என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் கொலையில் நண்பருக்கு தொடர்பா?
- தலைமறைவாக உள்ளவரை தேடும் பணி தீவிரம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் எட்வின். ரெயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இவரது இளைய மகன் இமானுவேல்(வயது 23). காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அரக்கோணத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று திரும்பவில்லை இமானுவேல் மர்ம நபர் ஒருவர் வெட்டிக் கொன்றார்.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி. தீபா சத்யன் உத்தரவின் பேரில் தனிப்பட அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இமானுவேலின் நண்பர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவர் பிடிப்பட்டால் கொலையாளி யார் என்பதும் எதற்காக கொலை செய்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.






