search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indigo Flight Additional Luggage Charge hike"

    இண்டிகோ விமானத்தில் கூடுதல் பொருட்கள் கட்டணம் 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. #IndigoFlight

    சென்னை:

    இண்டிகோ உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களுடன் தலா 15 கிலோ எடையுள்ள பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

    15 கிலோ எடைக்கு மேல் பொருட்களை கொண்டு சென்றால், அந்த பொருட்களின் கூடுதல் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிப்பது நடைமுறையில் உள்ளது.

    அதன்படி ஒவ்வொரு பயணியின் 15 கிலோவுக்கு மேல் கூடுதல் 5 கிலோ பொருட்களுக்கு ரூ.1,425-ம், கூடுதல் 10 கிலோவுக்கு ரூ.2850-ம், கூடுதல் 15 கிலோவுக்கு ரூ.4275-ம், கூடுதல் 30 கிலோ பொருட்களுக்கு ரு.8,550-ம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இது அமலில் இருந்தது.

    தற்போது இந்த கூடுதல் பொருட்கள் கட்டணம் 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    புதிய கட்டணப்படி 15 கிலோவுக்கு மேல் பயணிகள் கொண்டு செல்லும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.400 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 5 கிலோ கூடுதல் பொருட்களுக்கு ரூ.1,400, 10 கிலோவுக்கு ரூ.3,800, 15 கிலோவுக்கு ரூ.5,700, 30 கிலோவுக்கு ரூ.11,400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏர் இந்தியாவின் உள் நாட்டு விமானங்களில் ஒவ்வொரு பயணியும் தலா 25 கிலோ வரை பொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. #IndigoFlight

    ×