என் மலர்

  நீங்கள் தேடியது "man shot dead"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெற்கு காஷ்மீரில் உள்ள ரெஷிபோரா பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். #JammuKashmir #MilitantsAttack
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம், ரெஷிபோரா பகுதியில் வசித்து வந்தவர் மோஷின் வானி. இன்று தன்து வீட்டின் அருகே மோஷின் வானி நின்று கொண்டிருந்தார். அப்போது, துப்பாக்கிகளுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர்.

  இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #FarooqAbdullah #IntruderShotDead
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் வீடு ஜம்முவின் பதிண்டி பகுதியில் உள்ளது. இவரது வீட்டை நோக்கி இன்று மர்ம நபர் ஒருவர் காரில் வந்துள்ளார். வந்த வேகத்தில் வீட்டின் முன்பக்க கேட் மீது காரை மோதிய அந்த நபர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். பாதுகாப்பு  அதிகாரிகள் தடுத்தும் அவர் நிற்காமல் உள்ளே சென்றுள்ளார்.  எனவே, பாதுகாப்பு படையினர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  சுட்டுக் கொல்லப்பட்ட நபர் யார்? எதற்காக பரூக் அப்துல்லா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  இந்த சம்பவம் குறித்து ஜம்மு சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கூறுகையில், “பரூக் அப்துல்லா வீட்டிற்குள் நுழைய முயன்ற நபர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடனும் கைகலப்பில் ஈடுபட்டார். இதில் ஒரு அதிகாரிக்கு காயம் ஏற்படடது. அதன்பின்னர், வீட்டிற்குள் நுழைந்து சில பொருட்களை அடித்து நொறுக்கினார். இதனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்” என்றார். #FarooqAbdullah  #IntruderShotDead

  ×