search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lokpal"

    லோக்பால் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என காங்கிரஸ் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #LokpalMeet #PMModi #MallikarjunKharge
    புதுடெல்லி:

    பிரதமர், மத்திய மந்திரிகள், மத்திய அரசு அதிகாரிகள் என அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் லோக்பால் அமைப்பை விரைந்து அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை லோக்பால் தேர்வுக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது.

    லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரு உறுப்பினர். ஆனால், தற்போதைய நிலவரப்படி மக்களவையில் குறைந்த எம்.பி.க்கள் இருப்பதால் எதிர்க்கட்சி அங்கீகாரம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படவில்லை. 

    இதனால், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சிறப்பு அழைப்பாளர் என குறிப்பிட்டு அவர் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

    இந்நிலையில், லோக்பால் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக கார்கே பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், மக்களவையில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியான அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு லோக்பால் தேர்வு குழுவில் உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என நாங்கள் கூறி வருகிறோம். 

    ஆனால், சிறப்பு அழைப்பாளர் என்ற பிரிவில் என்னை கலந்து கொள்ள அழைத்துள்ளீர்கள். இப்படி ஒரு உறுப்பினரை அழைக்க கூடாது என விதிகள் உள்ளதை அரசு நன்கு அறியும். எனவே, லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். #LokpalMeet #PMModi #MallikarjunKharge
    லோக்பால் அமைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 10 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #LokpalAppointment #LokpalCase
    புதுடெல்லி:

    ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும், இதுவரை லோக்பால் அமைக்கப்படவில்லை. இதையடுத்து லோக்பால் அமைப்பை உருவாக்கி அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி காமன் காஸ் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள்? என்பது தொடர்பாக காலக்கெடுவுடன் கூடிய பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், லோக்பால் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #LokpalAppointment #LokpalCase
    ×