search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் முதல் லம்போர்கினி உருஸ் வினியோகம் செய்யப்பட்டது
    X

    இந்தியாவின் முதல் லம்போர்கினி உருஸ் வினியோகம் செய்யப்பட்டது

    சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமாகி, இந்த ஆண்டு இந்தியா வந்திருக்கும் லம்போர்கினி உருஸ் முதல் கார் இந்தியாவில் வினியோகம் செய்யப்பட்டது. #Lamborghini #Urus



    லம்போர்கினி உருஸ் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமாகி, இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து இந்தியாவில் முதல் லம்போர்கினி உருஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் வசிக்கும் வாடிக்கையாளர் ஒருவர் புதிய லம்போர்கினி உருஸ் மாடலை முன்பதிவு செய்திருக்கிறார்.

    இந்தியா வந்திருக்கும் புதிய உருஸ் மாடலில் ரோஸோ ஆன்டிரோஸ் ஃபினிஷ் செய்யப்பட்டு, 22-இன்ச் டைமன்ட் ஃபினிஷ் நேத் வீல்களை கொண்டுள்ளது. இத்துடன் கிளாஸ் பிளாக் வெளிப்புறம், க்ரோம் ஃபினிஷ் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. 
     
    உள்புறம் ஐந்து லெதர்-கிளாட் சீட் மற்றும் மூன்று பெரிய TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு டிஸ்ப்ளே ஸ்டீரிங் வீல் பின்புறம் வழங்கப்பட்டு வழக்கமான இன்ஸ்ட்ரூமென்ட் பினாக்கிள் மாற்றாக அமைந்துள்ளது. மற்ற இரண்டு டிஸ்ப்லேக்கள் சென்டர் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்தை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.



    லம்போர்கினி நிறுவனத்தின் இரண்டாவது எஸ்.யு.வி. மாடலாக உருஸ் அமைந்துள்ள உருஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ வி8 ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 641 பி.எச்.பி. பவர் 6000 ஆர்.பி.எம். மற்றும் 850 என்.எம். டார்கியூ 2250-4500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த இன்ஜின் 0-100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 விநாடிகளில் செல்லும் என்றும் 12.8 விநாடிகளில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். புதிய உருஸ் மாடலின் உச்ச வேகம் மணிக்கு 305 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆறு வெவ்வேறு டிரைவிங் மோட்: ஸ்டிராடா (ஸ்டிரீட்), ஸ்போர்ட், கோர்சா (டிராக்) மற்றும் ஆஃப்ரோடிங் செய்ய சபியா (சாணட்), டெரா (கிராவல்) மற்றும் நெவ் (ஸ்னோ) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லம்போர்கினி உருஸ் விலை ரூ.3 கோடி (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் இதன் விலை ரூ.4 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×