search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomato price fall"

    • தக்காளி வரத்து அதிகரிப்பு காரண மாக விலைக் கடுமையாக வீழ்ச்சியடை ந்துள்ளது.
    • ஒரு பெட்டி தக்காளி ரூ. 50 முதல் ரூ. 60 வரை விலை குறைந்துள்ளது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்தில் 2-வது மிகப்பெரிய மார்க்கெட் ஆகும். இங்கி ருந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களு க்கும் தக்காளி, சின்ன வெங்காயம் வெண்டை, கத்தரி, சவ்சவ், மிளகாய் உள்பட பல்வேறு காய்கறி கள் ஆயிரக்கண க்கான டன் கணக்கில் அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்பொழுது தக்காளி வரத்து அதிகரிப்பு காரண மாக விலைக் கடுமையாக வீழ்ச்சியடை ந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொ ள்முதல் செய்யப்பட்டது.

    கர்நாடகா, பொள்ளாச்சி, வடமதுரை, அய்யலூர் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் இருந்து அதிக அளவு தக்காளி வரத்து உள்ளதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி நுகர்வு குறைந்துள்ளதால் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ. 50 முதல் ரூ. 60 வரை விலை குறைந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி வியாபாரிகள் வராத காரணத்தினால் விவசாயி கள் கவலை அடைந்துள்ள னர். தற்போது மார்க்கெட்டு க்கு வந்து இறங்கிய தக்காளியை வியாபாரிகள் கூவி கூவி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்காளி பெட்டிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதாக வியா பாரிகள் கூறுகின்றனர்.

    அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளான வடமதுரை, மோர்பட்டி, தங்கமாபட்டி மற்றும் மலை கிராமங்களில் இருந்தும் விளைவிக்கப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.

    திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து தக்காளிகளை கொள்முதல் செய்கின்றனர்.

    கடந்த 4 ஆண்டுகளாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய அளவு மழை பொழிவு இல்லை. இந்த ஆண்டும் பிற பகுதிகளில் மழை பெய்தபோதும் அய்யலூர், வடமதுரை பகுதியில் மழை ஏமாற்றி சென்றது.

    இதனால் தக்காளி சாகுபடி செய்யும் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே சந்தைக்கும் குறைந்த அளவு தக்காளிகளே வந்திருந்தன. மேலும் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பறிப்பு கூலிக்குகூட விலை கட்டுபடியாகவில்லை என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பலர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு உள்ளனர். மேலும் கால் நடைகளுக்கு தீவணமாகவும் பயன்படுத்துகின்றனர்.

    ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரப்படி தேவன்பட்டி, குன்னூர், ராஜாதானி, பால கோம்பை, அணைக்காரப் பட்டி, புள்ளிமான்கோம்பை, ஏத்தக்கோவில் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த தக்காளிகளை ஆண்டிப்பட்டியில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து தினந்தோறும் ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி மார்க் கெட்டில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி மற்றும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையானது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.50-க்கும், ஒரு கிலோ ரூ.5 வரை விற்பனையாகிறது. இதனால் செடியில் இருந்து பறிக்கும் கூலிகூட கிடைக்க வில்லை.

    எனவே விவசாயிகள் பலர் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். வெளியூர் பகுதிகளில் இருந்து அதிக அளவு தக்காளி வரத்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே தக்காளி பயிரிட்டுள்ள உள்ளூர் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம், புதுச்சத்திரம், அம்பிளிக்கை, கீரனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த தக்காளிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து இங்கிருந்து வெளியூர்களுக்கும் கேரளா உள்பட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது.

    கேரளாவில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தால் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அதிக அளவு தக்காளி தேக்கமடைந்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி தக்காளி ரூ.240 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

    ஆனால் தற்போது ரூ.100 முதல் ரூ.130 வரையே விலை கேட்கப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

    எடுப்பு கூலிக்கு கூட பணம் கிடைக்காததால் பலர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். தக்காளி விலை மேலும் குறையக்கூடும் என்பதால் வியாபாரிகள் செய்வது அறியாமல் உள்ளனர்.

    சின்ன வெங்காயமும் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ×