search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கடேஷ்"

    • விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சைந்தவ்'.
    • இந்த படத்தை சைலேஷ் கொலானு இயக்கி இருக்கிறார்.

    விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சைந்தவ்'. 'ஹிட்வெர்ஸ்' படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் வெங்கட் பொயனபள்ளி பிரமாண்டமாக தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை கேரி பி.ஹெச். கவனித்துள்ளார்.


    சைந்தவ் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'சைந்தவ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நடிகர் வெங்கடேஷ் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர்.
    • இவர் மதுரை தபால் தந்தி நகரில் வசித்து வருகிறார்.

    மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் (50). இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மதுரையில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி அதன் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

    வெங்கடேஷ் கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இது அவரது மனைவி பானுமதிக்கு தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டித்து வந்ததாகவும், இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    வெங்கடேஷ்

    இந்நிலையில் வெங்கடேஷ், தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதையடுத்து இருவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கணவர் மீதான கோபத்தில் பானுமதி தனது வீட்டில் கார் ஓட்டுனராக பணி யாற்றிய மோகன் என்பவர டம் வெங்கடேசின் காலை உடைத்து வீட்டிலேயே இருக்க வைக்க ஆலோசனை கேட்டுள்ளார்.

    இதையடுத்து ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வைத்த நிலையில் கால்களை உடைக்க ராஜ்குமார் ஒரு லட்சம் கேட்டதால், பா.ஜ.க. பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் உறவினரான வைரமுத்து என்பவரிடம் பானுமதி உதவி கேட்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் பா.ஜ.க பற்றி தவறாக பதிவிட்ட நடிகர் வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.


    துளசி- தமிழ்சங்கு

    பா.ஜ.க-வைச் சேர்ந்த 28-வது வார்டு மண்டல தலைவர் மலைசாமி, பா.ஜ.க. கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ், வைரமுத்து ஆகியோர் கடந்த ஜூன் 15-ந் தேதி இரவு நாகனாகுளம் அருகே வைத்து வெங்கடேஷின் இரு கால்களையும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெங்கடேஷ் தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேஷின் மனைவி பானுமதி (48), ராஜ்குமார் (37), மோகன் (40), வைரமுத்து (38), மலைசாமி (35), ஆனந்தராஜ் (37) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தானர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவர் துளசி மற்றும் பா.ஜ.க. பிரமுகர் தமிழ்சங்கு ஆகிய 2 பேரையும் தற்போது போலீசார் கைது செய்தனர்.

    ×