search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Air Force"

    அரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா கூறி உள்ளார். #Pulwamaattack #BSDhanoa
    பொக்ரான்:

    ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி இரவு, பகலாக நடந்து வருகிறது. அதில், விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா பேசியதாவது:-

    தேசத்தின் பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதிலும், இறையாண்மையை பாதுகாப்பதிலும் விமானப்படையின் திறனில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் உரிய பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம்.



    கடமைகளை நிறைவேற்றுவதில் எப்போதும் முன்வரிசையில் இருப்போம். மரபு ரீதியான போரில் நம்மை தோற்கடிக்க முடியாது என்பது எதிரிக்கே தெரியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Pulwamaattack #BSDhanoa
    ராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் பகுதியில் இன்று இந்திய போர் விமானங்களின் நிகழ்த்திய மெய்சிலிர்க்கும் சாகசங்களை விமானப்படை தளபதி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். #IAchief #SachinTendulkar
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னர் இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்திய பொக்ரான் பகுதியில்  இந்திய விமானப்படையின் வல்லைமையையும், நமது வெடிகுண்டுகளின் ஆற்றலையும் பறைசாற்றும் வகையில் ‘வாயு சக்தி’ என்று போர் சாகசப் பயிற்சிகள் இன்று நடைபெற்றன.



    இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து, சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி சாகங்களை நிகழ்த்தின.



    மெய்சிலிர்க்கும் இந்த சாகசக் காட்சிகளை இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். #IAchief #BSDhanoa #SachinTendulkar #IAchiefwitness #Sachinwitness #VayuShakti2019 #Pokranrange
    தஞ்சையில் விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாமுக்கு 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
    தஞ்சாவூர்:

    இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் தஞ்சையில் உள்ள சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இந்த முகாம் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    முதல் கட்டமாக இன்று தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று நடந்த முகாமில் அரியலூர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு உடற்திறன் மற்றும் எழுத்து தேர்வு ஆகியவை நடத்தப்படுகிறது. முகாமை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, ஆர்.டி.ஓ.சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    இதில் டெல்லி குரூப் கமாண்டர் ஸ்ரீவர்சன் மற்றும் வின்கமாண்டர் சைலேஷ்குமார், ஜமால் ஆகிய அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆள்சேர்ப்பு முகாமில் ஈடுபட்டனர்.

    இன்று காலை தஞ்சையில் விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாமுக்கு 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு நடைபெறுகிறது. #tamilnews
    நாசிக்கில் விமானப்படைக்கு சொந்தமான சுகோய் ரக விமானம் சோதனை ஓட்டத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
    மும்பை :
     
    மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளாகி தரையில் விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்து விமானிகள் அவசரகால வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர்.

    நாசிக்கில் தயாரிக்கப்பட்ட இந்த சுகோய் ரக விமானத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. சோதனைகளின் முடிவில் இந்திய விமானப்படையில் விமானத்தை சேர்க்க திட்டமிடப்படிருந்தது.

    இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×