search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Senthil Balahi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
    • தமிழக வரலாற்றில் ஒரே நிகழ்ச்சியில் இவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    கோவை:

    கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டு வரும் மேடை, பந்தல் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாளை நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். தமிழக வரலாற்றில் ஒரே நிகழ்ச்சியில் இவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    மத்திய அரசுக்கு மின் கட்டண நிலுவை தொகை ரூ.70 கோடி செலுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசு கொடுக்க வேண்டிய பில் தொகை தாமதம் ஆகும்போது மத்திய அரசு தடை ஏற்படுத்துகிறது.

    ஆனால் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய தொகை பலவற்றில் நிலுவை உள்ளது. அவற்றை எல்லாம் உரிய காலத்தில் கொடுப்பதில்லை.

    மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனிப்பட்ட அமைப்பு. அதன் அதிகாரங்களை பறிக்க கூடிய செயலில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. இதற்காகத்தான் பாராளுமன்றத்தில் மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

    மின் கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம், கபட நாடகம் என்று கூறும் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதும் கபட நாடகமா என்பதை விளக்க வேண்டும். கர்நாடகா, குஜராத் மாநிலங்களின் மின் கட்டணத்தையும், இங்குள்ள மின் கட்டணத்தையும் பார்த்து விட்டு அவர் பேச வேண்டும்.

    இவை குறித்து பலமுறை கேட்டும் அண்ணாமலை பதில் சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×