search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manchester United"

    டோட்டன்ஹாம் பின்கள வீரர் டோபி அல்டர்வெய்ரெல்டை 40 மில்லியன் பவுண்டுக்கு வாங்கிவிட வேண்டும் என்பதில் மான்செஸ்டர் யுனைடெட் உறுதியாக உள்ளது.
    ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. 2018-19 சீசனுக்கான வீரர்கள் டிரான்பஸ்ர் விண்டோ நாளை முதல் திறக்கப்படுகிறது. நாளையில் இருந்து ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்க விரும்பும். அதேபோல் தங்கள் அணிக்கு தேவையில்லை என்று நினைக்கும் வீரர்களை வெளியே அனுப்பும் ஒப்பந்ததை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டும்.



    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணியில் பின்கள வீரராக விளையாடும் டோபி அல்டர்வெய்ரெல்டுவை வாங்குவதில் தீர்மானமாக உள்ளது. இதற்காக 40 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கிறது.

    எப்படியும் டோட்டன்ஹாம் டோபி அல்டர்வெய்ரெல்டுவை தந்துவிடும் என்பதில் மான்செஸ்டர் யுனைடெட் உறுதியாக உள்ளது. டோட்டன்ஹாம் இவருடைய இரண்டு கால ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. ஒருவேளை இப்போது அனுப்பாவிடில் ப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது. இதனால் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அவரை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் டோபி அல்டர்வெய்ரெல்டுவை செல்சியா, பிஎஸ்ஜி, பார்சிலோனா அணிகளும் வாங்குவதற்கு விரும்புவதாக கூறப்படுகிறது.
    கால்பந்தின் ஸ்டிராங்கஸ்ட் பிராண்டில் ரியல் மாட்ரிட்டை முந்தி முதல் இடத்தை பிடித்தது பார்சிலோனா. #Barcelona #realMadrid
    ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகள் ரியல் மாட்ரிட், பார்சிலோனா. களத்தில் இரண்டு அணிகளும் எலியும் பூனையுமான மோதிக்கொள்ளும். களத்தில் மட்டுமல்ல வருமானம் ஈட்டுதல், ரசிகர்களை கவர்தல் போன்றவற்றிலும் இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும்.

    ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக்கில் தொடர்ச்சியாக 3-வது முறை கோப்பையை வெல்வதற்கு தயாராகி வருகின்றன. அதேவேளையில் பார்சிலோனா லா லிகா டைட்டிலை வென்றதுடன், கோபா டெல் ரே டைட்டிலையும் வென்றுள்ளது.

    பிராண்ட் நிதி ஆலோசனை நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் கால்பந்தின் பலமான அடையாளத்தில் (strongest football brand) ரியல் மாட்ரிட் அணியை பார்சிலோனா முந்தியதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

    தற்போது பார்சிலோனா சில புதிய ஸ்பான்சர்களை பிடித்துள்ளது. அதில் ஜப்பான் இ-வணிகம் நிறுவனமான ராகுட்டேனும் ஒன்று. பார்சிலோனா இந்த நிறுவனத்துடன் நான்கு வருடத்திற்கு 246 மில்லியன் யூரோவிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.



    பார்சிலோனாவின் பிராண்ட் வலிமை 95.4-ல் இருந்து 96.6-க்கு உயர்ந்துள்ளது. அதேவேளையில் ரியல் மாட்ரிட் அணியின் பிராண்ட் வலிமை 96.4 ஆகவே உள்ளது. உலகின் பலமான கால்பந்து அடையாளமாக பார்சிலோனா உயர்ந்துள்ளது. ரசிகர்களின் கருத்தில் இருந்து இந்த தகவல் தெரிய வந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    மான்செஸ்டர் யுனைடெட் (94.6) 3-வது இடத்திலும், பேயர்ஸ் முனிச் (93.1) 4-வது இடத்திலும், லிவர்பூல் (92.2) ஐந்தாவது இடத்திலும் உள்ளது. ரொனால்டோ, மெஸ்சி 30 வயதை கடந்துள்ளதால் இரு அணிகளின் பலம் குறைய வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் முன்னணி கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் 2-வது இடத்தை உறுதி செய்துள்ளது. #EPL #MUN
    இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்தில் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட் சீசன் தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்ததால் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. பின்னர் முதல் நான்கு இடத்திற்குள் வருமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் தொடரின் பிந்தைய ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2-வது இடத்தை உறுதி செய்துள்ளது. 2017-18 சீசனில் ஒவ்வொரு அணியும் 38 போட்டிகளில் விளையாட வேண்டும். மான்செஸ்டர் யுனைடெட் தனது 37-வது ஆட்டத்தில் நேற்றிரவு வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் வெற்றித் தோல்வியின்றி டிராவில் முடிந்தது.



    இதன்மூலம் மான்செஸ்டர் 37 போட்டிகள் முடிவில் 24 வெற்றி, 7 தோல்வி, 6 டிரா உடன் 78 புள்ளிகள் பெற்றுள்ளது. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 22 வெற்றி, 7 தோல்வி, 8 டிராவுடன் 74 புள்ளிகள் பெற்றுள்ளது. லிவர்பூல் 20 வெற்றி, 5 தோல்வி, 12 டிரா உடன் 72 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. இதில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியடைந்து, டோட்டன்ஹானம் ஹாட்ஸ்பர், லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றாலும் 78 புள்ளிகளை பெற இயலாது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-வது இடத்தை உறுதி செய்துள்ளது.
    ×