search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl students suicide attempt"

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் கோவையை சேர்ந்த 2 மாணவிகள் தோல்வியடைந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் செந்தில் குமார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பிரியா (19). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் மாணவி பிரியா தோல்வி அடைந்து இருந்தார். இதனால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    திடீரென அவர் போலீஸ் குடியிருப்பு முதல் மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். கீழே பிரியாவின் தாய் ஜெயலட்சுமி நின்று கொண்டிருந்தார். அவர் மீது பிரியா விழுந்தார்.

    மாடியில் இருந்து கீழே குதித்ததில் பிரியாவின் இடது கையில் காயம் ஏற்பட்டது. அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வெரைட்டி ஹால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்- 2 மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் கோவை சிங்காநல்லுரை சேர்ந்தவர் வசந்த்பாபு. இவரது மகள் ஏஞ்சலின் ஜெனிபர். (வயது18). பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் அவர் தோல்வியடைந்தார். இதனால் மனம் உடைந்த மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் வீட்டில் கழிவறையில் வைத்திருந்த பினாயிலை எடுத்துகுடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த உறவினர்கள் மாணவி ஏஞ்சலின் ஜெனிபரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×