search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female victim"

    • துப்பட்டா கழுத்தை இறுக்கி தலையில் அடிபட்டதால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கன்னிகா பரமேஸ்வரி.

    திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு கிராமத்தில் ஊர் புற நூலகராக கன்னிகா பரமேஸ்வரி பணியாற்றி வந்தார். முரளிக்கு சொந்தமாக தானியங்கள் அரைக்கும் ரைஸ் மில் உள்ளது.

    இந்த ரைஸ்மிலில் இன்று காலை கன்னிகா பரமே ஸ்வரி தானியம் அரைத்து கொ ண்டிரு ந்தார். அப்போது எதிர்பா ராதவித மாக எந்திரத்தில் கழுத்தில் போட்டிருந்த துப்பட்டா பெல்ட் சக்கரத்தில் சிக்கியது. இதில் கழுத்து இறுக்கி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கன்னிகா பரமேஸ்வரி இறந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னிகா பரமேஸ்வரி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓலையை எடுத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யார் அருகே உள்ள வட ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த காசி என்பவர் மனைவி சரளா (வயது 55) விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    கடந்த 27-ந் தேதி சரளா அடுப்பு பற்ற வைப்பதற்காக வீட்டின் பின்புறம் இருந்த பண ஓலையை எடுத்துக் கொண்டிருந்தபோது அதிலிருந்த குளவிகள் சரளாவின் முகம், கால், கை, தலை ஆகிய பகுதிகளில் கொட்டியதால் வீக்கம் ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டார்.

    அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள அரியபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் விவசாயி.இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 41).இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன், உள்ளனர்.

    விஜயலட்சுமி அரியபாடி கிராமத்தில் உள்ள இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது கிணற்றின் அருகே மாடு மேய்த்துக் கொண்டு இருந்தது.

    அப்போது அதனை விரட்டுவதற்காக கிணற்றின் அருகே விஜயலட்சுமி சென்றார். எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரணமல்லூர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து இறந்த விஜயலட்சுமியின் உடலை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் ஆட்டோ, மொபட் மோதியதில் தவறி விழுந்த பெண் மீது தனியார் பஸ் ஏறி இறங்கியதில் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு பெரிய அக்ரஹாரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி முபின்தாஜ் (வயது 40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    முபின்தாஜ் பழைய பாளையத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் தினமும் தனது மொபட்டில் ஈரோடு பெரிய அக்ரஹார வீதியில் இருந்து பழைய பாளையத்துக்கு சென்று வருவார்.

    இன்று வழக்கம்போல் முபின்தாஜ் தனது மொபட்டில் பழைய பாளையம் சங்குநகர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு முன்னால் ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. பின்னால் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு செல்லும் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் எதிர்பாராவிதமாக ஆட்டோவும் முபின்தாஜ் வந்த மொபட்டும் மோதிக்கொண்டன.இதில் நிலை தடுமாறிய முபின்தாஜ் ரோட்டில் விழுந்தார்.

    அந்த சமயத்தில் பின்னால் வந்த தனியார் பஸ்சின் சக்கரம் முபின்தாஜ் தலை மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முபின்தாஜ் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்து நடந்ததும் பஸ்சின் டிரைவரும் கண்டக்டரும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். இந்த விபத்து காரணமாக அங்கு கூட்டம் கூடியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முபின்தாஜின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

    அவர் தனது மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது.

    மனைவி முபின்தாஜ் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுத அவரது கணவர்

    விபத்து காணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். பின்னர் முபின்ராஜின் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. #tamilnews
    திருக்கனூர் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே காட்டேரிகுப்பம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன். விவசாயி. இவரது மனைவி சங்கரி (வயது 38).

    இவர் நேற்று காரில் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வயல்வெளிக்கு ஓட்டி சென்றார்.

    அப்போது வயல் வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் சங்கரி மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சங்கரியை அருகில் வயல் வேலையில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி பலியான சங்கரிக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×