என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 794 கன அடியாக சரிவு
- அணையில் இருந்து காவிரியில் 500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 3 ஆயிரத்து 454 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 794 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 51.83 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 52.12 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
Next Story






