search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indigo flight"

    • விமானம் புறப்பட இருந்த நிலையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்,
    • பயணிகள் வெளியேற்றப்பட்ட பின்னர் விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    பாட்னா:

    இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்றிரவு 8.20 மணிக்கு, பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார், விமானம் முழுவதையும் சோதனை இடப்பட்டது. 


    இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது புரளி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு புரளியை கிளம்பியதாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அந்த விமானம் தீவிரமாக சோதனையிடப்பட்டது. #IndiGO #BombThreat
    மும்பை:

    மும்பையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ பயணிகள் விமானம் இன்று காலை 6.05 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த  விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து விமான புறப்பாடு நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை.

    விமானம் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு, பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டது. வெடிகுண்டு சோதனை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


    இதுபற்றி இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வேறு ஒரு தனியார்  விமானத்தில் வந்த பயணி, இண்டிகோ சோதனை மையத்திற்கு வந்து சில நபர்கள் இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, அந்த நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று கூறினார். இதையடுத்து வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. தகவல் தெரிவித்த அந்த பயணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது” என்றார். #IndiGO #BombThreat
    இண்டிகோ விமானத்தில் கூடுதல் பொருட்கள் கட்டணம் 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. #IndigoFlight

    சென்னை:

    இண்டிகோ உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களுடன் தலா 15 கிலோ எடையுள்ள பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    15 கிலோ எடைக்கு மேல் பொருட்களை கொண்டு சென்றால், அந்த பொருட்களின் கூடுதல் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பது நடைமுறையில் உள்ளது.

    அதன்படி ஒவ்வொரு பயணியின் 15 கிலோவுக்கு மேல் கூடுதல் 5 கிலோ பொருட்களுக்கு ரூ.1,425-ம், கூடுதல் 10 கிலோவுக்கு ரூ.2850-ம், கூடுதல் 15 கிலோவுக்கு ரூ.4275-ம், கூடுதல் 30 கிலோ பொருட்களுக்கு ரு.8,550-ம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இது அமலில் இருந்தது.

    தற்போது இந்த கூடுதல் பொருட்கள் கட்டணம் 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    புதிய கட்டணப்படி 15 கிலோவுக்கு மேல் பயணிகள் கொண்டு செல்லும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.400 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 5 கிலோ கூடுதல் பொருட்களுக்கு ரூ.1,400, 10 கிலோவுக்கு ரூ.3,800, 15 கிலோவுக்கு ரூ.5,700, 30 கிலோவுக்கு ரூ.11,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியாவின் உள் நாட்டு விமானங்களில் ஒவ்வொரு பயணியும் தலா 25 கிலோ வரை பொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #IndigoFlight

    ஜெய்ப்பூரில் இருந்து இன்று மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைக்காட்சி நடன இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். #IndiGoBombThreat
    ஜெய்ப்பூர்:

    குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 4.52 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இண்டிகோ கால் சென்டருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

    அதில் பேசிய மர்ம நபர், ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

    விமானம் ஏற்கனவே புறப்பட்டுவிட்டதால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். எனினும், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போதிய பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அத்துடன் மிரட்டல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார், மோகித் குமார் டங்க் என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தொலைக்காட்சி நிகழ்சியில் நடன இயக்குனாராக பணியாற்றி வருகிறார்.

    5 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 4.52 மணிக்கே புறப்பட்டு சென்றுவிட்டது. அதற்குள் மோகித் குமார் விமான நிலையம் வந்தடையாத விரக்தியில் 5.30 மணியளவில் இண்டிகோ கால் சென்டரை தொடர்பு கொண்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #IndiGoBombThreat
    ஜெய்ப்பூரில் இருந்து இன்று மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அதிகாரிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. #IndiGoBombThreat
    ஜெய்ப்பூர்:

    குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இண்டிகோ கால் சென்டருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

    அதில் பேசிய மர்ம நபர், ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

    விமானம் ஏற்கனவே புறப்பட்டுவிட்டதால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். எனினும், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போதிய பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மிரட்டல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.  #IndiGoBombThreat
    ×