search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mahalaya amavasya"

    அன்னதானம் செய்யும் போது சாதி, மத குல வேறுபாடுகள் எதையும் பார்க்ககூடாது. அன்னதானம் பெற வரும் ஒவ்வொருவரையும் தங்களது முன்னோர்களாக கருத வேண்டும்.
    மகாளய பட்சத்தின் மிக முக்கிய அம்சமே அன்னதானம் செய்ய வேண்டும் என்பது தான். அன்னதானத்தை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நின்று செய்தால் அதனால் அதிக பலன்கள் கிடைக்கும்.

    அன்னதானம் செய்யும் போது சாதி, மத குல வேறுபாடுகள் எதையும் பார்க்ககூடாது. அன்னதானம் பெற வரும் ஒவ்வொருவரையும் தங்களது முன்னோர்களாக கருத வேண்டும்.

    மேலும் ஏழைகளுக்கு அன்னத்தை தானம் செய்யும் போது, உங்கள் பித்ருக்களை மனதில் தியானம் செய்து கொண்டே மிக, மிக பணிவுடன் செய்ய வேண்டும். அன்னதானம் செய்கிறோம் என்ற அகந்தை மனதுக்குள் துளி அளவு கூட வந்து விடக்கூடாது.

    அதுவும் அன்னத்தை குடும்பத்து பெண்கள் தங்கள் கைப்பட சமைத்து வழங்கி இருந்தால், அந்த பெண்களுக்கு அபரிதமான பலன்கள் கிடைக்கும்.

    அன்னதானத்துடன் பித்ரு காரியங்களுக்கு உரியதாக கருதப்படும் எள் உருண்டை, அதிரசம், பணியாரம், தேன்குழல், உளுந்து வடை, தேங்காய்பால், பால்பழம், சுசீயம், மாவு உருண்டை மற்றும் இனிப்பு வகைகளையும் சேர்த்து கொடுக்கலாம். சிலர் தங்கள் மூதாதையர்களுகு பிடித்த உணவு வகைகளை அன்னதானத்துடன் சேர்த்து வினியோகம் செய்வார்கள். இவையெல்லாம் பித்ருக்களை முழுமையான அளவில் திருப்திப்பட வைக்கும்.
    தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    * முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

    * முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்போது, தாம்பாளத்தில் கூர்ச்சம் வைத்து பித்ருக்களை ஆவாஹனம் செய்தபிறகு கூர்ச்சம் இருக்கும் தாம்பாளத்தை வேறுஇடத்துக்கு நகர்த்தக்கூடாது.

    * குழந்தை பிறந்த தீட்டு அல்லது உறவினர் இறந்த தீட்டு ஆகியவற்றை அனுஷ்டிக்கும்போது நடுவில் அமாவாசை மாதப்பிறப்பு போன்ற தர்ப்பணம் செய்யவேண்டிய நாட்கள் வந்தால், அன்று தர்ப்பணம் செய்யக்கூடாது.

    * சிரார்த்த சமையலில் மிளகாய் சேர்க்கக் கூடாது. அதற்குப் பதிலாக மிளகு சேர்க்கலாம்.

    * தர்ப்பணம் செய்பவர், சிரார்த்தம் செய்வதற்கு முன்பாக அதே பட்சத்தில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதோ, சவரம் செய்துகொள்வதோ கூடாது.

    * அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்யும்போது எள்ளை மடியில் வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்யக்கூடாது

    * தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக்கூடாது.

    * பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை நடைபெறும் காலங்களில் புதிய வேஷ்டியாக இருந்தாலும் கரையில்லாத வேஷ்டியை கட்டிக்கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட வேஷ்டியை மற்றவர்க்கும் தானம் செய்யக்கூடாது.

    * நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது; அதுபோல், கரையில் இருந்துகொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. 
    மகாளய அமாவாசை நாளில் தானங்கள் செய்ய வேண்டியது மிக, மிக அவசியமாகும். தானம் செய்வதன் மூலம் நமது கர்மவினைகளை தூள் தூளாக்க முடியும்.
    சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

    இவர்கள் “காருண்ய பித்ருக்கள் என்று அழைக் கப்படுகின்றார்கள்’’. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.'

    மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. எனவே மகாளய அமாவாசை நாளில் தானங்கள் செய்ய வேண்டியது மிக, மிக அவசியமாகும். தானம் செய்வதன் மூலம் நமது கர்மவினைகளை தூள் தூளாக்க முடியும்.
    எந்த பொருளை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

    பொருட்கள்     - பலன்கள்

    அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்
    துணி - ஆயுள் அதிகமாகும்
    தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
    தீபம் - கண்பார்வை தெளிவாகும்
    அரிசி - பாவங்களை போக்கும்
    நெய் - நோய்களை போக்கும்
    பால் - துக்கம் நீங்கும்
    தயிர் - இந்திரிய சுகம் பெருகும்
    பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
    தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்
    வெள்ளி - மனக்கவலை நீங்கும்
    பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
    தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
    நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்
    பூமி தானம்     - ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

    சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் தானம் செய்வது சிரமம். அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். இவற்றைக் காட்டிலும் சிறந்த தானம் ஒன்று இருக்கிறது.

    அது தான் பசுவிற்கு உணவளிப்பது. கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். அன்னதானம் செய்யலாம். அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழங்களை அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

    அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

    கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

    அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை நீக்கலாம். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.

    அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது செய்யப்படும் படையல் பொருள்களை கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வந்தால் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும். அனைத்து கர்ம வினைகளும் தீரும்.

    கர்ணனின் தான தர்மம்

    மகாபாரதத்தின் பிரபல வீரனான கர்ணன் மரணத்துக்குப் பின்னர் சொர்க்கம் சென்றான். அதுவரை அவன் செய்த தருமங்கள் நூறு மடங்காக பெருகின. ஆனால் அது அத்தனையும் வெள்ளியும், தங்கமுமாக இருந்தன. உணவாக இல்லை. இதனால் அவன் உணவுக்காக கஷ்டப்பட்டான். இது குறித்து அவன் எமதர்மராஜனிடம் கூறி வருத்தப்பட்டான்.

    அதற்கு அவர் நீ பூமியில் வாழ்ந்த காலத்தில் பிறருக்கு பொன்னும், பொருளும், தானமாக வழங்கினாய். அவை அனைத்தும் இங்கு உள்ளன. ஆனால் யாருக்கும் அன்னதானம் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டது எனக்கூறி இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 14 நாட்கள் அவனை பூமிக்கு அனுப்பி வைத்தார்.

    அதன்படியே பூமிக்கு வந்த கர்ணன் 14 நாட்கள் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினான். பிறகு மேலுலகத்திற்கு சென்றான். அங்கு அவனுக்கு உணவு அதிகமாக இருந்தது. புரட்டாசி மாதம் மகாளய பட்சத்தில் இந்த 14 நாட்கள் அவன் அன்னதானம் செய்தான். எனவே இந்த மாதத்தில் வழங்கப்படும் தானங்கள் எல்லா பித்ருக்களுக்கும் நலம் தருகின்றன.
    முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராண உதாரணமும் இருக்கிறது.
    பித்ரு வழிபாடு செய்யும் போது சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். கடவுளுக்கு முதலில் பூஜை, வழிபாடுகள் செய்ய வேண்டுமா? அல்லது நம் முன்னோர்களுக்கு முதலில் பூஜை செய்து வழிபட வேண்டுமா? என்பதே அது.

    முதலில் பித்ருக்களைதான் வணங்க வேண்டும். அதன் பிறகே தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஒரு புராண உதாரணமும் இருக்கிறது.

    பகவான் பாண்டுரங்கன் ஒரு தடவை தன் பக்தன் ஹரிதாசரைப்பார்க்க சென்றார். அப்போது ஹரிதாசர் வயதான தன் பெற்றோருக்கு பணி விடைகள் செய்து கொண்டிருந்தார். பகவானை கண்டதும் ஹரிதாசர் தன் பணிவிடையை நிறுத்தவில்லை. பகவானை பார்த்து, சிறிது நேரம் காத்திருங்கள் நான் என் பணி விடைகளை முடித்து விட்டு வருகிறேன் என்று கூறி ஒரு செங்கலை சுட்டிக் காட்டினாராம். உடனே பகவான் பாண்டுரங்கன் அந்த செங்கல் மீது ஏறி நின்று கொண்டார். ஹரிதாசர் பணி விடைகளை முடித்து விட்டு வந்த பிறகு அவருக்கு பகவான் ஆசி வழங்கினாராம்.

    எனவே நம் வீட்டு பெரியவர்களுக்கே முதலில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. பெற்ற தாய்-தந்தையை பட்டிப்போட்டு விட்டு கோவிலுக்கு சென்று அபிஷேகம், அன்னதானம் என்று செய்தால் ஒரு புண்ணியமும் கிடைக்காது என்பதை உணர வேண்டும். ஆகையால் நீங்கள் எந்த மாதம் சிரார்த்தம் செய்ய வேண்டியது உள்ளதோ அந்த மாதம் மற்ற சுப நிகழ்ச்சிகள் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதுபோல சிரார்த்தம் செய்யும் மாதங்களில் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

    ஒரு வருடத்தில் ஒருவர் தன் மறைந்த முன்னோர்களுக்காக 96 நாட்கள் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஒரு வருடத்தில் ஒருவர் தன் மறைந்த முன்னோர்களுக்காக 96 நாட்கள் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 96 நாட்கள் எவை-எவை என்ற விவரம் வருமாறு:-

    மாதபிறப்பு நாட்கள்-12, மாத அமாவாசை-12, மகாளபட்ச நாட்கள்-16, யுகாதி நாட்கள்-4, மன்வாதி நாட்கள்-14, வியதீபாதம்-12, வைத்ருதி-12, அஷ்டகா-4, அன்வஷ்டகா-4, பூர்வேத்யு-4 ஆக மொத்தம் 96.

    இந்த 96 நாட்களை விட தாய், தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய திதி நாள்தான் ஒருவருக்கு மிக, மிக உயர்ந்தது என்று ஆச்வலாயன மகரிஷி கூறி இருக்கிறார். சிலருக்கு தங்கள் பெற்றோர் மரணம் அடைந்த தினத்துக்கான திதி தெரியாமல் இருக்கலாம். தர்ப்பணம் செய்து வைப்பவர்களிடம் கூறினால் அவர்கள் திதி விவரத்தை மிகச் சரியாக சொல்லி விடுவார்கள்.
    புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.
    மகாவிஷ்ணு ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு லோகத்துக்கு சென்று அருள்பாலித்து வருகிறார். அந்த வகையில் புரட்டாசி மாதம் அவர் பித்ரு லோகத்துக்கு வருவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் பித்ருக்கள் அனைவரும் பாத பூஜை, ஹோமம் உள்ளிட்டவைகளை செய்வார்கள். ஏனெனில் பித்ருக்களுக்கு கண் கண்ட கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணுதான்.

    புரட்டாசி மாதம் பித்ருக்கள் செய்யும் பூஜை மற்றும் ஆராதனைகளை மகாவிஷ்ணு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். பித்ருக்கள் நடத்தும் அந்த பூஜைக்கு திலஸ்மார நிர்மால்ய தரிசன பூஜை என்று பெயர். திலம் என்றார் எள் என்று பொருள். இந்த எள் மகா விஷ்ணுவின் உடலில் இருந்து தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்கு நடத்தப்படும் பூஜை திலஸ்மார நிர்மால்ய பூஜை என்றழைக்கப்படுகிறது.

    இந்த பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும் எள் தானியம் நிறைந்த நிலையில் பித்ருக்களுக்கு காட்சியளிப்பார். இது பித்ருக்களை தவிர வேறு யாருக்கும் காணக் கிடைககாத காட்சியாகும். விஷ்ணுவின் நிர்மால்ய தரிசனம் பெறும் பித்ருக்களுக்கு அரிய பலன்கள் கிடைக்கும். இந்த அரிய பலன்களை பித்ருக்கள் மூலம் பூமியில் வாழும் அவர்களது உறவினர்கள் பெற மகா விஷ்ணு அருள்வார்.

    பித்ருக்களின் ஆராதனைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் மகா விஷ்ணு, பிரத்ருக்களிடம், 15 நாட்கள் நீங்கள் பூலோகத்துக்கு சென்று உங்கள் குடும்பத்தினர் தரும் அன்னத்தை ஏற்று வாருங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நிர்மால்ய பலன்களை கொடுத்து வாருங்கள் என்று அனுப்பி வைப்பார்.
    இதைத் தொடர்ந்தே பூத்ருக்கள் புரட்டாசி மாதம் 15 நாட்கள் பூலோகத்தில் உள்ள நம் வீட்டுக்கு வருகிறார்கள். இந்த 15 நாட்களைத்தான் நாம் மகாளயபட்சம் என்று சொல்கிறோம்.

    மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    பூலோகத்தில் 15 நாட்கள் தங்கி இருக்கும் நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

    மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம். ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான்.
    உங்கள் குல வழக்கப்படி தர்ப்பணவழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ.... அந்த வழக்கப்படியே செய்யலாம். தர்ப்பணம், சிராரத்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்க்ள.

    மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ரக்களை தேடி வரும். அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும். எனவே மகாளயபட்ச நாட்களில் பிரத்ரக்களை வழிபாடு செய்து, விஷ்ணுவின் அருளை பெறத் தவறாதீர்கள்.
    மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.
    மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் ராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.

    திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தம். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு. சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும். திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும். இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

    வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.

    கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம சேத்திரம் என்ற தலம் உள்ளது. அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

    வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா, ராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.
    மகாளய அமாவாசை பூஜை செய்தால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
    மகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும்.

    முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும்.

    இப்பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
    இன்று புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டப காவிரி படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    ஒவ்வொரு ஆண்டும் புரட் டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளில் இருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மகாளயபட்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்து வழிபட்டால் நன்மை பெறலாம் என்பது ஐதீகம்.

    இதனால் ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்களுக்கு வழிபாடு செய்கிறோம். இதில் புரட்டாசி மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

    அந்த வகையில் இன்று புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டப காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    இன்று அதிகாலையிலேயே காவிரியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு அங்குள்ள காவிரி கரையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

    மகாளய அமாவா சையையொட்டி ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் காவிரி படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதல் திருவையாறு மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். பிறகு காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப் பணம் செய்து வழிபட்டனர்.

    மயிலாடுதுறையில் இன்று காலை 7 மணி முதல் மழை தூறியது. இதனால் கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் மகாளய அமாவாசை வழிபாட்டை நடத்தினர்.

    வேதாரண்யம் பகுதியிலும் மகாளய அமாவாசை வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கடலில் நீராடி விட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்னர்.

    இதேபோல் கும்ப கோணம் மகாமகக்குள கரையிலும் மகாளய அமாவாசையை யொட்டி முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
    மகாளய அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். #MahalayaAmavasya #PitruTharpanam
    இந்துக்களின் புனித ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக அன்றைய நாட்களில் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    வருடத்தில் ஆடி, தை, மகாளய அமாவாசை நாட் களில் மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருவார்கள்.

    அதன்படி மகாளய அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.



    முன்னதாக இன்று காலை அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரத்தில் தற்போது மழை பெய்து வருவதால் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    திருப்புல்லாணி அருகே உள்ள சேதுகரை, தேவிபட்டினம் நவபாஷாணம் கடற்கரையிலும் பக்தர்கள் குவிந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். #MahalayaAmavasya #PitruTharpanam
    பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து அதனால் 7 தலைமுறைக்கு சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.
    இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயச்சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் நாம் அமாவாசை வழிபாடு செய்கிறோம்.

    பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு உணவு கொடுப்பது போலவும், அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருகின்றனர்.

    இந்த நாட்களில் தினமும் அன்னதானம் செய்ய வேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் தம் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் புரட்டாசி மாத அமாவாசை அன்றாவது அன்னதானம் செய்யலாம். வசதியிருந்தால் திருவண்ணாமலை போன்ற கோவில்களில் அன்னதானம் செய்யலாம். இதுவும் முடியாவிட்டால் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப் பழங்கள் கொடுக்கலாம்.

    பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பொது அமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.

    புரட்டாசி மாதத்தில் சூரியனின் தென்பாகம் நடுப்பக்கம் பூமிக்கும் நேராக நிற்கிறது. அப்போது சந்திரனின் தென்பாகமும் நேராக நிற்கிறது. இந்த தருணமே பித்ருக்களுக்கு விசேஷ தினமாகும்.

    மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் 28 அம்சங்கள் தாய், தந்தை உட்கொள்ளும் உணவில் இருந்து உண்டாகிறது. மீதமுள்ள 56 அம்சங்கள் அவனது முன்னோர்கள் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக தந்தையிடம் இருந்து 21 அம்சங்களும், பாட்டனாரிடம் இருந்து 15 அம்சங்களும், முப்பாட்டனாரிடமிருந்து 10 அம்சங்களுமாக 46 அம் சங்கள் கிடைக்கின்றன.

    மீதமுள்ள 10 அம்சங்களில் நான்காவது மூதாதையரிடமிருந்து 6 -ம், ஐந்தாவது மூதாதையரிட மிருந்து 3 -ம், ஆறாவது மூதாதையரிடமிருந்து 1 -ம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன. 7 தலைமுறைக்கு மரபணுக்கள் தொடர்பு உள்ளது.

    இதனால் தான் தலைமுறை 7 என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள். இதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும் ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது.

    பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து ஆசி வழங்கி மகிழ்கிறார்கள். அன்னதானமும் தீப வழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் அதனால் 7 தலைமுறைக்கு சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.
    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். #MahalayaAmavasya #PitruTharpanam
    புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களில் குவிந்தனர்.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக அவர்களை வழிபட்டு தர்ப்பணம் செய்தனர்.

    தாய், தந்தை, பாட்டனார் என்று அவர்களை நினைத்து எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப் பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். முன் னதாக பக்தர்கள் காவிரி ஆற் றில் இறங்கி புனித நீராடினர். பின்னர் அங்குள்ள காவிரி அம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.

    இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபத்திலும் ஏராளமானோர் திரண்டு சிவாச்சாரியார்கள் மூலம் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    மகாளாய அமாவாசை தினத்தையொட்டி இன்று காலை திருச்சி அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் குவிந்த பக்தர்கள் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்திய காட்சி.

    முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர்.

    இன்று மகாளாய அமாவாசை தினத்தையொட்டி சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    மாலை 4 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனாதி தைலம், திரவியப்பொடி, பச்சரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பழ வகைகள் போன்ற 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு மாரியம்மன் ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தம், கோவில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று காலை பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.  #MahalayaAmavasya #PitruTharpanam
    ×