search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lamborghini"

    • லம்போர்கினி நிறுவனத்தின் புதிய ஹூரகேன் டெக்னிகா மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த கார் பந்தய களத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஹூரகேன் டெக்னிகா மாடலை அறிமுகம் செய்தது. புதிய லம்போர்கினி காரின் விலை ரூ. 4 கோடியே 04 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இருவர் மட்டும் பயணிக்கக்கூடிய இந்த கார் பந்தய கள பயன்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.

    முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அறிமுகமாகி இருக்கும் வேரியண்ட் ஹூரகேன் இவோ RWD மற்றும் ஹூரகேன் STD மாடல்களின் இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய லம்போர்கினி ஹூரகேன் டெக்னிகா மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 640 ஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த டிரைவிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த கார் ஸ்டிராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா என மூன்று வித ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேக்ததை 3.2 நொடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    புதிய லம்போர்கினி காரில் 20 இன்ச் அலாய் வீல்கள், கார்பன் பைபர் என்ஜின் கவர், பிக்சட் ரியர் ஸ்பாயிலர், ஸ்போர்டி ரியர் பம்ப்பர், ஹெக்சகன் வடிவ டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் ஆல் பிளாக் தீம் கொண்டுள்ளது. கூடுதலாக ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி மற்றும் மேம்பட்ட HMI இண்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

    • லம்போர்கினி நிறுவனம் புதிய ஹரகேன் டெக்னிகா மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது.
    • இந்த கார் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இத்தாலி நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான லம்போர்கினி இந்திய சந்தையில் புதிய ஹரகேன் டெக்னிகா மாடல் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

    வி10 சூப்பர்காரின் புது வேரியண்ட் ஹரகேன் RWD மற்றும் ஹரகேன் STO மாடல்களின் இடையில் நிலை நிறுத்துப்பட இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புது லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் லம்போர்கினி நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த RWD வேரியண்ட் ஆகும்.


     இதில் 5.2 லிட்டர் NA வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 640 ஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும்.

    இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. புதிய லம்போர்கினி காரில் 20 இன்ச் அலாய் வீல்கள், ரி-வொர்க் செய்யப்பட்ட விண்டோ லைன், கார்பன் பைபர் என்ஜின் கவர், டிப்யுசர் அடங்கிய புது ரியர் பம்ப்பர், ரியர் ஸ்பாயிலர், ஹெக்சகன் வடிவம் கொண்ட டூயல் எக்சாஸ்ட் பைப்கள் உள்ளன.

    • லம்போர்கினி நிறுவன கார் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் கடந்து இருக்கிறது.
    • புது மைல்கல் எட்டிய லம்போர்கினி கார் அசர்பைஜானில் வசிக்கும் வாடிக்கையாளருக்கு வினியோகம் செய்யப்பட்டது.

    லம்போர்கினி உருஸ் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சர்வதேச சந்தையில் உருஸ் மாடல் உற்பத்தியில் 20 ஆயிரம் யூனிட்கள் எனும் புது மைல்கல் எட்டி உள்ளதாக லம்போர்கினி அறிவித்து உள்ளது.


    கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் லம்போர்கினி நிறுவனம் தனது உருஸ் மாடல் உற்பத்தியில் 15 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக அறிவித்தது.இந்த நிலையில் 12 மாதங்களில் 5 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. லம்போர்கினி உருஸ் மாடல் அறிமுகமாகி நான்கு ஆண்டுகளில் இந்த மைல்கல் எட்டியிருக்கிறது. முன்னதாக இதேபோன்ற மைல்கல் எட்ட ஹரிகேன் மாடல் எட்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    லம்போர்கினி உருஸ் 20 ஆயிரமாவது யூனிட் அசர்பைஜானில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. லம்போர்கினி உருஸ் மாடலில் ட்வின் டர்போ 4 லிட்டர் வி8 என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 650 பி.எஸ். திறன், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமாகி, இந்த ஆண்டு இந்தியா வந்திருக்கும் லம்போர்கினி உருஸ் முதல் கார் இந்தியாவில் வினியோகம் செய்யப்பட்டது. #Lamborghini #Urus



    லம்போர்கினி உருஸ் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமாகி, இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இந்தியாவில் முதல் லம்போர்கினி உருஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவர் புதிய லம்போர்கினி உருஸ் மாடலை முன்பதிவு செய்திருக்கிறார்.

    இந்தியா வந்திருக்கும் புதிய உருஸ் மாடலில் ரோஸோ ஆன்டிரோஸ் ஃபினிஷ் செய்யப்பட்டு, 22-இன்ச் டைமன்ட் ஃபினிஷ் நேத் வீல்களை கொண்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் வெளிப்புறம், க்ரோம் ஃபினிஷ் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. 
     
    உள்புறம் ஐந்து லெதர்-கிளாட் சீட் மற்றும் மூன்று பெரிய TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு டிஸ்ப்ளே ஸ்டீரிங் வீல் பின்புறம் வழங்கப்பட்டு வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் பினாக்கிள் மாற்றாக அமைந்துள்ளது. மற்ற இரண்டு டிஸ்ப்லேக்கள் சென்டர் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.



    லம்போர்கினி நிறுவனத்தின் இரண்டாவது எஸ்.யு.வி. மாடலாக உருஸ் அமைந்துள்ள உருஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 641 பி.எச்.பி. பவர் 6000 ஆர்.பி.எம். மற்றும் 850 என்.எம். டார்கியூ 2250-4500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இன்ஜின் 0-100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 விநாடிகளில் செல்லும் என்றும் 12.8 விநாடிகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். புதிய உருஸ் மாடலின் உச்ச வேகம் மணிக்கு 305 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆறு வெவ்வேறு டிரைவிங் மோட்: ஸ்டிராடா (ஸ்டிரீட்), ஸ்போர்ட், கோர்சா (டிராக்) மற்றும் ஆஃப்ரோடிங் செய்ய சபியா (சாணட்), டெரா (கிராவல்) மற்றும் நெவ் (ஸ்னோ) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லம்போர்கினி உருஸ் விலை ரூ.3 கோடி (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் இதன் விலை ரூ.4 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    போப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் மாடல் ஏலத்தில் பல கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது.
    கனடா:

    போப் பிரான்சிஸ் பயன்படுத்தி வந்த கஸ்டம் மேட் லம்போர்கினி ஹரிகேன் RWD கூப் ஏலத்தில் 7,15,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.5.76 கோடி) விற்பனையாகியுள்ளது. 

    கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தைக்கு இந்த லம்போர்கினி கார் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஆட்டோமொபில் லம்போர்கினி சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. பரிசை ஏற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ் காரில் தனது கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    மான்ட் கார்லோவில் மே 12-ம் தேதி நடைபெற்ற ஏலம் ஆர்எம் சோத்பி எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. முன்னதாக பலமுறை வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை இந்நிறுவனம் ஏலத்தில் விற்றிருக்கிறது. அந்த வகையில் போப் பிரான்சிஸ் லம்போர்கினி டாப் 10 பட்டியில் இடம்பிடித்துள்ளது.

    போப் பிரான்டிஸ் பயன்படுத்தி வந்த லம்போர்கினி ஹரிகேன் மாடல் பியான்கோ மொனோசிரஸ் வைட் ஷேட் நிறம் கொண்டிருக்கிறது. இதில் கியாலோ டிபெரினோ ஸ்டிரைப்கள் மற்றும் வேட்டிக்கன் நகர கொடிகளை தழுவிய நிறங்களில் டீடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. RWD கூப் மாடலில் டைமன்ட் ஃபினிஷ் செய்யப்பட்ட 20 இன்ச் கியானோ வீல்கள் மற்றும் நீரோ கேலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் இருக்கைகள் பியான்கோ லெடா ஸ்போர்டிவோ லெதர் மூலம் மூடப்பட்டு, ஹெட்ரெஸ்ட்களில் லம்போர்கினி கிரெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஆட் பென்சோனம் எனும் லம்போர்கினியின் கஸ்டமைசேஷன் குழுவினரால் உருவாக்கப்பட்ட நிலையில், இதன் ஹூடில் போப் கையெழுத்திட்டிருந்தார்.



    மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாத நிலையில், லம்போர்கினி ஹரிகேன் RWD மாடலில் 5.2 லிட்டர் V10 இன்ஜின் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின் 576 பிஹெச்பி @8000 ஆர்பிஎம், 540 என்எம் டார்கியூ @6500 ஆர்பிஎம் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    போப் பயன்படுத்திய இந்த கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.4 நொடிகளில் செல்லும் என்பதோடு அதிகபட்சமாக மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    ஏலத்தொகை மொத்தமும் திருத்தந்தை போப் பிரான்சிஸ் இடம் வழங்கப்பட்டு, இவை பல்வேறு நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட இருக்கிறது. இந்த தொகையின் ஒருபங்கு போப் ஜான் XXIII சமூகத்திற்கு வழங்கப்படும், இந்த சமூகம் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு உதவி வருகிறது.
    ×