search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigate"

    கிருஷ்ணகிரி அருகே உடல் நலக்குறைவு காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    திருப்பத்தூர் மாவட்டம் இருனப்பட்டு திரு.வி.க. நகரை சேர்ந்தவர் உமாபதி (வயது 29). இவர் கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய அண்ணன் தளபதிகுமார் கிருஷ்ணகிரியில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். 

    சம்பவத்தன்று ஏட்டு தளபதி குமார், தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார். அந்த நேரம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டு சாவியை தம்பி உமாபதி கேட்டார். அவரிடம் சாவியை கொடுத்து விட்டு தளபதிகுமார் சென்றார். இதன்பிறகு உமாபதி வீட்டில் இருந்து தனது நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். 

    பிறகு மீண்டும் காவலர் குடியிருப்பில் உள்ள அண்ணனின் வீட்டிற்கு வந்தார். சிறிது நேரத்தில் அங்கு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நலக்குறைவு காரணமாக உமாபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாலக்காட்டில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1 கோடியே 39 லட்சத்து 43 ஆயிரத்து 600 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொர்ணூர் டி.எஸ்.பி. சனோஜ் தலைமையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் பட்டாம்பியில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது பாலக்காடு- குருவாயூருக்கு சென்ற சொகுசு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் வந்தவர்கள் பட்டாம்பியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 49), அவரது மனைவி நஜ்மா மற்றும் அவர்களது மகன் நஜிப் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை நடத்தினர்.

    காரில் ரூ.1 கோடியே 39 லட்சத்து 43 ஆயிரத்து 600 பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிட்ட பணம் குறித்து தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    அதியமான் கோட்டை அருகே ஓம்சக்தி வழிபாட்டு மன்றத்தில் உண்டியல் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகேயுள்ள தடங்கம் கிராமம். இந்த கிராமத்தில் ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்கள் ஓம்சக்திக்கு இருமுடி கட்டுதல் நிகழ்ச்சியும், அம்மனை பக்தர்கள் தினந்தோரும் தரிக்கும் நிகழ்ச்சி போன்றவை கோவில்களில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் நேற்று கோவில் பூஜை முடித்து விட்டு கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி சென்றனர்.

    இன்று காலை கோவிலை திறப்பதற்காக சென்ற போது கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கோவிலில் இருந்து உண்டியலை மாயமானது தெரிவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்ட போலீசார் திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது தடங்கம் கிராமம் அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் பதீகால் பள்ளம் செல்லும் வழியில் கோவில் உண்டியல் கிடந்தது தெரியவந்தது. அப்போது போலீசாரிடம் கோவில் நிர்வாகிகளும் சென்று பார்த்த போது ஓம் சக்தி கோவிலுக்கு சொந்தமான உண்டியல் என்பது தெரியவந்தது. இந்த உண்டியலை சில்லரை நாணயம் 50 ரூபாய் இருந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறும் போது கோவில் உண்டியல் ஆண்டுக்கு ஒரு முறையே திறக்கப்படும் ஒவ்வொரு ஆண்டுகள் திறக்கப்படும் போது உண்டியலில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் எடுக்கப்படும். கடந்த ஆண்டு பூட்டப்பட்டு உள்ள உண்டியல் ஓராண்டு மேல் உண்டியல் திறக்கப்படாமல் உள்ளதால் சுமார் 30 ஆயிரம் இருப்பதாக மன்ற நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை திருடிய நபர்கள் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    மேலும் இதேபோல் 2015, 2017 ஆகிய வருடங்களில் கோவிலில் திருடுபோய் இருந்தது குறிப்பிடதக்கது. #tamilnews
    உடுமலை அருகே அக்காள்-தம்பி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூலாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் ஜானகி (75). இவரது தம்பி நாகராஜன் (65). இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.

    நாகராஜன் தனது அக்காள் ஜானகி மீது அதிக பாசம் வைத்து இருந்தார். இந்த நிலையில் ஜானகி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதனை தனது தம்பியிடம் தெரிவித்த போது அவரும் தற்கொலைக்கு ஒத்துக்கொண்டார். நாகராஜன் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே சென்று இருந்தனர்.

    இந்த சமயத்தில் ஜானகியும், அவரது தம்பி நாகராஜனும் வி‌ஷம் குடித்தனர். இதில் இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து உடுமலை டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து 197 பேரை கைது செய்தனர். இதில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் அமைதியான சூழல் திரும்பி உள்ளது. இதைத்தொடர்ந்து வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ளன.

    கடந்த 22, 23-ந் தேதிகளில் நடந்த கலவர காட்சிகள் தொடர்பான வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. சுமார் 500 புகைப்படங்கள், தூத்துக்குடி ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தனிப்பிரிவு போலீசாக பணிபுரிந்து அனுபவம் மிக்கவர்களை அழைத்து வந்து புகைப்படங்களை காண்பித்து வருகின்றனர்.

    இதன்மூலம் ஏராளமானவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். இதில் அடையாளம் கண்டறியப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தனிப்படையினர் நேற்று அதிகாலை முதல் கைது நடவடிக்கைகளில் இறங்கினர்.

    அதன்படி போராட்டங்களை முன்னின்று நடத்திய 9 பேரை பிடித்து போலீஸ் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று மதுரையை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேரையும் போலீசார் பிடித்து வந்துள்ளனர்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாலும், மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாலும் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×