என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 60.7 அடியாக உயர்வு
- அணையில் இருந்து காவிரியில் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
- இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிந்துள்ளது. நேற்று 5 ஆயிரத்து 415 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 3 ஆயிரத்து 297 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று 59.73 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 60.70 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.






