search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private company employee attack"

    நெட்டப்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 28). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலை கேண்டீனில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் கம்பெனியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை வீரமணி முந்திச் சென்றார்.

    இதில், ஆத்திரம் அடைந்த 4 பேரும் வீரமணியை பின்தொடர்ந்து சென்று கல்மண்டபத்தில் வைத்து மறித்து எங்களை எப்படி முந்திச்செல்லலாம்? எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் சாவியை எடுத்து வீரமணியை குத்தினார். காயம் அடைந்த வீரமணி இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

    நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விபல்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீரமணியை தாக்கியது நெட்டப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் என்பது தெரியவந்தது.

    மேலும் அவருடன் வந்தது பண்டசோழநல்லூரை சேர்ந்த பார்த்திபன் (27). நெட்டப்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் (20) மற்றும் அவரது நண்பர் கார்த்திக் என்பதும் தெரிந்தது.

    இதில், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கார்த்திக்கை தேடி வருகிறார்கள்.

    தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி காரை கடத்திச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை உடையார்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர் ஐம்பொன் நகைகள் செய்து விற்று வந்தார். இவரது நண்பர்கள் மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன்.

    இவர்களில் ரகுராமகிருஷ்ணன் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நம்பிராஜன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனிடையே சுரேஷ்குமார் சமீபத்தில் புதிதாக கார் வாங்கினார்.

    கார் வாங்கியதை கொண்டாடுவதற்காக பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார். இதற்காக சுரேஷ்குமார் தனது நண்பர்கள் ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோருடன் நெல்லை தாமிரபரணி ஆற்றுப் பகுதிக்கு காரில் சென்றார்.

    அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு 3 பேரும் மது அருந்தினர். பின்னர் ஆற்றில் குளித்தனர். இந்த வேளையில் அப்பகுதிக்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்கள் சுரேஷ்குமாரிடம் இங்கு எப்படி காரை நிறுத்தலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.

    பின்னர் சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் தடுத்தனர். உடனே ஆத்திரமடைந்த கும்பல் அவர்களையும் தாக்கியது. பின்னர் 3 பேரையும் இழுத்து சுரேஷ்குமாரின் காருக்குள் போட்டனர். பின்னர் சுரேஷ்குமாரிடம் இருந்த கார் சாவியை பறித்து 3 பேரையும் காருடன் கடத்தி சென்றனர். காரை ஒருவர் ஓட்ட, மற்ற 2 பேர் காரில் இருந்தனர். 3 பேர் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர்.

    சிறிது தூரம் சென்றதும் சுரேஷ்குமாரும், ரகுராமகிருஷ்ணனும் காரில் இருந்து குதித்து தப்பினர். நம்பிராஜனால் காரில் இருந்து குதிக்க முடியவில்லை. டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்றபோது நம்பிராஜனை காரில் இருந்து கீழே தள்ளிய கும்பல் காருடன் தப்பி சென்றது. கடத்தப்பட்ட காரில் சுரேஷ்குமாருக்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் இருந்தன. அவற்றுடன் கும்பல் தப்பிவிட்டது.

    இதனிடையே கும்பல் தாக்கியதில் காயமடைந்த சுரேஷ்குமார், ரகுராமகிருஷ்ணன், நம்பிராஜன் ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்குபதிவு செய்து காரை கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×