search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PaRanjith"

    • பா.இரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக விக்ரம் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.

     

    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

    • இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம் 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் பல விருதுகளை குவித்துள்ளது.

    இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது.

     

    சூரரைப் போற்று

    சூரரைப் போற்று

    இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை குவித்துள்ளது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது.

     

    சார்ப்பட்டா பரம்பரை

    சார்ப்பட்டா பரம்பரை

    மேலும் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்திற்கு சிறந்த நடிகர் (ஆர்யா), சிறந்த பாடலாசிரியர் (அறிவு), சிறந்த துணை நடிகர் (பசுபதி) ஆகிய 3 விருதுகளை இப்படம் கைப்பற்றியுள்ளது.

    • முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் உள்ளிட்ட பலர் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

     

    இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசியதாவது, 2007 காலகட்டத்திலிருந்து ரஞ்சித்தை எனக்கு தெரியும். ஒரு டாக்குமெண்ட்ரிக்கு ஸ்டோரிபோர்ட் செய்யத்தான் வந்தார். நான் படம் செய்த போது நானே அவரை அழைத்தேன்.

    பா.இரஞ்சித் - வெங்கட் பிரபு

    பா.இரஞ்சித் - வெங்கட் பிரபு

     

    அவர் லிங்குசாமியிடம் தான் சேர்த்து விட சொன்னார். பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார். ரஞ்சித் படங்களை பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது. அவருக்குள் இவ்வளவு சிந்தனைகள் இத்தனை விசயங்கள், குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார். அவரது ஒவ்வொரு படமும் ஆச்சர்யம் தரும். இந்தப்பட டிரெய்லரே மிரட்டிவிட்டது. ஹாலிவுட் படம் போல் உள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.



    • முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
    • இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் உள்ளிட்ட பலர் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

     

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

    இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது, 'ஜெய்பீம்' இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது. நான் யாரையும் வளர்த்து விட வில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.

    வெங்கட் பிரபு சாரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். சென்னை 28 படம் தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது. சசி சார் நான் உதவியாளனாக இருந்த போது என்னை கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரை நான் மறக்க மாட்டேன். என் உதவியாளர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அது தான் காரணம். வெற்றிமாறன் ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர்.

     

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

    இந்த மூன்று பேரும் இங்கிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கலைப்புலி சாரிடம் கபாலி செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை மன உளைச்சலில் இருந்தேன்.

     

    ஆனால் அவர் தான் கூப்பிட்டு படத்தின் கலக்சன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். யாழி புரடக்சன் மனோஜ் மற்றும் விக்னேஷ் சினிமாவை சரியாக புரிந்து கொண்டவர்கள் அவர்கள் இன்னும் பெரிய சினிமாக்கள் எடுப்பார்கள் என நம்புகிறேன். இப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் மிக திறமையானவர்கள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள்.

     

    தொழில் நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரும் என்னை புரிந்துகொண்டு எனக்காக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. என் குடும்பம், மிளிரன், மகிழினி என்னை தொந்தரவு செய்யாமல் என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். என் அம்மா 15 வருடம் முன் "பார்த்து போயா ஜெயிச்சுட்டு வா" என்று அனுப்பினார். இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஜெயிச்சுட்டிருக்கேன்னு நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. காதல் சமூகத்தில் அத்தனை எளிதில்லை அதை இந்தப்படம் பேசும் என்றார்.



    • முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
    • இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

     

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

    நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

    இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நாளை (22.08.2022) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் எங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள் என்றும் இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

    • முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
    • இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

     

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

    மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

    இந்நிலையில் இப்படம் பற்றி இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது , "நட்சத்திரம் நகர்கிறது" காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும் பொழுது காதலாகத்தான் ஆரம்பமாகுது. அது குடும்பத்துக்கு தெரியும் பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது. இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிபிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை.

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

     

    இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி விவாதிக்கிற படம்தான் நட்சத்திரம் நகர்கிறது. இதில் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப் பற்றியும், திருநங்கையின் காதலைப் பற்றியும் பேசுகிறோம். பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்கக்கூடுகிற நடிகர்கள் அவர்களின் எமோஷ்னல், காதலை விவரிக்கிறது இந்தப்படம். ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப்பார்க்கிறது என இந்த படம் முழுக்க பேசுகிறோம். நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன் படம் நல்லா வந்திருக்கு.

    பா.இரஞ்சித்

    பா.இரஞ்சித்

     

    இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா? என்கிற கேள்விக்கு, எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூர நின்று பார்ப்பேன். இசைஞானியோடு இணைந்து வேலை செய்ய முடியும்னு இன்றுவரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு. அவர் பெரிய மேதை. இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது. எனக்கு வழிகாட்டிய என் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது. ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான் என்றார்.

    • முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
    • இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

     

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

    மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    நட்சத்திரம் நகர்கிறது

    நட்சத்திரம் நகர்கிறது

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்குற கதைகள் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ள இந்த டிரைலர் அனைவரின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பா.இரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது புதிய படத்தின் படப்பிடிப்பை பா.இரஞ்சித் தொடங்கியுள்ளார்.

    'அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 61' படத்தை இயக்குகிறார்.

     

    இதனிடையே பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை, சேத்துமான் உள்ளிட்ட படங்களை நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். தற்போது பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கின்றனர்.

     

    இந்த படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஓ2, தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார் எழுதுகின்றனர். மேலும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஜினியின் காலா படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தியேட்டருக்கு வந்து கொண்டாடி இருக்கிறார்கள். #Kaala #Rajini #Rajinikanth
    ரஜினி நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். 

    இப்படத்தில் ரஜினி படம் முழுக்க கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்தே வருகிறார். மும்பை தாதாவான அவரது இந்த தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் ரஜினியின் காலா தோற்றத்திலேயே தியேட்டர்களுக்கு வந்திருந்தனர்.



    கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து தியேட்டர்களில் அவர்கள் தெறிக்க விட்டனர். இதனால் தியேட்டர்களில் திரும்பிய திசையெல்லாம் கருப்பு வண்ணமாகவே காணப்பட்டது. இப்படி காலா உடையில் வந்த ரசிகர்கள் பலர் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த ‘‘காலா ரஜினி’’ கட்அவுட்டுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
    ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்க சென்ற இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்க வில்லை என்று கூறியிருக்கிறார். #Kaala #Ranjith #Rajini
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். காலா படத்தை தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர். ரசிகர்களின் உற்சாகத்தை இயக்குனர் பா.ரஞ்சித் திரையரங்குக்கு சென்றிருக்கிறார்.

    ரசிகர்களின் உற்சாகத்தில் திகைத்துப் போன இயக்குனர் ரஞ்சித், இப்படம் குறித்து கூறும்போது, ‘காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம். கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது’ என்றார்.
    ×