search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollam thulasi"

    சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் வெட்ட வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசிய மலையாள நடிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். #Sabarimala #KollamThulasi
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், பாரதிய ஜனதா ஆதரவாளரான மலையாள நடிகர் கொல்லம் துளசி, கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் அவர்களை 2 துண்டங்களாக வெட்ட வேண்டும் என்றும் அதில் ஒரு பாதியை கேரள முதல்-மந்திரியின் அலுவலகத்துக்கும், மற்றொரு பாதியை டெல்லிக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினார். அத்துடன் அங்கு கூடி இருந்த பெண்களை பார்த்து, “நீங்கள் யாரும் அங்கு செல்லமாட்டீர்கள். படித்தவர்கள், சூழ்நிலையை உணர்ந்தவர்கள்” என்றும் கூறினார்.

    நடிகர் கொல்லம் துளசி இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவரது பேச்சு குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கொல்லம் துளசி, தான் அவ்வாறு பேசியது தவறு என்றும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறினார். #Sabarimala #KollamThulasi
    சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் என பிரபல மலையாள நடிகர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Sabarimalatemple #rippedinhalf #KollamThulasi
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான கொல்லம் துளசி என்பவர், ‘சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும்'  என்று குறிப்பிட்டுள்ளார்.


    வெட்டப்பட்ட உடலின்  ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என இவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Sabarimalatemple #rippedinhalf  #KollamThulasi
    ×