search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grocery store"

    தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடையின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்த 82 கிலோ குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வரலால் என்பவருடைய மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை மறைத்து வைத்திருப்பதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கடையின் மேற்கூரையில் மறைத்து 3 மூட்டைகளில் குட்கா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூட்டைகளை வெளியே எடுத்து பார்த்தனர். அதில் மொத்தம் 82 கிலோ குட்கா இருந்தது. இவற்றை பறிமுதல் செய்து மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்டமாக மளிகை கடையின் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேல் நடவடிக்கை எடுப்பதற்காக  தாதகாப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்து மாரியப்பன் கூறியதாவது:-

    மளிகை கடையில் குட்கா விற்பனை செய்வதாக எங்களுக்கு ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சோதனையிட்டு, குட்காவை பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் இருக்கும். கடந்த 3 மாதத்தில் இதுவரை 550 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்டுள்ள குட்காவை விற்பனை செய்தால் அல்லது பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோவை அருகே மளிகை கடை ஒன்றில் 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து குட்கா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கோவை:

    கோவை புலியகுளம் பகுதியில் மளிகை கடை ஒன்றில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

    அதன்பேரில் கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு குட்கா விற்பனைக்காக இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் சுயம்புவிடம் (வயது 36) விசாரணை நடத்தினர்.

    அப்போது கடைக்கு அருகே உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து விற்பனைக்காக குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கிருத்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இது குறித்து சுயம்புவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக கோவையில் உள்ள 55 ஆவின் பாலகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது 14 கடைகளில் இருந்து 12.5 கிலோ கலப்பட டீத்தூள், 15 கிலோ அதிக நிறம் கலக்கப்பட்ட உணவு பொருட்கள், 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர். சோதனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    புலியகுளத்தில் சுயம்பு என்பவரது பெட்டிக்கடையில் இருந்து 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    பெங்களூரில் இருந்து தனியார் பஸ்கள், ரெயில்களில் குட்கா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக புகார் கூறப்படுகிறது. எனவே கோவைக்கு வரும் ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் அதிகாலை நேரத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gutka
    திருச்செந்தூரில் மளிகை கடையின் சுவரை துளையிட்ட மர்ம நபர்கள் தங்கம், நகை உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் மெயின் ரோட்டில் இரும்பு ஆர்ச் அருகே ஒரு மளிகை கடை உள்ளது. இந்த கடையை திருச்செந்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடித்து கடையை வழக்கம்போல பூட்டி சென்றனர்.

    இன்று அதிகாலை ராதாகிருஷ்ணனின் மகன் சீதாராமன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பக்க சுவரில் ஜன்னல் அருகே சுவரில் பெரிய துளை போடப்பட்டிருந்ததை பார்த்தார். சந்தேகம் அடைந்த சீதாராமன் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் மேஜையில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை கொள்ளைபோயிருந்தன.

    அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து நகை -பணத்தை அள்ளிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி திருச்செந்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த மளிகை கடையின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் திருட்டு கும்பல் குறித்த காட்சிகள் பதிவாகியிருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    பொள்ளாச்சியில் நேற்று இரவு மளிகை கடை சுவற்றை துளையிட்டு ரூ.5.35 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் நந்தகுமார் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஜெயக்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில் கடையின் மேலாளர் நேற்று மதியம் 2 மணிக்கு ரூ 5.35 லட்சத்தை இரும்பு பெட்டியில் வைத்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை கடைக்கு வந்து பார்த்த போது , கடையின் பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ. 5.35 லட்சத்தை திருடியிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த மேற்கு போலீசார் சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

    மேலும் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாமூர்த்தி உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சின்னகாமனன், காவலர் சந்திரன் தனிப்படை அமைத்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×