search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Earth quake"

    பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியது. #PapuaNewGuinea #Tsunami #Earthquake
    போர்ட் மோர்ஸ்பை :

    பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. #PapuaNewGuinea #Tsunami #Earthquake 
    அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Earthquake
    போர்ட் பிளேயர் :

    வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலையில் அதிகாலை 03.57 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இதனால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

    எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. #Earthquake 
    கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் இடிந்து 11 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HaitiEarthquake
    போர்ட் ஆப் பிரின்ஸ்:

    கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி நாட்டில் வடமேற்கே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இது வடக்கு கடலோரத்தின் வடமேற்கே 12 மைல்கள் தொலைவில் 7.3 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

    தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் லேசான அளவில் நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளது.  போர்ட் டி பெய்க்ஸ், கிராஸ் மோர்னி, சான்சால்ம் மற்றும் டர்டில் தீவு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.  வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், பிளைசான்ஸ் பகுதியிலுள்ள புனித மைக்கேல் சர்ச்சும் சேதமடைந்து உள்ளது.

    இந்நிலநடுக்கத்திற்கு 11 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சிறைச்சாலைகள் இடிந்து விழுந்ததில், அங்கிருந்த கைதிகள் தப்பியோடியுள்ளனர். #Indonesiaquaketsunami
    ஜகர்த்தா:

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளியன்று 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமியும் தாக்கியது.

    இயற்கையின் இந்த சீற்றத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய அந்நாட்டு அரசு தீவிரமாக போராடி வருகிறது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தின்போது சுற்றுச்சுவர் இடிந்ததால் பலு மற்றும் டோங்கலா சிறைகளில் இருந்து ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர். நிலநடுக்கம், சிறை வளாகத்தில் புகுந்த நீர் ஆகியவற்றால் உயிர் பயத்தாலும், தங்கள் குடும்பத்தினரின் நிலை அறியவும் குற்றவாளிகள் தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. #Indonesiaquaketsunami
    இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக ஐ.நா கணித்துள்ளது. #Indonesiaquaketsunami
    வாஷிங்டன்:

    இந்தோனேசியாவில் சமீபத்தில் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தோன்றியது. இந்த நிலநடுக்கத்தினால் பல்வேறு கட்டிடங்கள் சிதைந்து, மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அன்று மாலையே சுனாமியும் அந்த நாட்டை தாக்கியது.



    இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ஐ.நா சபை, இந்தோனேசியாவில் 1 லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. #Indonesiaquaketsunami
    இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது. #Indonesiaquaketsunami
    ஜகர்த்தா :

    இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.

    இதனிடையே நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியது. இதனால் அந்நகரமே மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது.



    இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் பலர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புகள் அதிகள் இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. #Indonesiaquaketsunami
    ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ மாகாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 35 ஆக உயர்ந்துள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டில் கடந்த 4-ந் தேதி ‘ஜெபி’ புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
     
    பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரெயில் சேவைகள் ரத்தாகி போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

    புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ம் தேதி அதிகாலை  3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.



    மலைப்பகுதிகள் சூழ்ந்த கிராமப்பகுதியான அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

    தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

    நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக தன்னார்வலர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் இரவு-பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக புல்டோஸர் வாகனங்கள், மோப்ப நாய்கள் மற்றும் 75 ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் 15 பேர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் பலர் அட்சுமா கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. #Japanquake  #Hokkaidoquake
    சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் கூடினர். #SalemEarthQuake
    சேலம்:

    சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    காலை சுமார் 7.45 மணி அளவில் சேலம் நான்கு ரோடு, பழைய பஸ் நிலையம், கோரிமேடு, அழகாபுரம், மாமாங்கம், ரெட்டிப்பட்டி, வின்சென்ட், அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, அரிசிப்பாளையம், புதிய பஸ் நிலையம், ஜங்சன், இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

    வீடுகள், கட்டிடங்கள் லேசாக ஆடின. சில வினாடிகள் நீடித்த இந்த பூமி அதிர்ச்சியால் கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென வீடுகள் குலுங்கியதால் எழுந்து வெளியே ஓடி வந்தனர்.

    மாடியில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தெருவில் கூடினர். நிலநடுக்கம் ஏற்பட்டதும் சாலையில் சென்றவர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்கள்.

    கருப்பூர் பகுதியில் நில அதிர்வு தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. அந்த பகுதியில் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டது.

    தாரமங்கலம் மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நில அதிர்வை உணர முடிந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான பூலவாண்டியூர், மல்லிகுந்தம், கூணான்டியூர், பள்ளிப்பட்டி மற்றும் மேச்சேரி ஒன்றியம் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே சரிந்து விழுந்தது. பொதுமக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    தாரமங்கலம் 17-வது வார்டு ஆசிரியர் காலனி பகுதியில் 7.50 மணிக்கு சில வினாடிகள் நிலநடுக்கம் நீடித்ததாகவும், வீட்டில் இருந்த சாமான்கள் உருண்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து விசைத்தறி தொழிலாளி ஈஸ்வரி கூறுகையில், ‘‘தரைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் தெரிந்தது. எல்லோரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம். அடுத்த சில நிமிடத்தில் இந்த நில நடுக்கம் அடங்கி விட்டது’’ என்றார்.

    இந்த பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவி ராகவி அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. உறவினர்கள் அவருக்கு பயப்படாதே என ஆறுதல் படுத்தினார்கள்.


    ஓமலூர் பகுதியில் காலை 7.48 மணிக்கு திடீர் என்று பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 வினாடிகள் பூமி அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீட்டில் பாத்திரங்கள் கீழே விழுந்தன. சிக்கனம்பட்டி, ரெட்டிப்பட்டி, புளியம்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு 2 வினாடிகள் முதல் 4 வினாடிகள் வரை நீடித்தது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், மேட்டூர் அணையில் நீர் நிரம்பி இருக்கும் சமயங்களில் இது போல் நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம். ஆகவே மாவட்ட நிர்வாகம் பூமியில் ஏற்பட்ட இந்த புவியியல் மாற்றத்தை கண்டுபிடித்து பொதுமக்களின் அச்சத்தை தீர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    ஏற்காட்டில் இன்று காலை 7.47 மணி அளவில் திடீர் என பஸ் நிலையம், வாங்கிள் பேட்டை, ஜெரீனாகாடு, தலைச்சோலை, செங்காடு, தாசம்பாடி, பட்டிப்பாடி, முளுவி, நாகலூர், செம்மாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

    அதன்பிறகு மீண்டும் காலை 8.26 மணிக்கு பட்டிப்பாடி, முளுவி, நாகலூர், செம்மாநத்தம் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து 2 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதிமக்கள் பீதி அடைந்தனர்.

    இதேபோல் தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. நாமக்கல், கீரம்பூர் சுங்கச் சாவடி அருகே உள்ள குஞ்சாம்பாளையம் கிராமத்தில் நாகப்பன் மற்றும் அவரது உறவினர்கள் தோட்டத்தில் உள்ள பந்தலில் அமர்ந்து செய்தித்தாள் படித்து கொண்டிருந்தனர். அப்போது பந்தல் 2 நிமிடங்கள் ஆடியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஏரியூர், நெருப்பூர், நாக மரை, பெரும்பாலை, சின்னம்பள்ளி, பழையூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கம்பைநல்லூர், நல்லம் பள்ளி பகுதியிலும் இன்று காலை 7.45 மணியளவில் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது.

    அப்போது வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உருண்டன. இதனால் பயந்துபோன அந்த பகுதி மக்கள் தங்களது குழந்தைகளுடன் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

    கம்பைநல்லூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தூங்கி கொண்டிருந்த மாணவர்கள் நில அதிர்வு ஏற்பட்டதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்தனர். இதனால் பயந்து போன மாணவர்கள் அறையை விட்டு வெளியேறினர்.

    நில அதிர்வு குறித்து ஏரியூரை சேர்ந்த முருகேசன் கூறியதாவது:-

    இன்று காலை நான் எனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று லாரி ஒன்று நிலத்திற்குள் செல்வது போல் பயங்கரமான சத்தம் கேட்டது. வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. இதனால் பயந்துபோன நாங்கள் எங்களது குழந்தைகளை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டூரையொட்டியுள்ள ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதிகளான பெரும்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, அம்மா பேட்டை, கொமராயனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 7.30 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    உடனடியாக அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பொது மக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் வீடுகளில் பூமிக்குள் ஒருவித சத்தம் வந்ததாக பேசிக்கொண்டனர்.

    உலகத்தில் எங்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தை பதிவு செய்யும் சீஸ்மோகிராபி கருவி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வானிலை ஆய்வு மையத்தில் உள்ளது.

    இந்த சீஸ்மோகிராபி கருவி கடந்த ஒரு மாத காலமாக பழுதாகி உள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் பதிவான நிலநடுக்கம் எவ்வளவு என்பதை கணிக்க முடியவில்லை.

    நில அதிர்வு தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் இன்று ஓமலூர், காடையாம்பட்டி, சேலம் உள்ளிட்ட வட்டங்களில் 7.47 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    பொதுமக்கள் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-யை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SalemEarthQuake
    ×