search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murder of a teenager"

    • முன் விரோதம் ஏதும் இருந்ததா? விசாரணை
    • செல்போன் மூலம் துப்பு துலக்கப்படுகிறது

    வேலூர்:

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபனிஷன்னி (வயது 34), கூலித்தொழிலாளி.

    இவர், காட்பாடி காந்திநகர் பகுதியில் கடந்த 22-ந் தேதி இரவு கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ரத்தவெள்ளத் தில் கிடந்தார். தகவலறிந்த விருதம்பட்டு போலீ சார் அங்கு சென்று, உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனை யில் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    வட மாநில வாலிபர் சாவு குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் வாலிபருக்கு முன் விரோதம் ஏதும் இருந்ததா என விசாரித்தனர்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட வாலிபருடன் செல் போனில் அடிக்கடி பேசியது யார் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன்பிடித்த உ விபரீதம்
    • உறவினர்கள் மறியலால் பரபரப்பு

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரி பாவேந்தர் நகரை சேர்ந்தவர் குண்டு என்கிற சுப்பிரமணி (வயது 58). திமிரி அடுத்த விலாரி ஏரியில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளார்.

    மீன் பிடித்தகராறு

    இவருக்கு தெரியாமல், திமிரி ராமப்பாளையம் வேலாயுதபாணி தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் கலையரசன் ( 21 ), இவரது தம்பி வசந்த், தனுஷ், கோபி மற்றும் சிலர் இரவு நேரங்களில் விளாரி ஏரி யில் மீன் பிடித்து வந்தததாக கூறப்படுகிறது.

    இதை சுப்பிரமணி தரப்பினர் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கலையரசன் தரப்புக் கும் சுப்பிரமணி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு திமிரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வீட்டில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த தாக கடந்த 24 ந் தேதி குண்டு ( எ ) சுப்பிரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதையடுத்து கடந்த ஒருமாதமாக இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை 11.45 மணிய ளவில் கலையரசன் , தம்பி வசந்த் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுப்பிரமணியின் உறவினரான திமிரி ராமபாளையம் தெரு வில் உள்ள தினகரன் ( 45 ) வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அங்கிருந்த தினகரனின் மகன் அசோக்குமார் (25), உறவினர்கள் தினேஷ் (24), சேகர் (60) ஆகியோருக்கும், கலையரசன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார், தினேஷ் ஆகியோர் கலையரசனை கத்தியால் வெட்டினர்.

    வாலிபர் கொலை

    இதில் பலத்தவெட்டு காயம் அடைந்த கலையரசனை அக்கம், பக்கத்தினர் மீட்டு திமிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு கலையரசன் இறந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் தரப்பினர் அசோக்குமார் வீட்டை சூறையாடினர். வெளியே இருந்த காய்கறி கடை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 3 டூவீலர்களை அடித்து நொறுக்கினர். மேலும் அங்குள்ள 3 க்கும் மேற்பட்ட வீடுகளையும் சூறையாடினர். ஒரு சிலர் திமிரி-ஆரணி சாலை யில் அரசு பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    தகவல் அறிந்த ராணிப் பேட்டை டிஎஸ்பி பிரபு, திமிரி இன்ஸ்பெக்டர் லதா, ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் காண் டீபன், ராணிப்பேட்டை இன்ஸ் பெக்டர் பார்த்தசாரதி, திமிரி சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற் றும் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இன்று காலையில் ஆற்காடு-ஆரணி செல்லும் சாலையில் கலையரசனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியலை கைவிட்டனர்.

    இந்த கொலை சம்பந்தமாக தினகரன், அவரது மகன் அசோக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

    • தலைமறைவாக உள்ளவரை தேடும் பணி தீவிரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் எட்வின். ரெயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இவரது இளைய மகன் இமானுவேல்(வயது 23). காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அரக்கோணத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று திரும்பவில்லை இமானுவேல் மர்ம நபர் ஒருவர் வெட்டிக் கொன்றார்.

    இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எஸ்.பி. தீபா சத்யன் உத்தரவின் பேரில் தனிப்பட அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இமானுவேலின் நண்பர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர் பிடிப்பட்டால் கொலையாளி யார் என்பதும் எதற்காக கொலை செய்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • 2 தனிப்படை அமைக்கப்பட்டது
    • ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது22). பிரபல ரவுடியான இவர் நேற்று உடல் துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்குமார் கடைசியாக செல்போனில் யாருடன் பேசினார்.சரத்குமாரின் செல்போன் எந்த எந்த இடங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.

    சரத்குமாரை சக நண்பர்களே தீர்த்து கட்டினார்களா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தனிப்படையினர் அரக்கோணம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சரத்குமாரை அழைத்துச் சென்றவர்களை அவரது பெற்றோர் பார்த்து உள்ளனர் அவர்கள் தெரிவித்த அங்கு அடையாளங்களை வைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சரத்குமாரின் பிணம் இன்று பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதனால் பாணாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×