search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr Sivanthi aditanar college of engineering"

    • திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் நடந்தது.
    • தமிழகம் முழுவதிலும் இருந்து 72-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 'சாக்கோசியம்-2023' என்ற தலைப்பில் 21-வது தேசிய அளவிலான தொழில்நுட்ப பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கட்டிட துறை பேராசிரியர் தனகர் வரவேற்று பேசினார்.

    நெல்லை அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சித்தார்த்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், ''மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த தமிழ்நாடு ஸ்டார்ட் அப், இன்னோவேஷன் மிஷன், நான் முதல்வன் போன்ற பல திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவர்கள் தங்களது புதுமையான யோசனைகள், கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்த வேண்டும். ஊக்கமுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்'' என்றார்.

    தமிழகம் முழுவதிலும் இருந்து 72-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,500, 2-வது பரிசாக ரூ.1,500, 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. நெல்லை அரசு பொறியியல் கல்லூரி கணினித்துறை பேராசிரியர் துளசிமணி, மின் மின்னணு துறை பேராசிரியர் தங்கராஜ், எந்திரவியல் துறை பேராசிரியர் ஆனந்தகுமார், மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி பேராசிரியர் கிரேசியா நிர்மலா ராணி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் நாராயணன் பிரசாந்த் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

    ஆதித்தனார் கல்வி அறநிலைய செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார். பயிலரங்கத்தின் ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நினைவு மலரை நெல்லை அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் சித்தார்த்தன் வெளியிட, அதனை ஆதித்தனார் கல்வி அறநிலைய செயலாளர் நாராயணராஜன் பெற்று கொண்டார். தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் சித்ராதேவி நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 6-வது மாநில அளவிலான மனிதவள நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • புதுச்சேரி சுயர்சாப்ட் சிஸ்டம்ஸ் நிறுவன துணை பொதுமேலாளர் கீதாஞ்சலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 6-வது மாநில அளவிலான மனிதவள நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமை தாங்கினார். கலலூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார். புதுச்சேரி சுயர்சாப்ட் சிஸ்டம்ஸ் நிறுவன துணை பொதுமேலாளர் கீதாஞ்சலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், ''மாணவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றும் வகையில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காகத்தான் கல்லூரியையும், பன்னாட்டு நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் மனிதவள நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்கள் தங்களது தனிப்பட்ட திறன்களான தொடர்புத்திறன், நேர மேலாண்மை, அமைப்பு திறன்களோடு தொழில்நுட்ப திறன்களையும் மேம்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.

    நெல்லை பெர்பெக்ட் சர்வேயர் நிறுவன நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் சிவில் என்ஜினீயரிங் ஆய்வின் முக்கிய நோக்கம் குறித்தும், ஈரோடு எஸ்.எஸ்.நடராஜன் அன்கோ நிர்வாக பங்குதாரர் ஜெயக்குமார் கட்டிட பொறியாளரின் வேலைவாய்ப்பு திறன் பற்றியும் விளக்கி கூறினர். சென்னை டெக்கியான் கார்ப்பரேஷன் பொறியியல் மேலாளர் பாலசுப்பிரமணியன் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப பயன்பாடு குறித்தும், நெல்லை டுசோ டெக்னாலஜி மூத்த நிர்வாகி நீலபிரதீப் சி.ஆர்.எம். டெக்னாலஜி மென்பொருள் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.

    பெங்களூரு மிஸ்ட்டிரால் சொல்யூசன்ஸ் முத்துகோமதி அனலாக், டிஜிட்டல் சுற்று வடிவமைப்புகள் பற்றியும், தூத்துக்குடி ஸ்பிக் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் சிவகுமார் மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனர்.

    இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் மனிதவளத்துறை தலைமை நிர்வாகிகள் பங்கேற்று மாணவ-மாணவிகளின் துறைசார்ந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் பொன்னுகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார்.
    • தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையின் ஐ.இ.(ஐ), ஸ்கேன் ஆகிய துறை சார்ந்த கழகங்களின் சார்பில், 'ஜாவா மென்பொருளை பயன்படுத்தி எந்திரவழி கற்றல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். இணை பேராசிரியர் கேசவராஜா வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களின் செயல்திட்ட பணி, அதன் முக்கியத்துவம் மற்றும் எந்திரவழி கற்றல், அதனால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி இனிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கேசவராஜா, பவானி மற்றும் கணினிதுறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டானிக்ஸ் என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நடந்தது
    • பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு எண் 61401 மற்றும் மின்னணுவியல் தொடர்பியல் துறை சார்பில், ஐ.இ.இ.இ. சென்னை பிரிவு நிதியுதவியுடன், 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டானிக்ஸ்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியருமான மஞ்சித் வரவேற்று பேசினார்.

    ராம்கோ பொறியியல் கல்லூரி துறைத்தலைவர் காளியப்பன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி இணை பேராசிரியர் கேசவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலில் போட்டானிக்ஸ்' என்ற தலைப்பில் பயிற்சி அளித்தனர். பேராசிரியர் பெனோ வாழ்த்தி பேசினார். முன்னதாக ஐ.இ.இ.இ. மாணவர் தலைவி கவுசியா, துணைத்தலைவி முத்து சுவேதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தனர். இப்பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    ×