search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 41ஆயிரம் கனஅடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 41ஆயிரம் கனஅடியாக குறைந்தது

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. அணைக்கு இன்று காலை 41 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கர்நாடக அணைகளில் இருந்து 2லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை இந்த ஆண்டு 3முறை நிரம்பியது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு 65ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. மாலை இது 60ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இன்று காலை இது மேலும் குறைந்து 41ஆயிரத்து 283கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று 60ஆயிரத்து 800கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இன்று காலை இது 41ஆயிரத்து 341கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.19 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு தொடர்ந்து குறைக்கப்பட்டு உள்ளதால் இன்று பிற்பகல் முதல் நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. #MetturDam
    Next Story
    ×