search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Panthers"

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்து மதுரை அணி 2-வது வெற்றியை சுவைத்தது. #TNPL 2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நத்தத்தில் நேற்று மாலை நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், மதுரை பாந்தர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ரன்வேகமும் சீராகவே நகர்ந்தது. கேப்டன் கவுசிக் காந்தி 11 ரன்னிலும், தினேஷ் 35 ரன்களிலும் வெளியேறினர்.

    இதைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆனந்தும் (44 ரன், 35 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), சீனிவாசனும் (42 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இறுதிகட்டத்தில் மதுரை பவுலர்கள் சாமர்த்தியமாக பந்து வீசினர். அதாவது ஸ்டம்பை குறி வைக்காமல் ஆப்-சைடுக்கு சற்று அதிகமாக வெளியே வீசினர். அதை அடித்து ஆட முடியாமல் தூத்துக்குடி வீரர்கள் தடுமாறினர். மதுரை பவுலர்களின் இந்த யுக்தியை கடைசி ஓவரில் ஆல்-ரவுண்டர் சதீஷ் தகர்த்தார். இதே போன்று பவுலிங் செய்த கிரன் ஆகாஷின் பந்து வீச்சில் ஆப்-சைக்கு நகர்ந்து சென்று பந்தை இரண்டு முறை ‘பைன்லெக்’ பகுதியில் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஒரு பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்று காணாமல் போய் விட்டது. இன்னொரு முறையும் பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

    20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. சதீஷ் 24 ரன்களுடன் (10 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். மதுரை வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

    பின்னர் களம் புகுந்த மதுரை அணிக்கு அருண் கார்த்திக்கும், கேப்டன் ரோகித்தும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் (8.2 ஓவர்) சேர்த்த நிலையில் பிரிந்தனர். ரசிகர்களுக்கு விருந்து படைத்த ரோகித் 28 ரன்களும், 6-வது அரைசதத்தை எட்டிய அருண் கார்த்திக் 59 ரன்களும் (42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து வந்த சந்திரன் (29 ரன்), ஜே.கவுசிக் ஆகியோரும் ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர். தூத்துக்குடி கேப்டன் 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் மதுரை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    19-வது ஓவரில் பவுண்டரி, சிக்சருடன் ஜே.கவுசிக் இன்னிங்சை வெற்றிகரமாக முடித்து வைத்தார். மதுரை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜே.கவுசிக் 38 ரன்களுடன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தூத்துக்குடி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3-வது ஆட்டத்தில் ஆடிய தூத்துக்குடி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

    அதே சமயம் 3-வது லீக்கில் விளையாடிய மதுரை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் தோற்கடித்து இருந்தது. முதல் இரு ஆண்டில் எந்த ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாத மதுரை பாந்தர்ஸ் அணி, இந்த சீசனில் இந்நாள் சாம்பியனையும், முன்னாள் சாம்பியனையும் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    மதுரை கேப்டன் ரோகித் கூறுகையில், ‘இரு சாம்பியன் அணிகளை வீழ்த்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இத்துடன் திருப்திபட்டு விடமாட்டோம். மேலும் வெற்றிகளை குவிக்கும் வேட்கையில் இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டார். #TNPL 2018 #NammaOoruNammaGethu
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் டூட்டி பாட்ரியாட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மதுரை பாந்தர்ஸ். #TNPL #MaduraiPanthers #TutiPatriots
    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திண்டுக்கல்லில் நடந்த முதல் போட்டியில்
    டூட்டி பாட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டூட்டி பாட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி மற்றும் எஸ்.தினேஷ் ஆகியோர் களமிறங்கினர்.

    தினேஷ் 35 ரன்களும், சுப்ரமண்யன் ஆனந்த் 44 ரன்களும், அக்ஷய் சீனிவாசன் 42 ரன்களும் எடுத்தனர். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் அபிஷேக் தன்வர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் சிறப்பாக ஆடி 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து, ரோகிட் 28 ரன்களும், ஸ்ரீஜித் சந்திரன் 29 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஜெகதீசன் கவுசில் 22 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. #TNPL #MaduraiPanthers #TutiPatriots
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மதுரை அணியுடனான தோல்வி குறித்து பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் கருத்து தெரிவித்துள்ளார். #TNPL2018 #CSG #MP
    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரையிடம் வீழ்ந்து 2-வது தோல்வியை தழுவியது.

    நெல்லையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்எடுத்தது.

    கே.கவுசிக் 21 பந்தில் 37 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), கஜீத் சந்திரன் 29 பந்தில் 37 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), நிலேஷ் சுப்பிரமணியன் 28 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். முருகன் அஸ்வின், சன்னிகுமார் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும், அலெக்சாண்டர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பின்னர் விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் 127 ரன்னில் (ஆல்அவுட்) ஆனது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 26 ரன்னில் தோற்றது.

    கார்த்திக் அதிகபட்சமாக 28 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்), கங்கா ஸ்ரீதர் ராஜூ 24 ரன்னும் (3 பவுண்டரி), முருகன் அஸ்வின் 17 பந்தில் 22 ரன்னும் (1பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரகீல்ஷா, வருண் சக்கரவர்ததி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டும், கவுசிக் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் தோற்றது. போட்டி முடிந்த பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது அணியின் முடிவு. எங்களது பந்துவீச்சு பலம் வாய்ந்தது. இதனால் தான் எதிர் அணியை 153 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். எங்களது பேட்டிங் தான் சிறப்பாக அமையவில்லை. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் இன்னும் சற்று நம்பிக்கையோடு விளையாடி இருக்க வேண்டும்.

    அதேநேரத்தில் மதுரை அணி பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்து வீசினார்கள்.

    எங்களது பந்துவீச்சும், பீல்டிங்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் தான் இன்னும் முன்னேற்றம் தேவை. அடுத்தப்போட்டியில் நாங்கள் திறமையை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டி.என்.பி.எல். வரலாற்றில் மதுரை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணி வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியதாவது:-

    இந்த வெற்றியை பெருமையாக கருதுகிறேன். முதல் ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்தோம். இந்த ஆட்டத்தில் நம்பிக்கையோடும், கனவோடும் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். இதை தக்க வைத்துக்கொள்வோம்.



    சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. ரகீல்ஷாவுடன் இணைந்து சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்தர போட்டிகளில் நிறைய அனுபவம் பெற்றவர் என்பதால் அவரிடம் இருந்து நான் சிறப்பானவற்றை கற்றுக்கொள்ள முயற்சித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது 3-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையுடன் வருகிற 21-ந்தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. மதுரை அணி 3-வது போட்டியில் ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்சை 22-ந்தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டம் திண்டுக்கல்லில் நடக்கிறது.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #CSG #MP
    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் இன்று நடக்கவிருக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றனர். #TNPL2018 #NammaOoruNammaGethu #maduraipanthers #CSG
    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியை சந்திக்கிறது. நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சிடம் தோற்றது. 40 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கில்லீஸ் அணி, இன்றைய ஆட்டத்தில் நிலைத்து நின்று ஆடுவதில் கூடுதல் கவனமுடன் செயல்படும் என்று நம்பலாம். நெல்லை ஆடுகளம், பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டியது அவசியமாகும்.

    மதுரை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்லிடம் தோற்று இருந்தது. அந்த அணியும் முதலாவது வெற்றிக்காக களம் இறங்குவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. முந்தைய இரு சீசன்களில் இவ்விரு அணிகளும் சந்தித்த இரண்டு ஆட்டங்களிலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu #maduraipanthers #CSG
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் மதுரை பாந்தர்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ். #TNPL #SMPvDD
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 2-வது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக சீசெம் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி மதுரை அணியின் அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் 24 ரன்களும், தலைவன் சற்குணம் 26 ரன்களும், அருண் கார்த்திக் 61 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் ஷிஜித் சந்திரன் 35 ரன்கள் சேர்க்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.

    திண்டுக்கல் அணியில் அஸ்வின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 170 ரன்களை இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது. ஹரி நிஷாந்தும், ஜகதீசனும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ஹரி நிஷாந்த் 28 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விவேக் ஜகதீசனுடன் சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஜகதீசன் 42 பந்துகளில் 68 ரன்களும், விவேக் 33 பந்துகளில் 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றனர். #NammaOoruNammaGethu #TNPL2018
    நெல்லை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க லீக் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நெல்லையில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #NammaOoruNammaGethu #TNPL2018
    ×