search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lionel Messi"

    உலக கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி தோற்ற விரக்தியில் ரசிகர் ஒருவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது.


    இதனால் மனமுடைந்த அலெக்ஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். கால்பந்து அணி தோல்வியடைந்தற்கு வாலிபர் வீடை விட்டு வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அர்ஜென்டினாவின் தலைசிறந்த வீரராக கருதப்படும் மரடோனாவை விட மெஸ்சிதான் சிறந்த வீரர் என செர்ஜியோ ரமோஸ் தெரிவித்துள்ளார். #WorldCup2018
    ஸ்பெயின் அணியின் தலைசிறந்த கால்பந்து வீரர் செர்ஜியோ ரமோஸ். 32 வயதான இவர் ரியல் மாட்ரிட் அணியின் பின்கள வீரராக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டன் இவர்தான். ரமோஸ் தற்போது உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி கேப்டனாக உள்ளார்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியில் தலைசிறந்த வீரராக கருதப்படும் ஜாம்பவான் டியகோ மரடோனா, செர்ஜியோ ரமோஸை விட அட்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடி வரும் டியகோ காடின் சிறந்த வீரர் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கால்பந்து வரலாற்றில் மரடோனாவை விட மெஸ்சிதான் அர்ஜென்டினாவின் தலைசிறந்த வீரர் என்று ரமோஸ் பதிலடி கொடுத்துள்ளார்.



    இதுகுறித்து ரமோஸ் கூறுகையில் ‘‘அர்ஜென்டினாவில், அங்குள்ளவர்களுக்கு கால்பந்து வரலாற்றில் மரடோனாதான் சிறந்த வீரர் என்பது தெரியும். என்னைப் பொறுத்த வரையில் மெஸ்சிதான்.

    ஈரான் வீரர்கள் நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருந்தனர். அதேசமயம் நாங்கள் வேறு வழியில் வெற்றி பெற விரும்பினோம். எங்களால் அனைத்து இடத்திலும் முன்னேற்றம் காண முடியும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.

    ஸ்பெயின் அணி கடைசி லீக்கில் மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.
    நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மிகப்பெரிய ரசிகன். என்றாலும், அவரைவிட பார்சிலோனா புகழ் மெஸ்சி சிறந்த வீரர் என்று ரஷ்போர்டு தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி கால்பந்து வீரர் மார்கஸ் ரஷ்போர்டு. இங்கிலாந்தின் முன்னணி கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்காக 19 ஆட்டத்தில் பங்கேற்று 3 கோல் அடித்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கடந்த 2015-ல் இருந்து விளையாடி வருகிறார். 78 ஆட்டத்தில் 17 கோல்கள் அடித்துள்ளார்.

    உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவராக கருதப்படும் முன்கள வீரரான ரஷ்போர்டு, கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட மெஸ்சி சிறந்த வீரர் என்று குறிப்பிட்டுள்ளார்.



    இதுகுறித்து ரஷ்போர்டு கூறுகையில் ‘‘நான் மெஸ்சியை பற்றி சொல்ல வேண்டுமென்றால், சில விஷயங்கள் நம்ப முடியாத வகையில் இருக்கும். ரொனால்டோவின் சிறந்த ரசிகன் நான். நான் மெஸ்சியை விட சிறந்த வீரர் யாருமில்லை என்று நினைக்கிறேன். நான் இணைந்து விளையாடியதில் ரூனேதான் சிறந்த வீரர். அவர் ஒரு ஜாம்பவான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.



    ரூனே உடன் ரஷ்போர்டு மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 2016-ல் ஒன்றரை சீசனில் விளையாடியுள்ளார். அப்போது எஃப்ஏ கோப்பை, லீக் கோப்பை, யூரோப்பா லீக், கம்யூனிட்டி ஷீல்டு ஆகியவற்றை மான்செஸ்டர் கைப்பற்றியுள்ளது.
    உலகக் கோப்பையை வெல்வதற்கு சாதகமான அணிகள் பட்டியலில் நாங்கள் இல்லை என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி கூறியுள்ளார். #WorldCup2018
    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக மெஸ்சி கருதப்படுகிறார். ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஏராளமான விருதுகளையும் கோப்பைகளையும் வென்றுள்ளார். ஆனால் உலகக் கோப்பை தொடரில் மட்டும் பட்டம் சூட்டியது கிடையாது.

    கடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் கடைசி நேரத்தில் 0-1 என ஜெர்மனியிடம் வீழ்ந்தது. இந்த விரக்தியில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

    2018 உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் நாங்கள் இல்லை என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி கூறியுள்ளார்.

    அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஹெய்தி அணிக்கெதிரான ஆட்டத்தில் மெஸ்சி ஹாட்ரிக்கால் அர்ஜென்டினா 4-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெற்றதோடு ஐரோப்பா புறப்படும் மெஸ்சி ரசிகர்கள் நன்றி தெரிவித்தார்.

    மேலும் உலகக் கோப்பை குறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘நாங்கள் கோப்பையை வெல்லும் சாதகமான அணி பட்டியலில் இடம்பிடித்தவர்களாக அங்கு செல்லவில்லை. ஆனால் நாங்கள் சிறந்த அணி. எந்தெவொரு அணிக்கு எதிராகவும் மோத தயாராக இருக்கிறோம். தற்போது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் நீண்ட காலமாக இணைந்து விளையாடியுள்ளோம். நாங்கள் முக்கியமான டைட்டிலுக்காக செல்ல விரும்புகிறோம்’’ என்றார்.
    லா லிகா தொடரில் பார்சிலோனாவிற்காக 34 கோல்கள் அடித்து யூரோப்பியன் கோல்டன் ஷூவை ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றுள்ளார் மெஸ்சி. #Messi
    யூரோப்பா கண்டத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்து லீக் தொடர் ஆண்டுதோறும் நடைபெறும். இங்கிலாந்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக், ஸ்பெயினில் லா லிகா, பிரான்ஸில் லீக் 1, இத்தாலியில் செரி ஏ, ஜெர்மனியில் பண்டேஸ்லிகா போன்ற முன்னணி கால்பந்து லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.



    இந்த கால்பந்து லீக்கில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் கோல்டன் ஷூ வழங்கப்படும். அதன்படி இந்த வருடம் லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் மெஸ்சி கோல்டன் ஷூவை தட்டிச் சென்றுள்ளார். மெஸ்சி இந்த சீசனில் 34 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் 25 கோல்கள் அடிக்க துணைபுரிந்துள்ளார்.



    இவர் ஏற்கனவே, கடந்த வருடம், 2010, 2012 மற்றும் 2013-ல் இந்த விருதை கைப்பற்றியுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடும் முகமது சாலா 332 கோல்கள் அடித்து 2-வது இடம்பிடித்துள்ளார். டோட்டன்ஹாம் வீரர் ஹரி கேன் 30 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். ரியல் மாட்ரிட் வீரர் ரொனால்டோ 26 கோல்கள் அடித்து 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
    ×