என் மலர்
நீங்கள் தேடியது "இண்டிகோ விமானம்"
- கடந்த ஒருவாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
- மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
முக்கிய தருணத்தில் சிலர் சமயோசிதமாக செயல்பட்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். அப்படி ஒரு ஆட்டோ டிரைவரின் செயல் சமூக வலைத்தளத்தில் பாராட்டை குவித்து வருகிறது.
கடந்த ஒருவாரமாக இண்டிகோ விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்கிடையே மற்ற விமான நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் விமான பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் தனது ஆட்டோவை இண்டிகோ விமானம் போல் மாற்றி அமைத்து கவனம் பெற்றார். அவரது ஆட்டோ பலரின் விருப்பங்களை பெற்று கூடுதல் சவாரிகளை பெற்றுக்கொடுத்தது. அவர் ஆட்டோ இயக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியும் வைரலானது. இருந்தாலும், இந்த வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருத்து பதிவிட்டனர்.
- நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.
- சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்தியாவின் விமான போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. அந்த நிறுவனத்திடம் 434 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மட்டும் 55 சதவீதம் முதல் 68 சதவீதம் வரை உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.
இதனால், நாடு முழுவதும் இன்று 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 7-வது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதங்களால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
- விமானப் ஊழியர்களும் சில பயணிகளும் சேர்ந்து பறவையைப் பிடிக்க முயன்றனர்.
விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்களின் ரத்து மற்றும் தாமதங்களால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து வதோதரா புறப்படவிருந்த இண்டிகோ விமானம் ஒன்றிற்குள் புறா ஒன்று பறந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் இருந்து வதோதராவுக்குச் செல்லவிருந்த இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னதாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக இன்ஸ்டாகிராம் பதிவுகள் தெரிவிக்கின்றன.
வைரலான வீடியோவில், அந்தப் புறா விமானத்தின் உட்புறத்தில் உள்ள பயணிகள் இருக்கைகளுக்கு மேலே, வெளியேறும் வழியைத் தேடிப் பறந்து கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
விமானப் ஊழியர்களும் சில பயணிகளும் சேர்ந்து பறவையைப் பிடிக்க முயன்றனர். இதனால் விமானத்தில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
இந்தப் புறா, விமான நிலையத்தின் கேட் திறந்திருந்த போது அல்லது பயணிகள் ஏறும் போது விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தச் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு பயணி "விமானத்தில் ஒரு திடீர் விருந்தாளி " என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.
- உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
- நேற்று மட்டும் சென்னையில் 100க்கும் அதிகமான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.
இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர். இதை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் தங்கள் விமான கட்டணங்களை பன்மடங்கு அதிகரித்தன.
இந்நிலையில், இன்று 7வது நாளாக சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்படைந்துள்ளது.
சென்னையில் நிர்வாக காரணமாக இன்று 38 புறப்பாடு. 33 வருகை என 71 விமான சேவை ரத்தாகியுள்ளதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- டிசம்பர் 3ம் தேதி ஹூப்பள்ளியில் வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
- டிசம்பர்-2 காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர்.
பெங்களூரு:
கர்நாடகத்தின் ஹூப்பள்ளியைச் சேர்ந்தவர் மேகா க்ஷீரா சாகர். இவர் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கிராம் தாஸ் என்பவரை காதலித்து நவம்பர் 23-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். டிசம்பர் 3ம் தேதி மேகாவின் சொந்த ஊரான ஹூப்பள்ளியில் ரிசப்ஷனுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
ரிசப்ஷனில் கலந்து கொள்வதற்காக மணமக்கள் இருவரும் புவனேஸ்வரிலிருந்து பெங்களூருவிற்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் டிசம்பர் 2ம் தேதி விமானத்தில் முன்பதிவு செய்தனர். அதேபோல், சில உறவினர்களுக்கும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, டிசம்பர் 2-ம் தேதி காலை முதல் மறுநாள் அதிகாலை வரை விமானம் தாமதம் என இன்டிகோ ஊழியர்கள் கூறினர். அதன்பின், விமானம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தனர். ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விமானங்கள் ரத்தானது என விமான நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், விமானம் ரத்தானதால் மணமக்கள் ஹூப்பளி செல்ல முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி புவனேஸ்வரில் இருந்தபடியே வீடியோ காலில் பங்கேற்றனர். ஹூப்பள்ளியில் உறவினர்கள் இருந்தபடி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஹூப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்த மேடையில், மணமக்களுக்குப் பதிலாக மணமகளின் பெற்றோர் அமரவைக்கப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
- ரத்தான விமான டிக்கெட்டிற்கான பணமும் திருப்பி தரப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
- குழு 15 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இண்டிகோ நிறுவனத்தின் இச்செயலுக்கு பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ரத்தான விமான டிக்கெட்டிற்கான பணமும் திருப்பி தரப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படும் சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து விவகாரத்தை கண்காணிக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இப்பிரச்சினை பற்றி விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழு 15 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றும் நாடு முழுவதும் இண்டிகோ விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இண்டிகோவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள்...
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்...
- சென்னையில் இன்று 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட இருந்த அனைத்து இண்டிகோ விமானங்களும் இன்று (டிச.5) மாலை 6 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
- நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், சென்னை உள்பட பயணிகள் விமான நிலையத்தில் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.14,961ஆக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமான கட்டணம் ரூ.6,805-ல் இருந்து ரூ.34,403 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான கட்டணம் ரூ.5,980-ல் இருந்து ரூ.42,448 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமான கட்டணம் ரூ.7,746-ல் இருந்து ரூ.32,782 வரை உயர்ந்துள்ளது.
- சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவையும் ரத்து.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவை என நேற்று இரவு 8 மணி முதல் தற்போது வரை 65 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
- இண்டிகோ விமான நிறுவனம் ஒரே நாளில் முக்கிய 3 நகரங்களில் விமானங்களின் சேவையை ரத்துசெய்தது.
- மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மும்பை:
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக இன்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது.
மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்களும், பெங்களூருவில் 73 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கடந்த நவம்பரில் மட்டும் ,1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்துசெய்யப்பட்டது. ஊழியர்கள் வேலைநிறுத்தம், வான் போக்குவரத்து கட்டுப்பாடு கோளாறு மற்றும் விமானம், விமான நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகியவற்றால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ரத்து தொடர்பாக இண்டிகோ நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
- இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது இறத்தல் வந்தது.
- 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இன்று காலை 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது.
விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தபோது ஐதராபாத் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் இந்தத் தாக்குதல் 1984 சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பைப் போலவே இருக்கும் என்றும், ஐஎஸ்ஐ இந்த தாக்குதலைத் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உஷாரான விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவிக்கவே விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டு சோதனை நடந்தது. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவரவே விமானம் மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றது.
ஆகஸ்ட் 2, 1984 அன்று சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
- டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






