search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fell"

    விழுப்புரம் அருகே பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், மேல்அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் சிவராமன், 18-ந் தேதியன்று காலை (நேற்று) செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் கட்டுமானப்பணிக்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிர் இழந்தார்.



    இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். இந்த துயரச்சம்பவத்தில் உயிர் இழந்த மாணவன் சிவராமனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிவராமனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    பனையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள கொட்டங்காட்டை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருக்கு சொந்தமான பனை மரங்கள் தீவத்தா புரம் என்ற இடத்தில் உள்ளன. இதில் இருந்து பதநீர் இறக்கி கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் குமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தை சேர்ந்த பற்குணம் (வயது68). என்பவர் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் அப்பகுதியில் குடில் அமைத்து தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று இவர் பனை ஏறிய போது எதிர் பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். காயம் அடைந்த அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பற்குணம் பரிதாபமாக இறந்தார். 

    இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×