search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meena"

    • மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.

    தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


    அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

    ரஜினி

    ரஜினி

    நடிகர் ரஜினிகாந்துடன் நடிகை மீனா அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் எஜமான் படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
    • நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே வித்யாசாகர் இறப்புக்கு காரணம் என தகவல்.

    தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


    இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவருக்கு நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து உள்ளது.

    அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போனது. மாற்று நுரையீரலுக்காக சென்னை உட்பட பல இடங்களில் மூளைச்சாவு அடைந்தவர்கள் உறுப்புகள் கிடைக்கிறதா என்று தேடும் பணியில் மீனாவுக்கு நெருக்கமானவர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் உறுப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.

    குஷ்பு 

    குஷ்பு 

    மீனாவின் கணவர் இறந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.திரையுலகினர் பலரும் தங்கள் ஆறுதலை மீனாவிற்கு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை குஷ்பு, மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு குறித்து சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மீனாவின் கணவர் சாகர் இறந்த செய்தி அறிந்து மனமுடைந்து போனேன். நுரையீரல் பிரச்சனையால் அவர் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். அவரை இழந்து வாடும், மீனா மற்றும் அவரது குழந்தைக்கு என் ஆழ்ந்த இரங்கல். வாழ்க்கை குரூரமானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    மேலும் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என ஊடகத்தினரை கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. அவர் 3 மாதங்களுக்கு முன்னர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அப்போது அவரது நுரையீரலில் பாதிப்பு தீவிரமானதால் தான் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். அதனால் இப்போது அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் எனக்கூறி அச்சத்தை கிளப்ப வேண்டாம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



    வெங்கடேஷ், மீனா நடிப்பில் உருவாகி இருக்கும் திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் திரிஷ்யம். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

    திரிஷ்யம் 2

    திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்- மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தத் தகவலை நடிகர் வெங்கடேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
    தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகை மீனா, என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது என்று கூறியிருக்கிறார். #Meena
    நடிகை மீனா தென்னிந்திய நடிகர்களில் பெரும்பாலனவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அவரிடம் நீங்கள் ஜோடி சேர ஆசைப்பட்டு நிறைவேறாத ஹீரோ யார்? என்று கேட்டதற்கு ‘அரவிந்த்சாமிகூட மட்டும்தான் நான் நடிக்கலை.

    ‘ரோஜா’ படம் ரிலீஸான நேரத்துல அவருக்குப் பெரிய கிரேஸ் இருந்தது. அப்போ அவர்கூட ஒரு படத்துல நடிக்கும் வாய்ப்பு வந்தும், கால்ஷீட் பிரச்சினையால் அது கைகூடலை. ‘மிஸ் பண்ணிட்டோம்’னுதான் இப்போதும் தோணும். விஜய் சார்கூட நிறைய படம் ஹீரோயினா கமிட் ஆகி, நடிக்க முடியாம போயிடுச்சு. ‘தெறி’ பட ஷூட்டிங் டைம்ல, ‘வேணும்னேதானே என்கூட நடிக்காம இருந்தீங்க’னு கேட்டுட்டு, ‘அப்போ உங்க டைரி தெரியும், சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்’னு சிரிச்சார்.

    அவர்கூட நடிக்காத குறையைப் போக்கவே, ‘ஷாஜகான்’ படத்துல விஜய் சார்கூட ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். ‘ஃப்ரெண்ட்ஸ்’ (தேவயானி ரோல்), ‘ப்ரியமுடன்’ (கெளசல்யா ரோல்), ‘வாலி’ (சிம்ரன் ரோல்), ‘தேவர் மகன்’ (ரேவதி ரோல்), ‘படையப்பா’ (ரம்யா கிருஷ்ணன் ரோல்), ‘பொன்னுமணி’ (சௌந்தர்யா ரோல்) என்று நான் கதைகேட்டு, நடிக்க முடியாம போன படங்களின் பட்டியல் ரொம்ப நீளம்’ என்று கூறி உள்ளார். வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி கேட்டதற்கு ‘ரொம்ப துயரமான வி‌ஷயம்.

    எல்லா துறைகள்லயும் பெண்களுக்கு பிரச்னை உண்டு. நான் எதிர்கொள்ளவில்லை என்றாலும், என் காலத்திலேயும் இந்தப் பிரச்சினை இருந்தது. வக்கிர புத்தியுடைய ஆண்கள் திருந்தணும். அவங்க ஒரு பொண்ணுகிட்ட ‘டீல்’ பேசுறதுக்கு முன்னாடி, தங்களுக்கும் மனைவி, மகள் இருக்காங்கனு உணரணும். திறமைக்கான வாய்ப்பை வேறு எந்த சமரசமும் இல்லாமல், பெண்கள் போராடிப் பெறணும்’ என்று பதில் அளித்துள்ளார்.
    ×