search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human Resources Executives Meeting"

    • திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 6-வது மாநில அளவிலான மனிதவள நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • புதுச்சேரி சுயர்சாப்ட் சிஸ்டம்ஸ் நிறுவன துணை பொதுமேலாளர் கீதாஞ்சலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 6-வது மாநில அளவிலான மனிதவள நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமை தாங்கினார். கலலூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார். புதுச்சேரி சுயர்சாப்ட் சிஸ்டம்ஸ் நிறுவன துணை பொதுமேலாளர் கீதாஞ்சலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், ''மாணவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றும் வகையில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காகத்தான் கல்லூரியையும், பன்னாட்டு நிறுவனங்களையும் இணைக்கும் வகையில் மனிதவள நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்கள் தங்களது தனிப்பட்ட திறன்களான தொடர்புத்திறன், நேர மேலாண்மை, அமைப்பு திறன்களோடு தொழில்நுட்ப திறன்களையும் மேம்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.

    நெல்லை பெர்பெக்ட் சர்வேயர் நிறுவன நிர்வாக இயக்குனர் சொக்கலிங்கம் சிவில் என்ஜினீயரிங் ஆய்வின் முக்கிய நோக்கம் குறித்தும், ஈரோடு எஸ்.எஸ்.நடராஜன் அன்கோ நிர்வாக பங்குதாரர் ஜெயக்குமார் கட்டிட பொறியாளரின் வேலைவாய்ப்பு திறன் பற்றியும் விளக்கி கூறினர். சென்னை டெக்கியான் கார்ப்பரேஷன் பொறியியல் மேலாளர் பாலசுப்பிரமணியன் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்ப பயன்பாடு குறித்தும், நெல்லை டுசோ டெக்னாலஜி மூத்த நிர்வாகி நீலபிரதீப் சி.ஆர்.எம். டெக்னாலஜி மென்பொருள் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.

    பெங்களூரு மிஸ்ட்டிரால் சொல்யூசன்ஸ் முத்துகோமதி அனலாக், டிஜிட்டல் சுற்று வடிவமைப்புகள் பற்றியும், தூத்துக்குடி ஸ்பிக் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் சிவகுமார் மாணவர்கள் வேலைவாய்ப்பினை பெறுவது குறித்தும் எடுத்துரைத்தனர்.

    இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் மனிதவளத்துறை தலைமை நிர்வாகிகள் பங்கேற்று மாணவ-மாணவிகளின் துறைசார்ந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் பொன்னுகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×