search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumbabishegam"

    • கோயில் திருப்பணி மேற்கொள்ள அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கொரோனா ஊரடங்கு காலத்தில், கோயில்கள் வருவாய் பெரிதும் பாதித்தது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்தில் இந்து அறநிலைய துறைக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடத்திட அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் பல்லடம் பொன்காளிஅம்மன் கோயிலும் இடம் பெற்றுள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். நீண்ட காலமாக, இந்த கோயில் கும்பாபிசேகம் நடத்தப்படவில்லை. தற்போது, கோயில் திருப்பணி மேற்கொள்ள அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் பிரேமா பேசுகையில், கோயிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் பல்லடம் நகர பகுதியில் இருந்தும்,கோயிலுக்கு போதிய வருவாய் இல்லை. நிலத்தை குத்தகைக்கு விடுவதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் இதனால்,கோயில் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது.கொரோனா ஊரடங்கு காலத்தில், கோயில்கள் வருவாய் பெரிதும் பாதித்தது. அந்தந்த கோயில் வருவாயை அந்த கோயில்களுக்கு மட்டுமே செலவிட முடியும். வங்கி மூலம் கிடைக்கும் வைப்பு தொகை வட்டி கொண்டு தான் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் செய்யப்படுகிறது என்று கூறினார். கோயில் வளாகத்தில் அலுவலக கட்டடம், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர்உள்ளிட்ட வேலைகள் உள்ளன. முதலில் மதிப்பீடு செய்த பிறகு பணிகள் துவங்கினால் நன்றாக இருக்கும். அதன் பின்னர் செலவு கூடினால் நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்படும்.

    எனவே கோயில் வளாகத்தில் போதிய வசதிகளை செய்த பின்னர் கோயில் திருப்பணி மேற்கொள்வது நல்லதாக இருக்கும். மேலும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    • வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த கோவில் சன்னதியில் உள்ள சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் ,தன்வந்திரி பெருமாள் ,கருட ஆழ்வார் ,ஆஞ்சநேயர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடந்தது.
    • வெள்ளிக்கிழமை கோவில் கும்பாபிஷேகம் விழாவை ஒட்டி காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை ஹோமம், நவகலச ஸ்தாபிதம், வெங்கடேச பெருமாள், மூலவர், உற்சவர் திருமஞ்சன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    உடுமலை :

    உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம் அருகே செங்குளத்தின் கரையில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக 4 ம்ஆண்டு விழா வெங்கடேச பெருமாளின் அவதார உற்சவ விழாவாக இரண்டு நாட்கள் நடந்தது. வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை இந்த கோவில் வளாக சன்னதியில் உள்ள சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் ,தன்வந்திரி பெருமாள் ,கருட ஆழ்வார் ,ஆஞ்சநேயர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு கள்ளப்பாளையம் சீனிவாச பெருமாள் பஜனை கோஷ்டி யினரின் பஜனையும் பிருந்தாவனம் நிகழ்ச்சியும் நடந்தது.

    இன்று வெள்ளிக்கிழமை கோவில் கும்பாபிஷேகம் நான்காம் ஆண்டு விழாவை ஒட்டி காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை ஹோமம் , நவகலச ஸ்தாபிதம் ,வெங்கடேச பெருமாள், மூலவர், உற்சவர் திருமஞ்சன நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் புலவர் குரு சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய பெருமாள் திருமொழி நூல் வெளியிடப்பட்டது .

    தொடர்ந்து காலை 11 மணிக்கு விசேஷஅலங்கார பூஜை, மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் உற்சவர் வழிபாடு நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி பாலாஜி சாரிட்டபிள் ட்ரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன். அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்து இருந்தனர். இதில் உடுமலை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர்பகுதியான துறைமங்கலம் புதுக்காலனியில் செல்வ கணபதி, ராஜ ராஜேஸ்வரி, பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று முன்தினம் பல்வேறு பூஜைகளை தொடர்ந்து, முதற்கால யாக சாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 7.25 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், பிம்ப சுத்தி, நாடி சந்தானம், திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது.

    அதனை தொடர்ந்து காலை 9.30 மணியளவில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் கோபுரத்தின் விமான கலசத்திற்கு குருக்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர். அப்போது கோவிலை சுற்றி கூடி நின்ற திரளான பக்தர்கள் பக்தி கோஷத்தை எழுப்பினர்.

    அவர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் செல்வ கணபதி, ராஜ ராஜேஸ்வரி, பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை துறைமங்கலம் புதுக்காலனி பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கோவிலில் மண்டல பூஜை நடைபெறுகிறது."

    • காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இன்று முதல் 24 நாட்களுக்கு தினசரி மாலை மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசில் உள்ள சித்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதையொட்டி நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் தொடங்கி நேற்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் அன்னதானம் நடைபெற்றது .

    இன்று சனிக்கிழமை முதல் 24 நாட்களுக்கு தினசரி மாலை மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக ஏற்பாடுகளை காடையூரான்வலசு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×