search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur Dam"

    • மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உள்ளது.
    • குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைந்தது. இதே போல் கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும், மழை இல்லாததாலும் நீர்வரத்து குறைந்தது.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று 61 அடியாக உயர்ந்து உள்ளது. சுமார் 31 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதே போல் அணைக்கு வினாடிக்கு 3332 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதியுடன் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து இந்த மாதம் திறந்து விட வேண்டிய தண்ணீரையும் திறந்து விடவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 3297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 3320 கனஅடியாக அதிகரித்து உள்ளது. அதே போல் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • அணையில் இருந்து காவிரியில் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
    • இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிந்துள்ளது. நேற்று 5 ஆயிரத்து 415 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 297 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று 59.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 60.70 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    • நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 415 கனஅடியாக குறைந்தது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கடந்த ஒரு வார காலமாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 415 கனஅடியாக குறைந்தது.

    அணையின் நீர்மட்டம் 59.73 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 24.48 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வரும் நிலையில் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 445 கனஅடி வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 8 ஆயிரத்து 424 கனஅடியாக குறைந்தது.

    இதே போல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58.15 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
    • அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

    மழையின் காரணமாக நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று காலை அது 10 ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரித்தது. மாலையில் அது 14 ஆயிரத்து 971 கனஅடியாக அதிகரித்தது.

    இன்று காலை 8மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 57.18 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 445 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரிப்பு.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதே போல் தென் மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் நீர்வரத்தும் குறைந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதே போல் இந்த மாதம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து இன்று வரை திறந்து விடப்படவில்லை.

    இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது. மேலும் அணைக்கு வரும் நீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 10ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இதே போல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.82 அடியாக உயர்ந்தது. கடந்த மாதம் 10-ந் தேதி அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்ட போது 30 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 250 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அைடந்து உள்ளனர்.

    • தமிழகத்துக்கு இந்த மாதம் திறந்து வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடவில்லை.
    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து கடந்த மாதம் 10-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதற்கிடையே தமிழகத்துக்கு இந்த மாதம் திறந்து வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடவில்லை. ஆனாலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த ஒருமாதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 53.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2702 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
    • தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதற்கிடையே இரவில் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 238 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இதே போல் அணையின் நீர்மட்டமும் 53.53 அடியை எட்டியது. தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 9.80 மி.மீ. மழை பெய்தது.

    • அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதியுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரிஒழுங்காற்று குழு உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு இன்னும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    • அணைக்கு வினாடிக்கு 2227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    பருவமழை சரியாக பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.16 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×