என் மலர்
இந்தியா
ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சில் நித்யானந்தாவின் 8 சாதனைகள் இடம்- கைலாசா தகவல்
- கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
- அதிகபட்ச பிரமோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது உள்ளிட்ட 8 சாதனைகளை நித்யானந்தா படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சாமியார் நித்யானந்தா சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் வாசித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, தனி ஒருவரின் அதிகபட்ச புத்தகங்கள் (1,123 புத்தகங்கள்), அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், அதிகபட்ச பிரமோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது (7,407 தலைப்புகளில் 289,928 மணி நேரம்) உள்ளிட்ட 8 சாதனைகளை நித்யானந்தா படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Next Story








