search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mettur Dam water inflow decrease"

    கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.

    இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை 2 ஆயிரத்து 886 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது. நேற்று 20 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 14 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.

    நேற்று 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டு நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வழக்கமான பாதையில் பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அணைக்கு இன்று காலை 41 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கர்நாடக அணைகளில் இருந்து 2லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை இந்த ஆண்டு 3முறை நிரம்பியது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு 65ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. மாலை இது 60ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இன்று காலை இது மேலும் குறைந்து 41ஆயிரத்து 283கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று 60ஆயிரத்து 800கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இன்று காலை இது 41ஆயிரத்து 341கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.19 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ளதால் இன்று பிற்பகல் முதல் நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 89 ஆயிரத்து 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120.31 அடியாக இருந்தது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 57 ஆயிரத்து 464 கன அடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.

    கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நேற்று 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் இன்று 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரிநீர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று காலை மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 89 ஆயிரத்து 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 120.31 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து 88 ஆயிரத்து 518 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த மேட்டூர் தங்கமாபுரி பட்டணம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் வசித்து வந்தவர்கள் திருமண மண்டபங்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஒகேனக்கல்லில் நேற்று காலை ஒரு லட்சத்து 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 80ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகள், நடை பாதையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பொதுமக்கள் காவிரி கரையோரம் நின்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள். #MetturDam
    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பின.

    இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று காலை 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கலை கடந்து நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 33 ஆயிரத்து 941 கன அடி தண்ணீர் வந்ததால் அணையில் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதற்கிடையே கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று காலை 27 ஆயிரத்து 528 கன அடி தண்ணீர் வந்த நிலையில் அணையில் இருந்து 26 ஆயிரத்து 425 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    கபினி அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரத்து 750 கன அடியாக இருந்ததால் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.


    மேட்டூர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 14 ஆயிரம் கன அடியாக இருந்தது. 16 கண் பாலம் வழியாக 89 ஆயிரம் கன அடியும், நீர் மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கன அடி என மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்மட்டம் இன்று காலை 120.30 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விடுமுறைநாளான நேற்று ஏராளமான பொது மக்கள் திரண்டு காவிரி ஓடும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தனர்.

    நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இந்த வீடுகளில் வசித்தவர்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை 1 லட்சத்து 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி வெள்ளம் செல்கிறது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கரையில் நின்று வேடிக்கை பார்த்து செல்கிறார்கள். #MetturDam
    ×