search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur Dam"

    • அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதியுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரிஒழுங்காற்று குழு உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு இன்னும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    • அணைக்கு வினாடிக்கு 2227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    பருவமழை சரியாக பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.16 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது.
    • கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதால் நீர்மட்டம் குறைந்தது. இதனால் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2899 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.

    ஆனால் இந்த உத்தரவுப்படி நேற்று கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. அதே போல் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் திறக்கவில்லை.

    கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை வினாடிக்கு 244 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 505 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 567 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

    • கடந்த திங்கட்கிழமை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினித்குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
    • மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 52.43 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இதையடுத்து குடிநீர் மற்றும் மீன்வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனாலும் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் மட்டுமே சொற்ப அளவில் வெளியேற்றப்பட்டு வந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள விவசாயிகள், அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினித்குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அடுத்து வரும் நாட்களுக்கான தண்ணீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

    இதில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 13 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 3 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தமாக 16 டி.எம்.சி. தண்ணீரை திறக்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் கர்நாடகா தரப்பில் தங்கள் மாநிலத்தில் மழை பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் எனவே தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினர்.

    2 தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்கு நவம்பர் 1-ந்தேதியான இன்று முதல் வருகிற 15 நாட்களுக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. ஆனால் வழக்கம்போல் கர்நாடக அணைகளில் இருந்து இன்றும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 196 ஆக இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெறும் 300 கனஅடியே திறக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.44 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வாய்க்காலில் வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 52.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 968 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அணையில் இருந்து காவிரியில் 500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 3 ஆயிரத்து 454 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 794 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 51.83 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 52.12 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    • அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 18.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3 ஆயிரத்து 454 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 51.83 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 18.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. மேலும் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் கொடுக்காததாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    இதையடுத்து கடந்த 10-ந்தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால்அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 207 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதே போல் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந் தேதி 30 அடியாக குறைந்தது. இதனால் குடிநீர் மற்றும் மீன் வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதே போல் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காணப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த 10-ந் தேதி 30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 50.50 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 855 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

    குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.50 அடியாக இருந்தது.
    • அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதியும், பல்வேறு மாவட்டங்கள் குடிநீர் வசதியும் பெற்று வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை மூலம் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் தேக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் 103 அடிக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகா அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக குறைந்தது.

    இதையடுத்து குடிநீர் தேவை மற்றும் மீன் வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 496 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும். அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாய் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணைக்கு வினாடிக்கு 262 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 49.38 அடியாக அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 49.38 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 19 அடி உயர்ந்து உள்ளது.

    நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 4 ஆயிரத்து 334 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.

    இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்தின் காரணமாக இன்று காலை 48.86 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.32 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து கடந்த 10-ந்தேதி காலையுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    அதே நேரம் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 288 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2369 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1733 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கபினி அணையின் நீர்மட்டம் 74.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 2482 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2033 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    ×