search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganapathi"

    விநாயகர் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை.
    விநாயகர் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. விநாயகர் ஜாதகத்தை அச்சிட்டோ, வரைந்தோ அதன் கீழ் விநாயகருக்குரிய பாடலை எழுதி, பூஜை அறையில் வைத்து கோலமிட்டு வழிபட உள்ளம் மகிழும் சம்பவங்கள் தினமும் நடைபெறும்.

    இந்த ஜாதகத்தை வியாபார இடத்தில் வைத்தால் வியாபார விருத்தி ஏற்படும். சூரியனை வெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும், வியாழனை தலையிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு விநாயகர் காட்சியளிக்கிறார். இத்தகைய நவகிரக விநாயகரை மனமார நினைத்து வழிபடுபவர்களுக்கு, நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் வராது.

    நவக்கிரகங்களும் விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இடம் பெறறுள்ளனர். விநாயகரை வழிபட்டால் அவர்களையும் வழிபட்டதாகவே பொருள்.
    நவக்கிரகங்களும் விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகத்தில் இடம் பெறறுள்ளனர். விநாயகரை வழிபட்டால் அவர்களையும் வழிபட்டதாகவே பொருள். எனவே விநாயகரை வழிபடுபவர்களை நவக்கிகரங்கள் இம்சிப்பதில்லை, மாறாக நன்மையே செய்வார்கள் என்பது ஐதீகம்.

    நெற்றி     - சூரியன்
    நாபி     - சந்திரன்
    வலது தொடை - செவ்வாய்
    இடது தொடை - கேது
    வலது கையின் மேல்    - சனி
    வலது கையின்கீழ்     - புதன்
    இடது கையின் மேல் - ராகு
    இடது கையின் கீழ்    - சுக்கிரன்
    தலையில்     - வியாழன்

    ஆகிய கிரகங்கள் உள்ளதாக விநாயக புராணம் கூறுகின்றது. இந்த அமைப்பில் விநாயகரைக் காண கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இவரை வழிபடுபவதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
    விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
    விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
    மருத இலை - மகப்பேறு
    மருவு இலை - துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
    எருக்க இலை - குழந்தைப் பேறு
    அரச இலை - எதிரிகள் அழிவார்கள்
    அகத்தி இலை - துயரங்கள் நீங்கும்
    அரளி இலை - அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
    வில்வ இலை - இன்பங்கள் பெருகும்
    வெள்ளெருக்கு - சகலமும் கிடைக்கும்
    மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
    கண்டங்கத்திரி இலை    - லட்சுமி கடாட்சம்
    விநாயகரை கீழ்க்கண்ட மலர்களைக் கொண்டு பூஜித்தால் நமக்கு அனைத்து விதமான பலன்களும் கிட்டும். எந்த மலர் வழிபாடு என்ன பலனைத்தரும் என்று பார்க்கலாம்.
    விநாயகரை கீழ்க்கண்ட மலர்களைக் கொண்டு பூஜித்தால் நமக்கு அனைத்து விதமான பலன்களும் கிட்டும்.

    1. மல்லிகை, முல்லை - தீயவை நீங்கும்
    2. ரோஜா - எண்ணங்கள் ஈடேறும்
    3. பட்டு ரோஜா - இறையருள் பெறலாம்
    4. அரளிப்பூ - மனநிம்மதி கிடைக்கும்
    5. தாமரைப்பூ - செல்வ வளம் பெருகும்
    6. வெள்ளைத் தாமரை - சகல சக்தி கிடைக்கும்.
    7. வில்வப்பூ - அரச பதவி பெறலாம்
    8. சங்குப் பூ - பெருஞ்செல்வம் கிட்டும்
    9. ஜாதிப்பூ - வைகுண்ட பதவி கிட்டும்
    10. அல்லிப் பூ - வளம் தரும்
    11. விருட்சப் பூ - நோய்கள் நீங்கும்
    12. எருக்கம் பூ - மன தைரியம் பெறலாம்
    13. மகிழம்பூ - பொறுமை தரும்
    14. செவ்வந்திப் பூ - ஆன்மீக உயர்வு பெறலாம்
    15. பவளமல்லிகை - நல்ல எண்ணம் வளரும்
    ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர தசை இருக்குமானால் அவருக்கு என்னென்ன பலன்கள் கிட்டுமென ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர தசை இருக்குமானால் அவருக்கு என்னென்ன பலன்கள் கிட்டுமென ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. சுக்கிர தசையைச் செல்வம் பெருகும் காலமாகச் சாதாரண மக்கள் கூட தெரிந்து வைத்துள்ளனர்.

    சுக்கிரனை ‘உயர் வெள்ளி’ என்றும் அழைக்கிறார்கள். இவரது ஆட்சி ஒருவரது வாழ்வில் நடக்கும் காலத்தில் வண்டி, வாகனங்கள் வாங்கும் சூழல் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்குத் திருமண பிராப்தி ஏற்படும். நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

    சுவைமிக்க உணவைத்தருவார். உயர்வகை ஆபரணங்களை அணியச் செய்வார். விலை உயர்ந்த வஸ்திரங்களை வாங்கித் தருவார். சுபவலிமை பொருந்திய சுக்கிர தசையில் நிலம் வாங்குவார்கள். வீடு கட்டுவார்கள். மென்மையான படுக்கையில் படுக்கும் வாய்ப்புக் கிடைக்கும். மலர் மாலைகள் சங்கீதத்தில் ஈடுபாடு தோன்றும்.

    ஆனால் சுக்கிர தசையில் ஒரு எச்சரிக்கையை மனதில் கொள்ள வேண்டும். சுக்கிரதசை எல்லாப் போகங்களையும் கொடுக்கும். இதற்கு ஜாதகத்தில் சுக்கிரன் சுபனாக அமைந்திருக்க வேண்டும். இந்த சமயத்தில் ஜாதகனுக்கு சபல புத்தி ஏற்படும். இதைப் பயன்படுத்தி தவறான வழியில் செல்வதோ, தவறான முறையில் பொருள் சேர்க்கவோ செய்தால் சுக்கிர தசை முடிந்ததும் அவர் பெரும் நோயைக் கொடுத்து விடுவார். எனவே சுக்கிர தசையின் போது மனக்கட்டுப்பாடு மிகமிக அவசியம்.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.
    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன. ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன. அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

    பாலபிஷேகம்: வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றிப் பாலபிஷேகம் செய்தால் புத்திரப்பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்: செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்குச் சந்தனத்தால் அபிஷேகம் செய்யச் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத் திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

    தேனபிஷேகம்:
    திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றா மரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார். அங்கு வரும் பக்தர் கள் அனைவரும் கைகளா லேயே அவருக்கு விபூதி. அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.
    விநாயகருக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
     
    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்: மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநா யகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்: திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

    நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மை யான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும்.

    தண்ணீர் அபிஷேகம்: மனசாந்தி ஏற்படும்.

    பஞ்சாமிர்த அபிஷேகம்: அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்கும்.

    மஞ்சள் பொடி அபிஷேகம்: அனைவரும் நமக்கு உதவ முன்வருவார்கள். ராஜவசியம் உண்டாகும்.

    தயிர் அபிஷேகம்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    இளநீர் அபிஷேகம்: கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி, புத்தி தெளிவு பெறும்.

    கரும்புச்சாறு அபிஷேகம்: வியாதிகள் நீங்கும், கல்வியிலும், சாஸ்திரங்களிலும் ஆர்வமும், திறமையும் உண்டாகும்.

    அரிசி மாவுப்பொடி அபிஷேகம்: லட்சுமி வாசம் உண்டாகும். தாராளமாக பணம் புரளும். கடன் தீரும்.

    எலுமிச்சை பழம் அணிவித்தால்: ஜாதகத்தில் இருக்கும் போக்கும், துர்க்கையின் அருளாசி கிடைக்கும். எம பயம் நீங்கும்.

    மலர்களால் அர்ச்சனை செய்தால்: இல்லத்தில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வசந்தமான வாழ்க்கை அமையும்.
    நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும். மனித உடலில் அவன் செய்த வினைப்பதிவுகள் அனைத்தும் மூலாதாரச் சக்கரம் என்று சொல்கின்ற முதல் சக்கரத்தில் பதிந்துள்ளது.
    கணம் என்றால் உடல் என்ற பொருள் உண்டு. இந்த கணத்திற்கு-உடலுக்கு அதிபதி கணபதி. ஆம் இவரே முழு முதற்கடவுள். நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப நமது உடல் அமையும். மனித உடலில் அவன் செய்த வினைப்பதிவுகள் அனைத்தும் மூலாதாரச் சக்கரம் என்று சொல்கின்ற முதல் சக்கரத்தில் பதிந்துள்ளது. அதற்கு நாயகன் விநாயகர் ஆவார்.

    வினைகளுக்கு நாயகன் விநாயகன். மனிதனுடைய வெவ்வேறு வினைகளை வேரோடு அறுத்து மங்களத்தைக் கொடுப்பவர் விநாயகர் ஒருவரே.
    மனித உடல் ஓர் அற்புத இறை சக்தியை உள் அடக்கிய பெட்டகம். இந்த உடல் உள் உறுப்புக்களை இயக்குவது வெவ்வேறு சக்கரமாகும். முக்கியமாக ஆறு ஆதார சக்கரங்களை நம் முன்னோர் வழிவந்த சித்தர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர். இதில் எல்லா சக்கரத்திற்கும் மூல ஆதாரச் சக்கரமாக முதல் சக்கரம் இருக்கிறது. அதற்கு தலைவர் கணபதி. இவர் பச்சைக்கொடி காட்டினால்தான் நாம் அடுத்தடுத்த சக்கரத்திற்கு செல்ல முடியும்.

    உடம்பில் உள்ள முக்கியச் சக்கரங்கள்

    மூலாதாரம்     - கணபதி
    சுவாதிஷ்டானம் - பிரம்மா, சரஸ்வதி
    மணிபூரகம்     - மகாவிஷ்ணு, மகாலெஷ்மி
    அனாகதம்     - சிவன், பார்வதி
    விசுக்தி - அர்த்தநாரீஸ்வரர்
    ஆக்ஞை - சதாசிவம்
    சிதாகாசம் - வெட்டவெளி

    யோகம் என்றால் இணைதல் என்று பொருள். மனம், உடல் ஆன்மாவுடன் லயமாவதே யோகம். இதற்கு நம் வினைகள் தடையாக உள்ளன. இந்த கர்ம வினையை அகற்றுவதற்கு நாம் கணபதியை நம் உடம்பில் உள்ள மூலாதாரச்சக்கரத்தில் எப்படி தியானிப்பது என்பதை தெரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் கணபதியின் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழலாம். செல்வம் செழிக்கும்.

    ஆரோக்கியம் கைகூடும். புகழ் பெருகும். உடல், மன அமைதி கிடைக்கும்.
    இந்த சக்கரா தியானத்தில் கூட மற்ற சக்கரங்களில் தியானம் செய்ய நெறிமுறைகளோடு செய்ய வேண்டும். ஆனால் மூலாதாரத் தியானம் பயப்படாமல் செய்யலாம். எந்த பக்க விளைவும் கிடையாது. காரணம் இதில் நம்ம பிள்ளையார் அல்லவா அதிபதி!
    ஒவ்வொரு ஊர்களிலும் விநாயகர்கள் வித்தியாசமாக உருவத்தில் காட்சி அளிக்கிறார். அந்த வகையில் எந்த ஊரில் எந்த உருவில் காட்சி அளிக்கிறார் என்று பார்க்கலாம்.
    திருவாரூர் அருகே உள்ள திலதைப் பதியில் தும்பிக்கை இல்லாத, நர முக விநாயகரை தரிசிக்கலாம்.

    திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், கையில் கரும்பேந்தி காணப்படுகிறார்.

    திருச்செங்கோட்டில் மனித முகத்தோடு அருளும் விநாயகரை வழிபடலாம்.

    சங்கரன்கோவிலில் நாகபாச விநாயகர், தனது கையில் பாம்புடன் காட்சியளிக்கிறார்.

    தக்கலை அருகே உள்ள கேரளபுரம் விநாயகர், ஆறு மாதம் கறுப்பாகவும், ஆறு மாதம் வெள்ளை நிறத்திலும் காட்சி தருகிறார்.

    மாங்காடு வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் மாங்கனி ஏந்தி இருக்கிறார்.

    தில்லைக் காளி ஆலயத்தில் ஏழு கரங்களுடன் கூத்தாடும் விநாயகரை தரிசிக்கலாம்.

    ராமேஸ்வரம் ஆலயத்தின் கொடிமரம் அருகே 18 கரங்கள் கொண்ட விநாயகர் அருள்கிறார்.

    புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆறுமுகங்களுடன் அருள்பாலிக்கிறார்.

    சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் இரண்டு கைகளிலும் கொழுக்கட்டையை ஏந்தியிருக்கிறார்.

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பத்து கரங்களைக் கொண்ட விநாயகர் அருள்புரிகிறார். 
    ×