search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nithyananda"

    • இந்தியாவை கைலாசா உயர்வாக கருதுகிறது.
    • ஐக்கிய நாடுகள் சபையில் நான் கூறிய கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா உருவாக்கியதாக அறிவித்த கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக கைலாசா நாட்டின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் 22-ந்தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நா.வுக்கான தூதர் என அழைக்கப்படும் விஜயபிரியா நித்யானந்தா மற்றும் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதிகள் சிலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் விஜயபிரியா நித்யானந்தா பேசும்போது, ஆன்மீக தலைவரான நித்யானந்தாவை கொடுமைப்படுத்துகின்றனர் என கூறியதோடு, அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.

    இந்நிலையில் ஐ.நா.வின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் தூதர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மனித உரிமை கூட்டத்தில் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் என யாராக இருந்தாலும் அந்த 2 நாள் கூட்டத்தில் பங்கேற்று தகவலை பதிவு செய்யலாம். கைலாசா சார்பில் அவர்கள் பேசிய உரை ஏற்று கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் விஜய பிரியா நித்யானந்தா தனது பேச்சு தொடர்பாக ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில், பகவான் நித்யானந்தா பரமசிவம் பிறந்த இடத்தில் சிலரால் துன்புறுத்தப்பட்டார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியாவை கைலாசா உயர்வாக கருதுகிறது. இந்தியாவை தனது குரு பீடமாக மதிக்கிறது என கூறியுள்ளார்.

    மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையில் நான் கூறிய கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டு சிலர் திரித்து வெளியிட்டுள்ளனர். நித்யானந்தா மற்றும் கைலாசாவுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

    • கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.
    • ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன.

    ஜெனீவா:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.

    அதில் ஜெனீவாவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன. அவர் சில கருத்துகளையும் பதிவு செய்திருந்தார்.

    இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து உள்ளார்.

    அதில் அவர், 'கடந்த பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர்.

    அவர்கள் கூறியதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

    • பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய கைலாசா பிரதிநிதிகள் அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கி உள்ளனர்.
    • கூட்ட அரங்கில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து அதனை வழிபடுவது போன்ற ஒரு புகைப்படத்தை கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

    கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடினார்.

    அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்ததோடு அந்த நாட்டுக்கான தனி கொடி, தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். மேலும் சமீபகாலமாக கைலாசா நாடு பல்வேறு வெளிநாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ இணைதள பக்கங்களில் புகைப்படங்கள் வெளியாகின.

    அந்த வகையில் சமீபத்தில் கைலாசா நாட்டை அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்ததாக கூறி அதுதொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான குழுவின் கூட்டமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் மா விஜயபிரியா நித்யானந்தா, கைலாசா லாஸ்ஏஞ்சல்ஸ் தலைவர் மா முக்திகா ஆனந்தா, கைலாசா செயிண்ட் லூயிஸ் தலைவர் மா சோனா காமத், மா நித்யா ஆத்மநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய கைலாசா பிரதிநிதிகள் அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கி உள்ளனர். முன்னதாக கூட்ட அரங்கில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து அதனை வழிபடுவது போன்ற ஒரு புகைப்படத்தை கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில கோவில்களை நித்யானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி விழாவை கைலாசாவில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார்.

    இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர் அங்கிருந்தபடி பல்வேறு நாடுகளிலும் உள்ள அவரது சிஷ்யர்கள், பக்தர்களிடம் பேசி வருகிறார்.

    இதுவரை கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற பல யூகத்தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது தொடர்பாக புதிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றில் தான் கைலாசா அமைந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    சமீபத்தில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், கைலாசா நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தாக கூறப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க் நகரம், கைலாசா இடையே ஒப்பந்தம் கையெழுத்திடுவது போன்ற புகைப்படங்களை அவரது சீடர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர்.

    ஏற்கனவே இதுபோன்று ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சில நகரங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் உள்ள நகரங்களுடன் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை செய்திருப்பதாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அடுத்தடுத்து பல நாடுகளிலும் உள்ள பெரிய நகரங்களுடன் உறவை மேம்படுத்தி வரும் நித்யானந்தா அந்த நாடுகளில் இருந்து கைலாசாவுக்கு முதலீடுகளை ஈர்த்து வருமானத்தை பெருக்குவதற்காக திட்டங்களையும் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில கோவில்களை நித்யானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல நாடுகளில் தனது ஆசிரமங்களை திறக்கவும் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    முதலீடுகள் மூலம் கைலாசாவில் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக திட்டங்களையும் அவர் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி விழாவை கைலாசாவில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

    கடந்த 5-ந்தேதி தைப்பூசம் கைலாசாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா இருக்கும் மகா கைலாசாவில் மட்டுமின்றி பெங்களூரு, திருவண்ணாமாலை உள்பட பல இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களிலும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை நித்யானந்தா அறிமுகப்படுத்தினார்.
    • நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகள் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

    அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

    இதைத்தொடர்ந்து நித்யானந்தாவை பிடிப்பதற்காக குஜராத் போலீசார், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இன்டர்போல் மூலமாக புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நித்யானந்தாவை தேடும் பணி நடைபெற்று வருவதாக குஜராத் போலீசார் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் நித்யானந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனாலும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார். அவர் எங்கிருந்து இந்த வீடியோக்களை வெளியிடுகிறார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

    இதற்கிடையே நித்யானந்தாவை கண்டு பிடிப்பதற்காக புளூகார்னர் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என இன்டர்போல் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்போலின் தலைமை செயலகத்தில் இருந்து 2 கடிதங்கள் வெளியாகி உள்ளது. அதில் நித்யானந்தாவுக்கு எதிராக எந்த நோட்டீஸ் அல்லது பிடிவாரண்டு எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கவில்லை என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நித்யானந்தா வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் வழக்கில் தேடப்படும் ஒருவரை விருந்துக்கு அழைத்ததற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
    • இங்கிலாந்தை சேர்ந்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் இந்த சம்பவத்தை மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிய நிலையில், கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிப்பு என்று தகவல்கள் வெளியானது.

    ஆனாலும் அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில் தீபாவளியின்போது லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் நித்யானந்தாவை விருந்துக்கு அழைத்ததாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஹவுஸ் ஆப் லாட்சில் உள்ள சோல்மண்டேலியில் இந்து போரம் ஆப் பிரிட்டன் என்ற அமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

    இதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. பாப் பிளாக்மேன் மற்றும் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் உறுப்பினர் ராமி ரேஞ்சர் ஆகியோருடன் நித்யானந்தா சார்பில் அவரது பிரதிநிதியான நித்ய ஆத்மயானந்தா பங்கேற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் வழக்கில் தேடப்படும் ஒருவரை விருந்துக்கு அழைத்ததற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், நித்யானந்தா மற்றும் அவரது அமைப்பை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்து போரம் ஆப் பிரிட்டன் அமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் உதவினேன் என ராமி ரேஞ்சர் கூறி உள்ளார்.

    இதற்கிடையே இங்கிலாந்தை சேர்ந்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் இந்த சம்பவத்தை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆதாரமற்ற வகையில் நித்யானந்தா குறித்து இவ்வாறு செய்தி வெளியாகி உள்ளது. அவரை குறித்து இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
    • அதிகபட்ச பிரமோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது உள்ளிட்ட 8 சாதனைகளை நித்யானந்தா படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில் கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அதாவது ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் வாசித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, தனி ஒருவரின் அதிகபட்ச புத்தகங்கள் (1,123 புத்தகங்கள்), அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், அதிகபட்ச பிரமோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது (7,407 தலைப்புகளில் 289,928 மணி நேரம்) உள்ளிட்ட 8 சாதனைகளை நித்யானந்தா படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • நித்யானந்தா பலருக்கு தர்ம ரட்சகர் விருது அறிவித்துள்ளார்.
    • தற்போது இவர் இயக்குனர் பேரரசுக்கு இந்த விருதை அறிவித்துள்ளார்.

    சாமியார் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விஜயதசமியையொட்டி கைலாசாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு விருது அறிவித்திருந்தார்.


    பேரரசு

    இதில் பா.ஜனதாவின் ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்ம ரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்தார். இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அடுத்ததாக இந்த தர்ம ரட்சகர் விருது இயக்குனர் பேரரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நித்யானந்தா கூறுகையில், "உங்களுடைய இந்து மதப்பற்றும் இந்து மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும் களம் காணுவதும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரும் பணிகளை நன்கு அறிவேன்.


    நித்யானந்தா

    உங்களுடைய எல்லா திரைப்படத்தின் தலைப்புகளுமே ஆன்மிக ஸ்தலங்களின் பெயர்களாக தான் இருக்கும். உங்களுடைய இந்து மதப்பணி மிகப்பெரிய பணி. அதற்காக தலைவணங்குகிறேன். உங்களோடு என்றும் தோல் கொடுத்து நிற்பேன். நானும் கைலாசமும் நீங்கள் செய்யும் இந்து மதப் பணிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்." என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • நித்யானந்தா சமீபகாலமாக வீடியோவில் நேரலையில் தோன்றி பேசியபோதும் கூட தனது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக கூறவில்லை.
    • நித்யானந்தா நீண்டகாலமாக சிறுநீரக பிரச்சினையால் தவித்து வருவதாகவும், மொரீசியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தும் அவரது உடலில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாலியல், கடத்தல் வழக்குகளில் கர்நாடகா, குஜராத் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா நாடு என பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டதாக தகவல் பரவியது.

    உடனே அதற்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்ட நித்யானந்தா, தான் சமாதி நிலையில் இருப்பதாக கூறினார். சுமார் 3 மாதங்களுக்கு பிறகு குருபூர்ணிமா நாளில் மீண்டும் நேரலையில் தோன்றி சத்சங்க உரையாற்றினார். அப்போது, நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக கூறினார்.

    இந்நிலையில் நித்யானந்தாவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதற்காக அவருக்கு உடனடியாக அரசியல் புகழிடம் வழங்குமாறு இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு நித்யானந்தா சார்பில் கைலாசா நாட்டின் வெளியுறவு மந்திரி நித்ய பிரேமாத்மா ஆனந்தசுவாமி என்பவர் கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியானது.

    அந்த கடிதத்தில் நித்யானந்தாவுக்கு தேவையான எந்த மருத்துவ சாதனத்தையும் வாங்குவதற்கு கைலாசா நாடு தயாராக உள்ளதாகவும், அவருக்கு இலங்கையில் ஆகும் மருத்துவ செலவுகளை கைலாசா நாடு ஏற்கும் எனவும், அதற்கு நன்றி கடனாக கோடிக்கணக்கில் மதிப்புள்ள மருத்துவ சாதனங்களை உங்கள் மக்கள் நலனுக்கு விட்டு செல்வோம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    நித்யானந்தா சமீபகாலமாக வீடியோவில் நேரலையில் தோன்றி பேசியபோதும் கூட தனது உடல்நிலையில் என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாக கூறவில்லை. அவர் நீண்டகாலமாக சிறுநீரக பிரச்சினையால் தவித்து வருவதாகவும், மொரீசியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தும் அவரது உடலில் பெரிய முன்னேற்றம் இல்லை எனவும் கூறப்படுகிறது.

    மேலும் தோல் சம்பந்தப்பட்ட சில தொற்று நோய்களாலும் அவர் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்காக தான் அவர் மருத்துவ உதவி கேட்டு இலங்கையை நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது நித்யானந்தா பக்தர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மீண்டும் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீப காலமாக நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது.
    • அது உண்மையில்லை என்றும் நான் மீண்டு விட்டேன் என்றும் கூறிய அவர் வழக்கம்போல வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. 2010-ம் ஆண்டில், நித்யானந்தா ஆசிரமத்தின் பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பனால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ராமநகர் 3-வது மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கில் 2010-ல் இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு, ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தாவுக்கு, சம்பந்தப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

    பின்னர், நித்யானந்தா நாட்டை விட்டு ஓடியதால் ஜாமீனை ரத்து செய்யக்கோரி லெனின் கருப்பன் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு 2020-ல் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மேலும், 2019-ம் ஆண்டு முதல், நித்யானந்தாவுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டும், நித்யானந்தா ஆஜராகவில்லை.

    பின்னர் நாட்டைவிட்டு நித்யானந்தா தப்பிவிட்டதால் அவரின் ஜாமீனை ரத்துசெய்யக்கோரி, மீண்டும் லெனின் கருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் கடந்த 2020-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. நித்யானந்தா மீதான பாலியல் வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பலமுறை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் நித்யானந்தா தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் இந்த பாலியல் தொல்லை வழக்கு ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி.

    மேலும் இந்த வழக்கின் மறு விசாரணையை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார் . ஏற்கனவே பாலியல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நித்யானந்தா மீது சட்டங்கள் பாய்ந்து கைது செய்ய இந்தியாவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவான நித்யானந்தா தனது ஆதரவாளர்களுக்கு அவ்வப்போது வீடியோ பதிவு மூலம் தரிசனம் அளித்து வருகிறார்.

    அவர் இந்தியாவிற்கு உள்ளேயே தலைமறைவாக இருந்து வருகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆஸ்திரேலியா நாட்டுக்கு அருகே உள்ள ஒரு தீவில் அவர் இருப்பதாகவும், அந்த தீவுக்கு கைலாசா என பெயரிட்டு தனி நாடாக உருவாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கைலாசா நாட்டுக்கு என பணம் மற்றும் அனைத்து சேவைகளையும் கொண்டு வந்துள்ளதாகவும் கூறி, இது தொடர்பாக ஒரு போட்டோ, வீடியோ, அந்த நாட்டு தங்க டாலர் உட்பட எல்லாவற்றையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

    யாருக்கெல்லாம் கைலாசா வர விருப்பம் உள்ளதோ அவர்கள் எல்லாம் தன்னிடம் குடிமக்களாக சேரலாம் என்றும், அப்படி தன் நாட்டுக்கு வந்தால் அவர்களை இலவசமாக அழைத்து செல்வதாகவும், கூறியிருந்தார். கைலாசாவில் டீ கடை வைத்து பிழைக்க விரும்புபவர்களும்கூட விண்ணப்பிக்கலாம் என்று நித்யானந்தா கூறியதை கேட்டு, பலர் கைலாசாவுக்கு செல்ல ஆர்வம் காட்டினார்கள்.

    கைலாசாவுக்கு போய், ஏதாவது வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்றும் முடிவெடுத்தனர். ஆனால் அந்த கைலாசா தீவு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளதால் அவரை கைதுசெய்ய போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். முதல்கட்டமாக பிடதி ஆசிரமத்தின் நிர்வாகம் வழியாக நித்யானந்தாவுக்கு வாரண்டை அனுப்பிவைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டு உத்தரவு அடுத்த மாதம்(செப்டம்பர்) 23-ந்தேதி வரை செல்லும் என்பதால் அதற்குள் அவரை கைது செய்ய பெங்களூர் போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர்.

    சமீப காலமாக நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என்றும் நான் மீண்டு விட்டேன் என்றும் கூறிய அவர் வழக்கம்போல வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனி மனிதராக வறுமையை பற்றி கவலைப்படாமல் குழந்தைகளுக்கு வேதம் கற்றுத்தரும் ஆயிரம் பேருக்கு தலா ரூ.1 லட்சத்துடன் ‘கைலாசா வேதவித்யா சிகாமணி’ விருது வழங்கப்படும்.
    • சமூக வலைதளங்கள் மூலம் இந்து மதம் சார்ந்த சேவை செய்யும் யூ-டியூபர்கள் 1,008 பேருக்கு ரூ.1 லட்சத்தோடு கைலாசா விருதும் வழங்கப்படும்.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் நேரில் தோன்றினார்.

    தொடர்ந்து நேற்று முன்தினமும் நேரலையில் தோன்றிய அவர் சாதுர்மாசி எனப்படும் இன்னும் 4 மாதங்களில் உலகம் முழுவதும் சேவை ஆற்ற பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாக கூறினார்.

    மேலும் கைலாசா ஒன்றால் மட்டுமே சேவை ஆற்ற முடியாது என்பதால், அதுபோன்ற சேவை செய்கின்ற பல பேரை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்க இருப்பதாக அறிவித்தார்.

    அதன்படி உலகம் எங்கும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் ஏழை-எளியவர்களுக்கு அன்னதானம் செய்யும் ஆயிரம் பேருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் 'அன்னலட்சுமி விருது' வழங்கப்படும் என அறிவித்தார்.

    இதே போல விலைவாசி உயர்வு உச்சமாக இருக்கும் இந்த கால கட்டத்தில் 1 ரூபாய்க்கு இட்லி, 10 ரூபாய்க்கு தோசை என குறைந்த விலைக்கு உணவு பொருட்கள் விற்பவர்கள் ஆயிரம் பேரை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துடன் 'அன்னதாத்தா விருது' வழங்கப்படும்.

    இந்து மதத்திற்காக உழைத்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு பொருளாதார உதவியும், விருதும் வழங்க உள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

    தனி ஒரு குடும்பமாக இருந்து வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டாலும், பாரம்பரிய பணியை தொடரும் கிராம கோவில்களில் பணியாற்றும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், கிராம பூசாரிகள் என குறைந்தபட்சம் 1,008 பேருக்கு 'கைலாசா ஆச்சார்யா' விருதுடன் ரூ.1 லட்சம் பணம் வழங்கப்படும்.

    பல கிராமங்களில் தனி ஆளாக தேவாரம், திருப்பாவை, திருவெண்பாவை, ராமாயணம் கற்றுத்தருபவர்கள், நாடகம் மூலம் கொண்டு சேர்ப்பவர்களை கண்டறிந்து ஆயிரம் பேருக்காவது ரூ.1 லட்சம் பணத்துடன் கூடிய 'கைலாசா ஞானசிரோமணி' என்ற விருதை வழங்குகிறோம்.

    அடுத்து, தனி மனிதராக வறுமையை பற்றி கவலைப்படாமல் குழந்தைகளுக்கு வேதம் கற்றுத்தரும் ஆயிரம் பேருக்கு தலா ரூ.1 லட்சத்துடன் 'கைலாசா வேதவித்யா சிகாமணி' விருது வழங்கப்படும்.

    சமூக வலைதளங்கள் மூலம் இந்து மதம் சார்ந்த சேவை செய்யும் யூ-டியூபர்கள் 1,008 பேருக்கு ரூ.1 லட்சத்தோடு கைலாசா விருதும் வழங்கப்படும்.

    கைலாசா தான் மட்டும் சேவை செய்வதோடு நிறுத்தாமல், சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்துகின்ற பணியில் ஈடுபடுமாறு கைலாசாவின் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இன்னும் சில பிரிவுகளை சேர்க்கிறோம். குறைந்த விலையில் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களை கண்டறிந்து 'கைலாய வைத்திய சிகாமணி' விருதுடன் தலா 1 லட்சம் வழங்கப்படும்.

    இந்து மதத்திலே மிகப்பெரிய ஒரு விஷயம் ஸ்தல யாத்திரை. கிராமங்களில் சிறுசிறு குழுக்கள் அமைத்து யாத்திரைக்கு அழைத்து செல்லும் குழு தலைவர்கள் ஆயிரம் பேருக்கு ரூ.1 லட்சத்துடன் 'கைலாசா யாத்திர சிகாமணி' என்ற விருதை வழங்குகிறோம்.

    இதுபோன்று 21 வகை பிரிவுகளை சேர்ந்த சேவையாளர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்காவது ரூ.1 லட்சத்துடன் கூடிய கைலாசா விருதுகளை இந்த 4 மாத சாதுர்மாசியத்துக்குள் வழங்கிவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மொத்தத்தில் 21 பிரிவுகளில் ரூ.200 கோடிக்கு மேல் நித்யானந்தா அறிவித்துள்ள பரிசுத் தொகை திட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லிங்கமே தெய்வம், பொங்கலே பிரசாதம் என வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். கைநீட்டிய இடத்தில் சோறு, கால் நீட்டிய இடத்தில் தூக்கம் என இருந்த சாமியார் நான்.
    • பரமசிவன் பேரருளால் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தேன். இன்று ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பின் கடந்த 13-ந் தேதி குருபூர்ணிமா அன்று சமூக வலைதளங்களில் மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மீண்டும் நேரலையில் தோன்றி சத்சங்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மகா கைலாசாவில் இருந்து பரமசிவன் நமக்கு நேரடியாக வழங்கும் சத்சங்க உரை. சமாதி பழகுங்கள். இந்த 4 மாதமும் நிர்வகல்ப சமாதி தியான முறையை பழகி மற்றவர்களுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம்.

    சமாதி பழகுகின்ற செய்முறை பற்றி பல சத்சங்கங்களை ஏற்கனவே அளித்திருக்கிறேன். அவை அனைத்தும் தொகுக்கப்பட்டு கைலாசாவின் அதிகாரப்பூர்வ இளணய தள பக்கத்தில் உள்ளது.

    இந்த சாதுர்மாசிய விரதத்தில் 1 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்க வேண்டும். எனவே 1 கோடி மக்களுக்கு சமாதி நிலையை பயிற்று விக்க வேண்டும்.

    இந்து விரோத தீய சக்திகள் என்னை தாக்கி அழிக்க முயன்றபோது, நான் கைலாசாவை உருவாக்கிவிடவில்லை. ஆனால் அப்போது அதற்கான கனவு கண்டு கொண்டிருந்தேன்.

    லிங்கமே தெய்வம், பொங்கலே பிரசாதம் என வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். கைநீட்டிய இடத்தில் சோறு, கால் நீட்டிய இடத்தில் தூக்கம் என இருந்த சாமியார் நான். பரமசிவன் பேரருளால் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தேன். இன்று ஏர்லைன்ஸ் வைத்திருக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன்.

    ஒரு மனிதன் பழிதீர்க்கும் மனோசக்தியை வளர்த்து கொண்டால் போதும். உங்களை புகழ்கிறவர்கள் தான் திருடர்களாக இருப்பார்கள். எனவே உங்களை புகழ்கிறவர்களை உங்கள் அருகில் வைத்து கொள்ளாமல் இருந்தாலே வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்பது தான் குருமார்கள் எனக்கு கொடுத்த வரம்.

    பத்தமடை பாய், 6 மண்டி சாக்கு பைகள், நாச்சியார் கோவில் விளக்கு, ஸ்ரீரங்கம் உலக்கை உள்ளிட்ட 10 பொருட்களை தான் நான் என் தனிப்பட்ட வாழ்க்கையில் இப்போதும் பயன்படுத்தி வருகிறேன்.

    பசி தாங்கும் உடல் சக்தி, பழி தாங்கும் மனோ சக்தி, பக்தி தாங்கும் உயிர் சக்தி இந்த மூன்றும் தான் எனது குருமார்கள் எனக்கு பயிற்றுவித்தது. அதை கடைபிடித்து வருகிறேன்.

    உலகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் 1,000 பேருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு கைலாசா சார்பில் வழங்கப்படும்.

    இதற்கு எனது சீடர்கள் மட்டுமல்ல தனிப்பட்ட நபர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்தால் போதும்.

    தேர்ந்தெடுக்கப்படுவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டின் பண மதிப்பில் அவர்களுக்கு ரொக்கமாக ரூ.1 லட்சத்துடன் கைலாசாவின் அன்னலட்சுமி விருதும் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×