search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆலோசனை
    X

    கோப்புபடம்.

    பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆலோசனை

    • கோயில் திருப்பணி மேற்கொள்ள அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கொரோனா ஊரடங்கு காலத்தில், கோயில்கள் வருவாய் பெரிதும் பாதித்தது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்தில் இந்து அறநிலைய துறைக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடத்திட அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் பல்லடம் பொன்காளிஅம்மன் கோயிலும் இடம் பெற்றுள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். நீண்ட காலமாக, இந்த கோயில் கும்பாபிசேகம் நடத்தப்படவில்லை. தற்போது, கோயில் திருப்பணி மேற்கொள்ள அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால் அதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் பிரேமா பேசுகையில், கோயிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் பல்லடம் நகர பகுதியில் இருந்தும்,கோயிலுக்கு போதிய வருவாய் இல்லை. நிலத்தை குத்தகைக்கு விடுவதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் இதனால்,கோயில் வருமானம் உயர வாய்ப்பு உள்ளது.கொரோனா ஊரடங்கு காலத்தில், கோயில்கள் வருவாய் பெரிதும் பாதித்தது. அந்தந்த கோயில் வருவாயை அந்த கோயில்களுக்கு மட்டுமே செலவிட முடியும். வங்கி மூலம் கிடைக்கும் வைப்பு தொகை வட்டி கொண்டு தான் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் செய்யப்படுகிறது என்று கூறினார். கோயில் வளாகத்தில் அலுவலக கட்டடம், குடிநீர் வசதி, சுற்றுச்சுவர்உள்ளிட்ட வேலைகள் உள்ளன. முதலில் மதிப்பீடு செய்த பிறகு பணிகள் துவங்கினால் நன்றாக இருக்கும். அதன் பின்னர் செலவு கூடினால் நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்படும்.

    எனவே கோயில் வளாகத்தில் போதிய வசதிகளை செய்த பின்னர் கோயில் திருப்பணி மேற்கொள்வது நல்லதாக இருக்கும். மேலும் அடுத்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×