search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian navy"

    இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ விமானம்தாங்கி போர் கப்பலில் இன்று ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடிய லெப்டினன்ட் கமாண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். #KarwarHarbour #FireOnboardVikramaditya #INSVikramaditya
    பெங்களூரு:

    இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ விமானம்தாங்கி போர் கப்பல் இன்று பிற்பகல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் துறைமுகத்துக்குள் நுழைந்தபோது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியது.



    அங்கிருந்த உபகரணங்களை வைத்து தீயை போராடி அணைத்தவர்களில் ஒருவரான லெப்டினன்ட்  கமாண்டர்  டி.எஸ்.சவுகான் பலத்த தீக்காயங்களுடன் அருகாமையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக துறைரீதியான விசாரணைக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #KarwarHarbour #FireOnboardVikramaditya #INSVikramaditya 
    தொழில்நுட்ப கோளாறால் கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த வீரர்கள் 3 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். #IndianNavy #Helicopter #ArabianSea
    புதுடெல்லி:

    இந்திய கடற்படை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கடற்படை போர்க்கப்பல் அரபிக்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அந்த கப்பலில் இருந்த சேத்தக் ஹெலிகாப்டரில் நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் 3 பேர் கடந்த வாரம் வானில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹெலிகாப்டரில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. வீரர்கள் அதனை சரிசெய்ய முயன்றும் முடியவில்லை.

    இதனால் அவர்கள் ஹெலிகாப்டரை லாவகமாக கடலில் இறக்கிவிட்டு, அதில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர். அந்த ஹெலிகாப்டர் கடலில் மூழ்கிவிட்டது. ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இந்திய கடற்படையின் தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கை துணை தளபதி பிமல் வர்மா இன்று திரும்பப் பெற்றார். #IndianNavy #KarambirSingh #BimalVerma #ViceAdmiral #Navychief
    புதுடெல்லி:

    உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் 31-5-2019 அன்று முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

    இந்த நியமனத்தை எதிர்த்து ஆயுதப்படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் கடற்படை துணை தளபதி பிமல் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கரம்பிர் சிங்


    பணிமூப்பு அடிப்படையில் தளபதி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்காமல் கரம்பிர் சிங்-கை நியமனம் செய்தது தவறு என தனது முறையீட்டில் பிமல் வர்மா குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையில், பிமல் வர்மா தனது முறையீட்டை துறைசார்ந்த குறைகேட்பு முகாம் மூலம் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என கடற்படை உயரதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இதனையேற்று, கடற்படையின் தளபதியாக  கரம்பிர் சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கை துணை தளபதி பிமல் வர்மா இன்று திரும்பப் பெற்றார். #IndianNavy #KarambirSingh #BimalVerma #ViceAdmiral  #Navychief
    இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்த கடலோர காவல் படையினர் அவர்களை சென்னை துறைமுக பொறுப்பு கழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். #Srilankanfishermen #Arrested
    ராயபுரம்:

    இந்திய கடலோர காவல் படையினர் ஐ.சி.ஜி.எஸ். ஆனந்த் கப்பலில் தமிழக- ஆந்திரா எல்லை ககல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது இலங்கையை சேர்ந்த விசைப்படகில் 5 மீனவர்கள் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் 5 பேரையும் இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்த ரோகன்பெரைரா, அந்தோணி பெர்னாண்டோ, பெரைரா, பெருமாள்ராஜ், சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. அவர்கள் வந்த படகையும் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 5 பேரையும் இன்று அதிகாலை கரைக்கு கொண்டு வந்து சென்னை துறைமுக பொறுப்பு கழக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #Srilankanfishermen #Arrested

    இந்திய கடற்படைக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. #helicoptersprocurement #111Navyhelicopters
    புதுடெல்லி:

    நாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், 3,364 கோடி ரூபாய் செலவில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும்  24,879 கோடி ரூபாய்க்கு பிற ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தத்தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கொள்முதலுக்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். #helicoptersprocurement   #111Navyhelicopters  
    பாய்மரப்படகில் உலகம் முழுவதும் சுற்றி வந்த 6 பெண் கடற்படை அதிகாரிகளுக்கு நவ சேனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #NavSena #IndianNavy
    புதுடெல்லி:

    இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் 6 பெண் அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாய்மரப்படகு மூலம் உலகை சுற்றி வரும் சாகச பயணத்தை தொடங்கி கடந்த மே மாதம் நாடு திரும்பினர்.

    6 கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பயணத்தில், எரிபொருள் நிரப்புவது, பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்காக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் மற்றும் ஃபாக்லண்டஸ் ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டது. இந்த படகு 5 நாடுகளுக்கு சென்றுள்ளது. 4 கண்டங்களை தாண்டி, 3 பெருங்கடல்களை கடந்து 8 மாதங்களில் உலகை சுற்றி வந்து சாதனைப் படைத்துள்ளது.

    லெப்டினண்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான கமாண்டர் பிரதிபா ஜம்வால், ஸ்வாதி, ஐஸ்வரியா போடாபதி, விஜய தேவி மற்றும் பாயல் குப்தா ஆகிய 6 பெண்கள் கொண்ட குழு இந்த சாதனையை புரிந்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாரினி படகு இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சிறப்புக்குரிய அம்சமாகும்.

    இந்நிலையில், 6 பெண் அதிகாரிகளுக்கும் கடற்படையில் வழங்கப்படும் உயரிய விருதான நவ சேனா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ×