search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ma subramaniyan"

    • 31-வது கொரோனா தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது.
    • தடுப்பூசி, முகக்கவசம் மட்டுமே கொரோனா தொற்று பரவலை தடுக்க சிறந்த வழிமுறை.

    சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்றார். தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

    கொரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 31-வது கொரோனா தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், பொதுமக்கள் இந்த முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை என்றும், கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க சுகாதாரத் துறை சார்பில் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • அமைச்சருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்று அவரது ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர்.
    • மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த 7 பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இதையொட்டி மதுரை விமான நிலையத்துக்கு இன்று வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான பயணிகளிடம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வாழப்பாடி அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்று அவரது ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர்.

    ஆய்வின்போது, ஆரம்ப சுகாதார மையத்தில் பணியில் இல்லாத மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார்.

    • கொரோனா தொற்று குறைந்து வருகிறது என மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்
    • அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

    திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பேரறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் நடந்த புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழகத்தில் பி.ஏ.1 மற்றும் பி.ஏ.2 வகை கொரோனா தொற்றுகளில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு நாவலூர் பகுதியில் ஒரு நபருக்கு பி.ஏ.4 உருமாற்றம் பெற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

    இந்தநிலையில் நேற்று 150 மாதிரிகள் ஐதராபாத்தில் உள்ள சி.டி.எப்.டி ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் தமிழகத்தில் 4 பேருக்கு பி.ஏ.4 தொற்றும், 8 பேருக்கு உருமாற்றம் பெற்ற பி.ஏ.5 இருப்பது கண்டறியப்பட்டது.

    தொற்று பாதிக்கப்பட்ட 12 பேரும் தொடர் கண்காணிப்பில் இருக்கின்றனர். யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    கொரோனா தொற்று குறைந்து வருகிறது என மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா தொற்று முழுவதுமாக நீங்கும் வரை முக கவசம் அணியவும், சமூக இடைவெளி கடைபிடிக்கவும் வேண்டும். அரசின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×