search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha idol"

    • தொண்டி அருகே விநாயகர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சிலையை பாதுகாத்து வருகிறார்கள்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோவில் உள்ளது.

    இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் நல இயக்கத்தின் தலைவர் இளையராஜா சார்பில் பக்தர்கள் வழிபாட்டிற்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைக்கு சேதம் ஏற்படாமலும், அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சிலையை பாதுகாத்து வருகிறார்கள்.

    2 தினங்களில் பாகம்பிரியாள் அம்மன் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து திருவெற்றியூர் கண்மாயில் இந்த சிலை கரைக்கப்படுகிறது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 308 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர்.
    • பக்தர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாலையிலேயே வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில் 308 சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோவில், மண்டபம், தேவிபட்டினம், கீழக்கரை சக்தி விநாயகர் கோவில், ஏர்வாடி வெட்டமனை, தொத்தன் மகன்வாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    உலக நன்மை வேண்டியும் கல்வி, குடும்பம், திருமண தடை நீங்கி சிறப்படையவும் கூட்டுப் பிராத்தனையும் நடந்தது. ராமநாதபுரம் போலீஸ் சப்-டிவிசனில் 64, பரமக்குடி 66, கமுதி 17, ராமேசுவரம் 103, கீழக்கரை 33, திருவாடானை 14, முதுகுளத்தூர் போலீஸ் சப் டிவிசனில் 11 என மாவட்டத்தில் மொத்தம் 308 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    சிலைகள் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் (வியாழன், வெள்ளிக்கிழமை) நீா் நிலைகளில் அவை கரைக்கப்படுகின்றன.

    பக்தர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாலையிலேயே வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர். விநாயகருக்கு உகந்த சுண்டல், கொழுக்கட்டை, கடலை, பொங்கல் அவல், பொரி போன்ற பொருட்களை வைத்து படையலிட்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்படி விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நேற்று மாலை முதல் போலீசார் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் அருளொளி விநாயகர் கோவிலில் சுமங்கலி பெண்கள் உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை செய்தனர்.

    இந்த கோவலில் இருந்து காலை 9 மணிக்கு நாக மண்டகப்படி சென்று பால்குடம் எடுக்கும் விழா நடந்தது. சொற்பொழிவு, அன்னதானம் நடந்தன. பல்வேறு கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை அருளொளி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • பல்வேறு வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது
    • இளைஞர்களும் பொதுமக்களும் சிலை அருகே செல்பி எடுத்து உற்சாகம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி மோட்டார் சைக்கிளில் விநாயகர் செல்லும் காட்சி போல் விநாயகர் சிலைகள் உள்ளிட்ட பல்வேறு வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

    ஒரு அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. விநாயகர் சிலைகள் மிகவும் அழகிய வடிவிலும் பலவகைப்பட்ட ரகங்களிலும் குறைந்த அளவில் விற்பனைக்கு தயாராக வந்து இறங்கியுள்ளது. 75-ம் ஆண்டு சுதந்திரம் தினத்தை முன்னிட்டு தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் விநாயகர் செல்லும் சிலை விற்பனைக்கு வந்துள்ளது.

    இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் மேலும் இளைஞர்களும் பொதுமக்களும் தேசிய கொடியுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் விநாயகர் சிலை அருகே செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    ×