search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pillayarpatti vinayagar"

    பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி தைப்பூசம் வரை பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். பொதுவாக கார்த்திகை மாதம் அய்யப்ப பக்தர்களும், மார்கழி மாதம் முருக பக்தர்களும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர்.

    இதனால் பக்தர்களின் வசதிக்காக கற்பக விநாயகர் கோவிலில் கார்த்திகை மாதம் பிறந்தவுடன் பகல் நேரம் முழுவதும் நடை திறந்திருக்கும். அதன்படி இந்த ஆண்டும் கோவில் நடை தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

    தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி வரை இந்த நடை திறப்பு நீடிக்கும் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் டிரஸ்டிகள் கோனாப்பட்டு பி.அருணாசலம் செட்டியார், அரிமளம் என்.சிதம்பரம் செட்டியார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
    நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றி பெற வேண்டுமானால் விக்னேஸ்வரரை வழிபட வேண்டும். ஆனைமுகப் பெருமான் ஆலயங்களில் மட்டுமல்லாமல் அரசமரம், ஆறு, குளங்களின் கரைகளிலும்.. இன்னும் சொல்லப்போனால் வீதிகள் தோறும் கூட வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அப்படிப்பட்ட விநாயகப்பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில் தான். இந்தப் பிள்ளையார்பட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ளது. பிள்ளையார் பெயரிலேயே உள்ள ஊர் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

    இந்த ஆலயத்தில் வடக்குப் பார்த்து வீற்றிருந்து கற்பக விநாயகராக காட்சியளிக்கின்றார். எனவே, தான் வரத்தை அள்ளி, அள்ளித் தருகின்றார். ஒரு வரது ஜாதகத்தில் கேது திசை அல்லது ஏது திசை நடந்தாலும் ஆதரவுக்கரம் நீட்டுவது ஆனைமுகப்பெருமான் தான். அந்த ஆனைமுகப் பெருமான் கற்பக விநாயகராக பிள்ளையார்பட்டியில் காட்சிதருவதால், அங்கு சென்று வழிபடுபவர்களுக்கு கற்பக விருட்சமாக வாழ்க்கை மலர்கிறது. கனவுகள் அனைத்தும் நனவாகின்றது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியன்று அவரை பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால் தேவைகள் பூர்த்தியாகும். செல்வ வளம் பெருகும்.

    ×