என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரிசி அரைக்கும் ஆலை.
ஆலையில் எந்திரத்தில் சிக்கி பெண் பலி
- துப்பட்டா கழுத்தை இறுக்கி தலையில் அடிபட்டதால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கன்னிகா பரமேஸ்வரி.
திருப்பத்தூர் அடுத்த இருனாப்பட்டு கிராமத்தில் ஊர் புற நூலகராக கன்னிகா பரமேஸ்வரி பணியாற்றி வந்தார். முரளிக்கு சொந்தமாக தானியங்கள் அரைக்கும் ரைஸ் மில் உள்ளது.
இந்த ரைஸ்மிலில் இன்று காலை கன்னிகா பரமே ஸ்வரி தானியம் அரைத்து கொ ண்டிரு ந்தார். அப்போது எதிர்பா ராதவித மாக எந்திரத்தில் கழுத்தில் போட்டிருந்த துப்பட்டா பெல்ட் சக்கரத்தில் சிக்கியது. இதில் கழுத்து இறுக்கி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கன்னிகா பரமேஸ்வரி இறந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கன்னிகா பரமேஸ்வரி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






