என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
புத்தக திருவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு விநாடி வினா போட்டி
- திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் 9-வது புத்தகத்திருவிழா வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டட்லி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
- போட்டியில் தமிழ், நிகழ்கால அறிவியல், விளையாட்டுக்கள், எளிய விளையாட்டுக் கணிதம், பொது அறிவு, சமூக அறிவியல், நிகழ்கால நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் 7 சுற்றுக்கள் நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் 9-வது புத்தகத்திருவிழா வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டட்லி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை திண்டுக்கல் இலக்கியக்களம் நடத்தி வருகிறது. இதன் இறுதி போட்டியாக கல்லூரி மாணவர்களுக்கான விநாடி- வினா போட்டிகள் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 15 கல்லூரி அணிகளில் 7 சுற்றுக்கள் முடிவில் ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி முதல் இடத்தையும் , பண்ணை பார்மசி கல்லூரி 2 ஆம் இடத்தையும் என்.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.
விநாடி வினா சுற்றுக்களை முனைவர். சரவணன், முனைவர் பாலசுந்தரி, கணேசன், ரவீந்திரன் குமாரமணி, ஆகியோர் நடத்தினர். இலக்கியக்கள நிர்வாகிகள் தங்கம், பாலாஜி சுப்ரமணியம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பிரித்திவிராஜ், சௌமியா ஆகியோர் கலந்து கொண்டு ஒருங்கிணைத்தனர்.
போட்டியில் தமிழ், நிகழ்கால அறிவியல், விளையாட்டுக்கள், எளிய விளையாட்டுக் கணிதம், பொது அறிவு, சமூக அறிவியல், நிகழ்கால நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் 7 சுற்றுக்கள் நடைபெற்றது.
திண்டுக்கல் இலக்கியக்கள துணைத்தலைவர் சரவணன் அனைத்தையும் ஒருங்கிணைத்தார்.