என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் கொலையில் தீவிர விசாரணை
    X

    வாலிபர் கொலையில் தீவிர விசாரணை

    • 2 தனிப்படை அமைக்கப்பட்டது
    • ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது22). பிரபல ரவுடியான இவர் நேற்று உடல் துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் அரக்கோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்குமார் கடைசியாக செல்போனில் யாருடன் பேசினார்.சரத்குமாரின் செல்போன் எந்த எந்த இடங்களில் எடுத்துச் செல்லப்பட்டது.

    சரத்குமாரை சக நண்பர்களே தீர்த்து கட்டினார்களா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தனிப்படையினர் அரக்கோணம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சரத்குமாரை அழைத்துச் சென்றவர்களை அவரது பெற்றோர் பார்த்து உள்ளனர் அவர்கள் தெரிவித்த அங்கு அடையாளங்களை வைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சரத்குமாரின் பிணம் இன்று பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதனால் பாணாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×