search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quiz competition"

    • சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
    • தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம் என கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், பயின்றோர் கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கணினித்துறை பேராசிரியர் ஜென்ஸி வரவேற்று பேசினார். பயின்றோர் கழக செயலாளர் ஜோஸ்வா பாபு, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில் 'தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம்' என்றார்.

    தொடர்ந்து நடந்த வினாடி-வினா போட்டியில் 15 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்றில் 6 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டியை கணினித்துறை பேராசிரியர் கேசவராஜா நடத்தினார். இதில் நெல்லை சங்கர்நகர் ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தை பிடித்து, சிவந்தி கோப்பையை வென்றது. தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தது.

    பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அணிக்கு சிவந்தி சுழற்கோப்பையும், ரொக்கப்பரிசும் கல்லூரி நாள் விழாவில் வழங்கப்படுகிறது. முடிவில், தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

    • அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் பள்ளிக்களுக்கிடையே வினாடி-வினாப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
    • பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ வரவேற்று பேசினார்.

    புதுச்சேரி:

    அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் பள்ளிக்களுக்கிடையே வினாடி-வினாப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் படி இந்த ஆண்டு வினாடி-வினா போட்டி அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளி (சி.பி.எஸ்.இ) லூர்து உள் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 10 பள்ளிகளை சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இளநிலை,முதுநிலை என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டது. இளநிலை பிரிவில் முதல் இடத்தை செயிண்ட் பேட்ரிக் பள்ளி 2-வது இடத்தை செயிண்ட் ஜோசப் ஆப் குளூனி 3-வது இடத்தை பெத்தி செமினார் பள்ளி பிடித்தது. முதுநிலை பிரிவில் முதல் இடத்தை பெத்தி செமினார் பள்ளி 2-வது இடத்தை செயிண்ட் பேட்ரிக் பள்ளி 3-வது இடத்தை செயிண்ட் ஜோசப் ஆப் குளூனி பள்ளி பிடித்தது.

    பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ வரவேற்று பேசினார். அமலோற்பவம் பள்ளி நிறுவனர், தாளாளர், முதுநிலை முதல்வர் லூர்து சாமி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு ரூ.8 ஆயிரத்து 500 வழங்கி பாராட்டினார்.

    இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை கூர்மையாக்கி கொள்ளவும் வெளிபடுத்தவும் வேண்டும் என்று பங்கேற்ற மாணவர்கள் அனைவரையும் உற்சாக படுத்தினார். இந்த ஆண்டிற்கான வினாடி-வினா சுழற்கோப்பையை செயிண்ட் பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெற்றது. முடிவில் பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் செல்வம் பரிசு வழங்கினார்
    • சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி பல்கலைக்கழக துறைகளில் பயிலும் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.

    திருச்சி,

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட மையம் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி பல்கலைக்கழக துறைகளில் பயிலும் மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.

    இந்த போட்டிக்கு திருச்சி புனித வளனார் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பாலகிருஷ்ணன் நடுவராக கலந்து கொண்டார். சுமார் 80 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் பாரதிதாசன் மேலாண்மை பள்ளி மாணவர் அஜிஸ் முதலிடத்தையும், புவியியல் துறை மாணவி நிரஞ்சனா இரண்டாம் இடத்தையும், புவியியல் துறை மாணவர் ஷேக் பயாஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் கணேசன் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மைய ஒருங்கிணைப்பாளர் இலக்குமி பிரபா செய்திருந்தார்.

    • 3 பிரிவுகளில் நடந்த இந்த ேபாட்டி நடந்தது.
    • 30 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர்மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் 30 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கு கோத்தகிரி அரிமா சங்கத்தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். அரிமா சங்க செயலர் ரெட்டி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தின் உதவி முதல்வர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் கே.எம்.பெள்ளி வாழ்த்துரை வழங்கினார்.

    நெஸ்ட் அறக்கட்டளையின் செயலர் ராமதாஸ், பொரங்காடு சீமை நல சங்கத்தின் செயலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் போஜன் ஆசிரியர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    3 பிரிவுகளில் நடந்த இந்த ேபாட்டியில் அரவேணு, கேர்கெம்பை உயர்நிலைப்பள்ளிகள், ஹில்போர்ட் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கோத்தகிரி அரசு மேனிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகள் முதலிடத்தையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கேர்பெட்டா, கிரிஈஸ்வரா மெட்ரிக் பள்ளி கக்குச்சி, பாண்டியின் நினைவு மேனிலைப்பள்ளி, புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

    கிரீன்வேலி மெட்ரிக் மேனிலைப்பள்ளி, ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பெற்றனர். இந்த போட்டியில் முதல் 2 இடங்களைப்பிடித்த அணிகள் வருகிற 29-ந் தேதி ஊட்டியில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். முடிவில் பொருளாளர் பிரகாஸ் நன்றி கூறினார். 

    • திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் 9-வது புத்தகத்திருவிழா வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டட்லி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • போட்டியில் தமிழ், நிகழ்கால அறிவியல், விளையாட்டுக்கள், எளிய விளையாட்டுக் கணிதம், பொது அறிவு, சமூக அறிவியல், நிகழ்கால நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் 7 சுற்றுக்கள் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் 9-வது புத்தகத்திருவிழா வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டட்லி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை திண்டுக்கல் இலக்கியக்களம் நடத்தி வருகிறது. இதன் இறுதி போட்டியாக கல்லூரி மாணவர்களுக்கான விநாடி- வினா போட்டிகள் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட 15 கல்லூரி அணிகளில் 7 சுற்றுக்கள் முடிவில் ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி முதல் இடத்தையும் , பண்ணை பார்மசி கல்லூரி 2 ஆம் இடத்தையும் என்.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

    விநாடி வினா சுற்றுக்களை முனைவர். சரவணன், முனைவர் பாலசுந்தரி, கணேசன், ரவீந்திரன் குமாரமணி, ஆகியோர் நடத்தினர். இலக்கியக்கள நிர்வாகிகள் தங்கம், பாலாஜி சுப்ரமணியம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பிரித்திவிராஜ், சௌமியா ஆகியோர் கலந்து கொண்டு ஒருங்கிணைத்தனர்.

    போட்டியில் தமிழ், நிகழ்கால அறிவியல், விளையாட்டுக்கள், எளிய விளையாட்டுக் கணிதம், பொது அறிவு, சமூக அறிவியல், நிகழ்கால நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் 7 சுற்றுக்கள் நடைபெற்றது.

    திண்டுக்கல் இலக்கியக்கள துணைத்தலைவர் சரவணன் அனைத்தையும் ஒருங்கிணைத்தார்.

    ×