search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oddanchatram market"

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட் தென்தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக 60 சதவீத காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம், இடைய கோட்டை, அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், மூலச்சத்திரம், கேதையெறும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெங்காய சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த வருடம் பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் ஆர்வமுடன் வெங்காயம் பயிரிட்டனர். தற்போது ஆடி மாதத்திற்கு அவை அனைத்தும் அறுவடையாகி வருகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு 60 கிலோ கொண்ட பை 5 ஆயிரம் வந்துள்ளது.

    அதிக அளவு வெங்காய வரத்து உள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.10-ல் இருந்து ரூ.20 வரை மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 4 வருடங்களாக வறட்சியின் காரணமாக நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

    இந்த ஆண்டு காய்கறிகள் வரத்து அதிகரித்தும் விலை கிடைக்கவில்லை. மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாகவே உள்ளதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் பெரும் அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே அரசு தங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    கேரளாவில் நாளை ஸ்டிரைக் நடைபெற உள்ளதால் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தமடைந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தில் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வருகிறார்கள். இங்கிருந்து கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் கேரள மாநிலத்துக்கும் அதிக அளவில் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக 60 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தால் அபராத தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நாடு முழுவதும் நாளை ஸ்டிரைக் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

    கேரளாவில் லாரிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை. பொதுவாக காலையில் ஆர்டர் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் இரவு நேரங்களில் அனுப்பி வைக்கப்படும்.

    நாளை வேலை நிறுத்தம் என்பதால் இன்றே ஆர்டர்கள் குறைந்துள்ளது. இதனால் குறைந்த அளவு விவசாயிகளே வந்திருந்தனர்.

    வியாபாரிகள் கேரளாவில் இருந்து வராததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை மந்தமடைந்துள்ளது. சுமார் 60 சதவீத காய்கறிகள் விற்பனை சரிந்துள்ளது. இந்த மாதத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள், ஆடிப்பெருக்கு மற்றும் சனிக்கிழமை என அடுத்தடுத்து மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் காய்கறிகளின் விலையும் சரிந்தே காணப்படுவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம், புதுச்சத்திரம், அம்பிளிக்கை, கீரனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த தக்காளிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து இங்கிருந்து வெளியூர்களுக்கும் கேரளா உள்பட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது.

    கேரளாவில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தால் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அதிக அளவு தக்காளி தேக்கமடைந்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி தக்காளி ரூ.240 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

    ஆனால் தற்போது ரூ.100 முதல் ரூ.130 வரையே விலை கேட்கப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

    எடுப்பு கூலிக்கு கூட பணம் கிடைக்காததால் பலர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். தக்காளி விலை மேலும் குறையக்கூடும் என்பதால் வியாபாரிகள் செய்வது அறியாமல் உள்ளனர்.

    சின்ன வெங்காயமும் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் நாளை விடுமுறை அறிவித்துள்ளதால் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LorryStrike
    ஒட்டன்சத்திரம்:

    தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தை ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தையாகும். இங்கிருந்து கேரளா, மகாராஷ்ட்ரா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் வியாபாரிகளால் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    தற்போது நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் நாளை (25-ந்தேதி) விடுமுறை என காந்தி காய்கறி மார்க்கெட் உரிமையாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் லாரிகள் உரிமையாளர் நலச்சங்கம், வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆகிய சங்கங்கள் விடுமுறையில் பங்கேற்கும். நாளை நடைபெறும் கடை அடைப்பினால் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #LorryStrike

    லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரும் 25-ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #LorryStrike #OddanchatramMarket
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் நூற்றுக்கணக்கான லாரிகள் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 3 நாட்களில் குறைந்த அளவு வாகனங்கள் மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காய்கறிகள் தேக்கமடைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

    கேரளாவுக்கு காய்கறிகள் ஏற்றிச் சென்ற லாரி கிளீனர் கல் வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்து உயிரிழந்ததால் லாரி டிரைவர்களிடையே மேலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர் களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வரும் 25-ந் தேதி சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஒட்டன்சத்திரம் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.

    மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை வார விடுமுறை அளிக்கப்படும் நிலையில் வரும் 25-ந் தேதி விடுமுறை என்பதால் அன்று விவசாயிகள் யாரும் காய்கறிகள் கொண்டு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #LorryStrike #OddanchatramMarket

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பின் காரணமாக எலுமிச்சை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விற்பனை மந்தமானது. இதனால் எலுமிச்சை விலை குறைந்துள்ளது.

    கடந்த வாரம் ஒருகிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை மொத்த வியாபாரிகளால் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது எலுமிச்சை வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    தற்போது ஒருகிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டிலிருந்து தினமும் ஏராளமான டன் கணக்கில் எலுமிச்சை கேரளா மற்றம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

    விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வரத்து கூடி உள்ளதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    வரத்து குறைந்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான அத்திக் கோம்பை, அம்பிளிக்கை, சத்திரப்பட்டி, விருப்பாச்சி, புதுசத்திரம், லக்கையன்கோட்டை மற்றும் கீரனூர், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை இங்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் சின்னவெங்காயம் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. தற்போது சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காயம் விளைச்சல் இல்லை. எனவே குறைந்த அளவே ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரத்து உள்ளது.

    இதனால் நாட்டு சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.55 வரை விலை போகிறது. மைசூரில் இருந்து 10 டன் சின்ன வெங்காயம் இறங்கி உள்ளது.

    ஆனால் இந்த வெங்காயம் இருப்பு வைக்க முடியாது என்பதால் இதனை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நாட்டு வெங்காயம் வாங்குவதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதேபோல் முருங்கை விலையும் உயர்ந்து ரூ.50-க்கு விற்பனையானது. வரும் காலங்களில் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    காய்கறிகள் ஒரு கிலோவிற்கு பல்லாரி வெங்காயம் ரூ.17, பூசணிக்காய் ரூ.10, மிளகாய் ரூ.30, முட்டைகோஸ், கேரட் ரூ.20, இஞ்சி ரூ.60, கத்தரிக்காய் (20 கிலோ) ரூ.600-ல் இருந்து 700, புதினா ஒரு கட்டு ரூ.50, மல்லி ரூ.80, தக்காளி 14 கிலோ பெட்டி ரூ.180 என்ற விலையில் விற்பனையானது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவு காரணமாக ஒரு பெட்டி தக்காளி ரூ.180-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், தங்கச்சியம்மாபட்டி, வீரலப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, பெரியகோட்டை, தா.புதுக்கோட்டை, காப்பிளியபட்டி மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, 16புதூர், கொத்தையம், தேவத்தூர், கள்ளிமந்தையம் உள்பட 38 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தக்காளி நடவு செய்து, அறுவடை செய்து வருகின்றனர்.

    தற்போது தக்காளி வரத்து குறைவடைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு பெட்டி தக்காளி ரூ.120 முதல் ரூ.130 வரை ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்போது தக்காளி வரத்து குறைவு காரணமாக ஒரு பெட்டி தக்காளி ரூ.180-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கான டன் தக்காளி அனுப்பப்படுகிறது.

    ×