையே பாராளுமன்றத்தில் கடந்த வாரம் போன்று மோதல் தொடர அனுமதித்தால் எம்.பி.க் களில் ஒருவர் அல்லது இருவர் கொல்லப்படலாம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர அச்சம் தெரிவித்துள்ளார்.

    ஹம்பாத்தோட்டை மாவட்டத்தில் இலங்கை சுதந்திரா கட்சியின் அமைப்பாளர்ளின் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய போது இத்தகவலை அவர் கூறினார்.

    இதற்கிடையே நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த லட்சுமன் கிரியெல்ல நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது “எங்கள் தரப்புக்கு (ரணில் விக்ரம சிங்கேவுக்கு) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க அதிபருக்கு மக்கள் உத்தரவு வழங்கவில்லை. புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். #Rajapaksa #SriLankanPolitics

    இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியவுடன் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அவர் வெளிநடப்பு செய்தார். #SriLankaParliament #RajapaksaWalkout
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அப்பதவியில் நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தையும் முடக்கிய அவர், பின்னர் பல்வேறு தரப்பினரின் வலியுறுத்தலை தொடர்ந்து நவம்பர் 14-ம்தேதி பாராளுமன்றத்தை கூட்டுவதாக அறிவித்தார்.  

    இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து அந்நாட்டின் பெரும்பான்மை பலமிக்க மூன்று பிரதான எதிர்க்கட்சிகள் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று கூறி அதிபரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது ரணில் கட்சி எம்பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர். அவை நடவடிக்கை தொடங்கியதும், அதிபரால் நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

    அதேசமயம் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. #SriLankaParliament #RajapaksaWalkout
    ×